19 டிசம்பர் 2023

யாழ்ப்பாணத்தில் பார்க்க வேண்டிய இடங்கள் Jaffna Public Library

Jaffna Public Library 

யாழ் பொது நூலகம்

தென் ஆசியாவின் பெருமைமிகு அடையாளங்களுள் ஒன்றாக, தமிழர்களின் வரலாற்றுத் தொன்மங்களின் சாட்சியங்களாக விளங்கிய பல அரிய நூல்களை தன்னகத்தே வைத்திருந்த, மிகவும் புகழ்பெற்று செயல்பட்டுக்கொண்டிருந்தது. சுமார் 97,000 அரிய நூல்களுடன் தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப் பெரிய நூலகங்களில் ஒன்றாகத் திகழ்ந்த யாழ்ப்பாண பொது நூலகம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அறிவுச் சமூகத்தால் வெகுவாகப் பயன்படுத்தப்பட்டுப் போற்றப்பட்டது; அதைவிட முக்கியமாகத் தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டு வெளியாக யாழ் நூலகம் விளங்கியது. தொல்பொருள், வரலாற்று ஆராய்ச்சிகளுக்கான தரமிகு தரவுகளின் சாட்சியமாகவும் விளங்கியது எனலாம்.
இந்நூலகம், உலகத் தமிழ் மக்களின் புலமைச் சொத்தாகக் கருதப்பட்டது. உலகில் வேறு எங்கும் கிடைக்கமுடியாத ஆவணங்கள் மற்றும் அரிதான நூல்கள் பல யாழ் பொது நூலகத்தில் சேகரித்தும் பாதுகாத்தும் வந்தனர். தமிழரின் மேன்மையை உயர்த்தி, பெரும் விரூட்சமடைந்து பல அறிஞர்களை உருவாக்கிய பெருமையும் இந்நூலகத்தையே சாரும். யாழ் பொது நூலகம் யாழ் நூலகம் vikatan
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!