05 ஏப்ரல் 2020

Covid 19 வீட்டுக்கு வீடு தோட்டம்! 2

வீட்டுக்கு வீடு தோட்டம்!

இலங்கை அரசின் இந்த அறிவிப்பை எத்தனை பேர் அறிந்து கொண்டார்கள்? 

உலகம் முழுவதும் கொரோனா நோய்க்கிருமித் தொற்று பரவிக்கொண்டிருக்கும் நிலையினைத் தொடர்ந்து - நாட்டில் உணவு உற்பத்தியை விரைவுபடுத்தும் திட்டத்தை அரசாங்கம் தொடங்கியுள்ளது.

"செழிப்புமிக்க வீட்டுத்தோட்டம்" எனப்படும் இந்த திட்டம் - விவசாய திணைக்களம், விவசாய அபிவிருத்தி திணைக்களம், மற்றும் மகாவலி அதிகார சபை என்பவற்றின் பங்களிப்புடன் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்காக - கீழே உள்ள இணையத் தளம்  http://saubagya.lk/
மக்களுக்கு அறிமுகப்படுத்தப்படுகின்றது.

இந்த இணையத் தளத்தின் ஊடாக - வீட்டுத் தோட்டத்திற்குத் தேவையான விதைகள், உரங்கள் மற்றும் தாவரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

அத்தோடு - வீட்டுத் தோட்டம் செய்வதற்குத் தேவையான ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ள முடியும். 

இந்த திட்டத்தின் மூலம் - பத்து இலட்சம் வீட்டுத் தோட்டங்களை உருவாக்கிவிட அரசாங்கம் விரும்புகிறது.

Srilanka அரசு 

Covid 10 வீட்டுக்கு வீடு தோட்டம்! 1

எமது நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் covid -19 (கொரோனா) நோய் தொற்றுக் காரணமாக தொடர்ந்து வரும் நாட்களில் முகம் கொடுக்க வேண்டி ஏற்படும் உணவுப் பற்றாக்குறைக்கு தீர்வாக சகலரும் வீட்டுத்தோட்டம் மேற்கொள்வது அவசியமாகிறது. அதற்கமைய 10 இலட்சம் வீட்டுத் தோட்டங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் முதற்கட்டமாக 4 இலட்சம் வீட்டுத்தோட்டங்களை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கையை ஜனாதிபதி விசேட செயலணிக்குழு மற்றும் மகாவலி விவசாயம் நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சின் பணிப்பின் பேரில் கமநல அபிவிருத்தித் திணைக்களம் தற்போது மேற்கொண்டு வருகிறது.

அதன்படி யாழ்மாவட்டத்தில் முதற்கட்டமாக 7500 வீட்டுத் தோட்டங்களை அபிவிருத்தி செய்ய யாழ்ப்பாண மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. இவ் வேலைத்திட்டத்தின் கீழ் 0.25g கத்தரி, 0.25g மிளகாய், 1.67g வெண்டி, 3g பயிற்றை (ஒவ்வொன்றிலும் 25-30 விதைகள் ) மற்றும் 3g அவரை (8-10 விதைகள் )அடங்கிய பொதி ரூபா.20 வீதம் வழங்கப்படும் .எனவே அர்வமுள்ளவர்கள் தங்களது பெயர்,முகவரி, தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் தொலைபேசி இலக்கம் ஆகிய விபரங்களை தங்களது பிரதேசத்திற்கு பொறுப்பாகவுள்ள கமநல சேவைகள் நிலையத்தின் பின்வரும் தொலைபேசி இலக்கத்திற்கு குறுஞ்செய்தி மூலமாக அனுப்பி வைத்து விதைப்பைக்கற்றுக்களை பெற்றுக் கொள்ளலாம். மேலும் இவ்விதைகளுக்கு மேலதிகமாக வேறு விதைகள் மற்றும் நாற்றுக்கள் தேவைப்படின் இயலுமானவரை அவற்றினை வழங்க கமநல சேவைகள் நிலையங்களூடாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதனை அறியத்தருகின்றேன்

