17 அக்டோபர் 2020

ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்'..!

 “  பசித்தவனுக்கு தொடர்ந்து மீன்  பிடித்து கொடுப்பதை  விட  மீன் பிடிக்க கற்று கொடு” 

மீன் பிடிக்க கற்று கொடுத்து விட்டால் போதாது.. ..மீன் பிடிக்கும் உபகரணம்  பெற்றும் கொடுக்க வேண்டும்..! 

மீன் பிடிக்க உபகரணமும், அறிவும் போதுமா.. ? 

இல்லை! 

மீன் பிடிக்க கூடிய  சூழல் வேண்டும்..! 

மீன் கிடைக்கும் எனும் நம்பிக்கையும், பொறுமையும், விடாமுயற்சியும் வேண்டும்..! 

( ஆறு, கடல், குளம் போன்ற நீர் நிலைகள் இல்லாத இடத்தில மீன் பிடிக்க மட்டும் தெரிந்திருப்பது பயனற்று போகும்) 

எங்கள் ஈழத்தமிழ் சமூகத்தின் மீட்சிதிட்டங்களுக்கு இவ்வாறான ஒருங்கிணைந்த ஒரு முனைப்பு தேவை. 

நாம் செய்யும் உதவிகள் தற்காலிகமானதாக இல்லாமல் நீண்டகால தூர நோக்கத்தில் எங்கள் தமிழ் சமூகத்தை தெளிவும், உறுதியுடனும் மீட்சி படுத்துவதாக இருக்க வேண்டும் என்று பல வருடங்களாக திட்டமிட்டு சிறுவர் கல்வி மேம்பாடு எனும் இலக்கில் கடந்த வருடம் மட்டக்களப்பில்  சில முன்னேற்பாடுகளை எடுத்திருந்தேன். 

இவ்வருடம் இலங்கை சென்று நேரில் அனைத்தையும் ஒருங்கிணைத்து ஆரம்பிக்கும்  திட்டம் இருந்தது. எனது உடல் நிலை மற்றும் கொரோனா வைரஸ் lockdown  காரணமாக எதையும் செயல் படுத்த முடியாத நிலையில் ... இன்னும் ஒரு வருடங்களும் அதற்கு மேலும் காலத்தை விரயமாக்கி  காத்திருப்பதை விட

வடக்கு,கிழக்கு,மலையக தமிழ் மக்களின் 

கல்வி தரத்தை மேம்படுத்தும் முயற்சியில் ஐந்து வருடங்களாக ஏதிர்கால இளையோர் சமூகத்தின் கல்வியின் முக்கியத்துவம் உணர்த்தும் பணியில்  E-Kalvi Charity Inc.

அமைப்புடன் இணைந்து மட்டக்களப்பில் கிராமத்து பள்ளி ஒன்றின் (களுமுந்தன் வெளி ) இலவச கற்பித்தல் வகுப்புகளுக்கான  வருடாந்த செலவுகளை முழுமையாக பொறுப்பெடுத்து இருக்கின்றேன்.  

அங்கும்,இங்கும், எங்கும் என்று அலை பாயாமல் இனி வரும் காலங்களில் என் முழு கவனத்தையும் எங்கள் பிள்ளைகளின் கல்விக்கான பணியில்  செலுத்தி  மட்டக்களப்பில் இன்னும் பல  திட்டங்களை உருவாக்க வேண்டும். 

எமது  ஈழத்து சமூகத்தின் கல்வி மீட்சிக்காக

🔹 வகுப்பறை 

🔹 இணைய, மின்சார இணைப்பு வசதி, 

🔹 லப்டப், ப்ரொஜெக்ட்டர்கள் போன்ற முன்னேற்பாடுகளும், 

🔹 சமூக பற்றும், திறமையும் கொண்ட ஆசிரியர்கள் 

🔹 பள்ளி அதிபதின் ஒத்துழைப்பு 

புலம் பெயர்ந்து வசதி வாய்ப்போடு வாழும் நாங்கள் எமது உதவிகளை கடலில் கரைத்து விடும் பெருங்காயம் போல்  பத்தோடு பதினொன்று என்று  தொடராமல்  சிதைந்து சின்னாபின்னமாகி இருக்கும் எங்கள் பள்ளி மாணவர்களின் கல்வி    மேம்படுத்தும் சவால் மிக்க பணியில் ஒரு பள்ளியை பொறுப்பில் எடுத்து அதன் வளர்ச்சிக்கு உதவி செய்யலாமே ..? 

நீங்கள் படித்த பள்ளியின் தற்போதைய கல்வி தரம் எப்படி இருக்கின்றது? உங்கள், எங்கள் ஊர் பள்ளி மாணவர்கள் கல்வி தரம் மேம்பட  நீங்களும் எங்களுடன் இணைந்து கொள்ளலாமே ..! 



வாய்ப்பை ஏற்படுத்தி தந்தமைக்கு நன்றி  Kumaravelu Ganesan நீண்ட காலம் கிட்ட தட்ட இரண்டுக்கும் மேற்பட்ட வருடங்கள் அவதானித்து தனி மனித விருப்பு வெறுப்புக்களை கடந்து சமுகப்பணிகளை முன்னெடுத்து செல்லும் அர்ப்பணிப்பும், சமூக அக்கறையும், மனித நேயமும் கொண்ட உங்களுடன் தொடர்ந்து பயணிப்பதில் மகிழ்ச்சி ஐயா. 

சாரிட்டி அறிமுகம் தந்தமைக்கு நன்றி Yoga Valavan Thiya ஐயா. 

இப்பதிவுக்கான நோக்கம் ... விருது, விருந்து, பாராட்டு, பெருமைக்கானது அல்ல..!  இது போல் நீங்களும் ஒரு பள்ளியின் முன்னேற்றத்தில் அக்கறை கொள்வீர்கள் எனும் நம்பிக்கைக்கானது.

'அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்

ஆலயம் பதினாயிரம் நாட்டல்

பின்னருள்ள தருமங்கள் யாவும்

பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்

அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்'

நன்றி ❣️

#ஆல்ப்ஸ்தென்றல்நிஷா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!