உங்களுக்கெல்லாம் காக்கா நரிக்கதையில் நரியிடம் காகம் ஏமாந்த கதை தானே தெரியும்.ஆனால் எனக்கு தெரிந்த காகமோ ரெம்ப புத்திசாலிக்காகம் என்பதால் நரியார் தான் ஏமாந்தாராம்.
எப்படி?
ஒரு பாடலில்
படம் இணையத்திருந்து
வள்ளியம்மைப்பாட்டி
வடை சுட்டு விற்பாள்
பாட்டிசுட்ட வடையை
தினம் ருசித்துத்தின்னும் காகம்!
பாட்டி தந்த வடையொன்றை
தின்னச்சென்ற காகத்தை
குள்ள நரியும் கண்டது
தந்திரமொன்று செய்தது!
காக்கை அக்கா நீ பாடு
காது குளிர நான் கேட்பேன்
இனிமையான உன் குரலோசை
கேட்டு ரெம்ப நாளாச்சே!
என்றே நரியும் சொன்னதனால்
நன்றே நினைத்த காக்கையது
வடையைக்காலில் வைத்துக்கொண்டே
கா...கா வென்றே பாடியது!
ஏய்க்க நினைத்த நரியாரோ
ஏமாறித்தான் போனாராம்
புத்தியான காக்கையது
புகழுக்கெல்லாம் மயங்காதாம்!
அட...! வெவரம் தான்...@
பதிலளிநீக்குஉங்கள் கருத்திடலுக்கு நன்றிங்க தனபாலன் சார்!
நீக்குவணக்கம் சகோ,
பதிலளிநீக்குகாக்கா நரி நல்லா இருக்கு,
கேட்ட நரியும் சிரித்தவாறே
தன் தாத்தா சொன்ன சொல் நினைத்து
பாடலுடன் உங்கள் ஆடல்
சேர்ந்தால் அருமையாக இருக்குமே
கேட்ட காகம் தனை மறந்து
ஆட்டம் போட்டதே விழுந்த
வடையுடன் நரி ஓட்டம் விட்டதே,,,,,
நன்றி சகோ, சும்மா சும்மா,,,,,,
அட இப்படி கூட எழுதலாம். அடுத்த தடவை முயற்சிப்போம் ஹாஹா கருத்துக்கும் வருகைக்கும் நன்றிங்க.
நீக்குபுத்திசாலிக் காக்கா..... இது மாதிரி காக்கா தேவகோட்டை ஏரியாவுல நிறைய இருக்கு,,,,,
பதிலளிநீக்குஅடடா! அப்படியா? காகங்கள் மட்டும் தான் இருக்கின்றதோ? நரிகள் இல்லையாங்க சார்?
நீக்குஉங்கள் பின்னூட்டத்துக்கும் தொடர்ந்த உற்சாகமூட்டலுக்கும் ரெம்ப நன்றிங்க கில்லர்ஜீ சார்!
ஆமா கேக்க மறந்துட்டேனே....
பதிலளிநீக்குநாங்களெல்லாம் இந்தக் கதையோடு இன்னும் கொஞ்சம் சேர்த்துப் படித்திருக்கிறோமே...
காலில் வடையை வைத்துக் கொண்டு பாடவும் நரி யோசித்ததாம்.... ஆடிக்கொண்டே பாடச் சொன்னதாம்...
நம்ம காக்காயும் வடையை மரக்கிளையில் வைத்து விட்டு ஆடிக்கொண்டே பாடிவிட்டு வடையுடன் பறந்து போயிருச்சாம்... நரி ஏமாந்து போச்சாம்...
இதுக்கு முன்னால் ஒரு கருத்துப் போட்டிருந்தேனே... வர்லையா அக்கா..?????
நீக்குஇது இரண்டும்தான் வந்துள்ளது குமார்.
நீக்குஅப்படியா....????
நீக்குபோட்ட கருத்தை காக்கா தூக்குச்சா... நரி தூக்குச்சா...?
விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டும் அக்கா...
ஆமாமா? காக்காவே தூக்கிட்டு போயிருக்கும். நரியை பின்னால் அனுப்பி தேட சொல்லுவோம். அது சரி அப்படி என்ன தான் பின்னூட்டினீர்கள். பெரும் சப்ரைசாக இருக்கே.. இன்னொரு தடவை பின்னூட்டினால் என்னவாம்?
நீக்குபுத்திசாலி காகம்தான்! நானும் இந்த பாடலை கேள்விப்பட்டுள்ளேன்! நன்றி!
பதிலளிநீக்குஇதே பாடலா? அப்படின்னால் இதை நான் எழுதலையா?
நீக்குஹைய்ய்ய்ய்ய் ! வருகைக்கும் பின்னூட்டலுக்கும் நன்றிங்க சார்.
ஹஹ்ஹஹ் இந்தக் கதையை இப்படியும் கேட்டுள்ளோம்....வடையைக் காகம் தின்றுவிட்டு பாடியதாகவும் கேட்டுள்ளோம். நீங்கள் பாடல் வடிவில் சொல்லியது அருமை...
பதிலளிநீக்குஒ வடையை காகம் தின்னூச்சா? இன்னொரு தடவை அப்படி எழுதிரலாம்! தொடர் ஆதரவுக்கு நன்றிங்க!
நீக்குநானும் இந்தப் பாட்டைக் கேட்டிருக்கிறேன் புத்திசாலிக்காக்காதான் கடைசியில் நரி வடபோச்சே.!
பதிலளிநீக்குநீங்க எங்கே சார் கேட்டிங்க?
நீக்குவடை எங்கே போச்சு சார்! காகம் வயிற்றுக்குள் தானே தான் போச்சு!
தமிழ் வலைப்பூ அனைத்தையும் திரட்டி வாசகர்களுக்கு அளிக்கும் முயற்சியில் http://tamil-bloglist.blogspot.in/ தொடங்க பட்டுள்ளது வலைப்பூ ஆசிரியர்கள் தங்கள் வலைப்பூ இணைப்பு கொடுக்க்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்
பதிலளிநீக்குஅப்படியா? ரெம்ப நல்லது. என்ன செய்ய வேண்டும் என சொல்லுங்கள் வருகைக்கு நன்றிங்க!
நீக்குகதை கேட்டது தான் என்றாலும் மீண்டும் ஒரு முறை பாடல் வடிவில் படித்தது பிடித்தது. பாராட்டுகள்.
பதிலளிநீக்குரெம்ப நன்றிங்க ஐயா! தொடர்ந்து வாருங்கள்!
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குசரியான புத்திசாலிக் காகம்... காலில் வடையை வைத்து......
இரசிக்கவைக்கும் கதை பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-