தொலைபேசி இலக்கங்கள்.
1. சாவகச்சேரி - 0779231738
2. கைதடி         - 0778205566
3. நல்லூர்      - 0773446026
4. வேலணை    - 0776628336
5. புங்குடுதீவு   - 0776578125
6. தொல்புரம்    - 0777647477
7. கீரிமலை       - 0775841254
8. உடுவில்        - 0774135082
9. புத்தூர்         - 0703503909
10. உரும்பிராய் - 0779489650
11. புலோலி      - 0774004554
12. அம்பன்    - 0778075510
13. காரைநகர் - 0779055960
14. சண்டிலிப்பாய் - 0773688410
15. கரவெட்டி - 0779078020
16. மாவட்ட அலுவலகம் - 0703503900

உதவி ஆணையாளர்
கமநல அபிவிருத்தித் திணைக்களம் 
யாழ்ப்பாணம்

Covid 19 அன்புக்குரிய முதியவர்களை பாதுகாப்போம்

கொரோனா நோய்க்கிருமியின் தாக்கம் வயதான மக்களிடையேதான் அதிகமாகக் காணப்படுகின்றது.

இருந்தும் கூட இளம் வயதினர்கள் இடையேயும் இந்த நோயின் தாக்கம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் சம அளவிலேயே காணப்படுகிறன.

ஆனாலும் நோய்த்தொற்று ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அல்லது  இந்த நோயினால் ஏற்படக்கூடிய மரணத்தின் வீதம் வயதானவர்களை விட இளம் வயதினரிடையே குறைவாகக் காணப்படுகிறது.

மேலும் - இதய நோய், நீரிழிவு நோய் மற்றும் நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு COVID-19 நோய்க்கிருமித் தொற்று ஏற்பட்டால் - கடுமையான சிக்கல்  நிலைமை உருவாகும் அதிக நிகழ்தகவு உள்ளது.

எனவே- உங்கள் வயதான பெற்றோர்களுக்கும், உங்களுக்குத் தெரிந்த எந்தவொரு வயதான மளத்தவருக்கும் - அதிக எண்ணிக்கையிலான மக்கள் கூடும் பொது இடங்களுக்குச் செல்வதால் ஏற்படும் அபாயங்கள் குறித்து எப்போதும் அறிவுறுத்தவும், மேலும் அவ்வாறான இடங்களுக்கு செல்வதை முற்றிலுமாக தவிர்க்குமாறும் அவர்களுக்கு அறிவுறுத்துங்கள்.

இளமையான மற்றும் வெளிப்படையாக ஆரோக்கியமாகத் தோன்றும் நபர்கள் கூட - இந்த நோய்க்கிருமியின் காவிகளாகச் செயற்பட்டு நமது பலவீனமான பெற்றோருக்கு அல்லது அதிக ஆபத்தில் உள்ள வேறு எந்த நபருக்கும் நோயைக் கடத்திவிடக் கூடும். ஆகையால், பொது இடங்கள் அல்லது பெரிய  மக்கள் கூட்டம் காணப்படும் இடங்களுக்கு வயதானவர்கள் செல்வதை முடிந்த அளவுக்குத் தவிர்க்க எல்லா நடவடிக்கைகளையும் எடுக்கவும்.

நினைவில் கொள்ளுங்கள் -- COVID-19  தொற்றிலிருந்து எம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கு எமது கைகளைச் சுத்தமாக கழுவி வைத்திருக்க வேண்டியது மிக முக்கியமான ஒரு செயற்பாடாகும்.



Srilanka 

Covid 19 காய்ச்சல், சளி, தொண்டை வலி, இருமல் போன்ற கொரோனா நோய்க்கான அறிகுறிகள் உள்ளனவா?

உங்களுக்கு காய்ச்சல், சளி, தொண்டை வலி, இருமல் போன்ற கொரோனா நோய்க்கான அறிகுறிகள் உள்ளனவா?

