23 டிசம்பர் 2017

பக்தி


பக்தி முத்தி சக்தியே சரணமென்பார்
சித்தி பெறவே சுத்தி வந்தேனென்பார் 
முக்தியைத்தேடி புத்தியைத்தொலைப்பார்
நித்திய வாழ்வே நிரந்தரமென்பார் 
சித்தம் கலக்கிட பித்தனாயலைவார்! 
கொத்திடும் காக்கைக்குணத்தினை மறைப்பார் 
வித்தைகள் காட்டி வியக்கவும் வைப்பார் 
உத்திகள் செய்தே யெம்மை அசைப்பார்
பக்தியின்றியே பக்தன் போலலைவார் 
சித்தன் நானென்றே ஏத்தி வைப்பார் 
எத்தனுக்கெத்தன் உண்டென உணர்ந்தே
பக்தனே நீயுன் புத்தியை தீட்டு! 😍


8 கருத்துகள்:

 1. வார்த்தை கோர்வைகளை இரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 2. அருமை ,ரசித்தேன்

  பதிலளிநீக்கு
 3. மிக நன்றாக இருக்கிறது ரசித்தோம்...

  எப்படியோ இப்பதிவு மிச் ஆகிவிட்டது..

  புத்தாண்டு வாழ்த்துகள் சகோதரி/நிஷா

  பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!