இந்த அறிகுறிகள் உங்களிடம் இருப்பதால் நீங்கள் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்று அர்த்தமல்ல. ஆனால் இவை கொரோனா கிருமித் தொற்று ஏற்பட்டதற்கான அறிகுறிகளுமாகும்.

எனவே உங்கள் அன்புக்குரியவர்களைப் பாதுகாக்க பின்வரும் நடவடிக்கைகளை எடுக்கவும். இந்த நாட்டின் குடிமக்களாக இது உங்கள்  தேசியப் பொறுப்பாகும்.

மருத்துவத் தேவை தவிர வேறு எந்த நோக்கத்திற்காகவும் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம்.

வீட்டில்:

முடிந்தால் உங்களுக்காக ஒரு தனி அறையை ஒதுக்கிக் கொள்ள வேண்டும்;

உங்களுக்கும், உங்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் இடையில் குறைந்தபட்சம் ஒரு மீட்டர் தூர  இடைவெளியைப் பேண வேண்டும்;

உங்களால் முடிந்தால் தனியான கழிப்பறை / குளியலறையைப் பயன்படுத்துங்கள். அவ்வாறு இல்லாது நீங்கள்  ஒரே குளியலறையை /  கழிப்பறையைப் பயன்படுத்துவதாக இருந்தால் அவற்றின் கதவு கைப்பிடி, தண்ணீர்க் குழாய் போன்றவற்றை சவர்க்காரம் மற்றும் தண்ணீர் என்பவற்றினால் கழுவிவிடுங்கள்;

வீட்டிற்கு வரும் விருந்தினர்களை முடிந்தவரை குறைக்கவும்;

நீங்களும் வீட்டிலுள்ள மற்றவர்களும் அடிக்கடி மற்றும் முழுமையாக கைகளை கழுவ வேண்டும் (குறைந்தது 20 விநாடிகளுக்கு);

உணவுத் தட்டுகள், தேனீர் கோப்பைகள், கண்ணாடி குவழைகள், துவாய் மற்றும் படுக்கை விரிப்புக்களை மற்றவர்களுடன் பகிர வேண்டாம்;

தும்மும் போது அல்லது இருமும் போது எப்போதும் உங்கள் வாயை ஒருமுறை மட்டும் பாவிக்கக்கூடிய  தாளினால் அல்லது முழங்கையின் உட்புறத்தால் மூடிக்கொள்ளுங்கள்;

பயன்படுத்திய தாள்களை மூடி கொண்ட ஒரு குப்பைத் தொட்டியில்  இட்டு பாதுகாப்பாக அகற்றுங்கள்;

நீங்கள் பயன்படுத்திய அனைத்து முகமூடிகள் மற்றும் கையுறைகளை ஒரு மூடி கொண்ட குப்பைத் தொட்டியில் இட்டு  அப்புறப்படுத்துங்கள்;

மிக முக்கியமாக, கடந்த ஒரு மாத காலத்திற்குள் நீங்கள் வெளிநாட்டில் இருந்திருந்தால்,

அத்தோடு, கடந்த ஒரு மாத காலத்திற்குள் COVID-19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட அல்லது சந்தேகிக்கப்படும் ஒரு நபருடன் நெருக்கமாக தொடர்பு கொண்டிருந்தால், உடனடியாக உங்கள் பகுதியின் பொதுச் சுகாதார ஆய்வாளர் அல்லது சுகாதார மருத்துவ அதிகாரியிடம் தெரிவியுங்கள்.

மருத்துவ சிகிச்சை குறித்த மேலதிக ஆலோசனைகளுக்கு 1999 என்னும்  தொலைபேசிச் சேவையை அணுகுங்கள்.

சிகிச்சைக்காகப் போக்குவரத்து ஒழுங்குகளைச் செய்ய வேண்டுமெனில், 1990 என்ற தொலைபேசி இலக்கத்தில் நோயாளர் காவு வண்டிச் சேவையைத் தொடர்பு கொள்ளுங்கள்.


Srilanka