26 செப்டம்பர் 2020

மீண்டும் மீண்டு வந்தேன்..1

 SP பாலசுப்ரமணியம்..! 

நம் எல்லோருக்கும் மிகப்பெரிய முன் எச்சரிக்கையை விட்டு சென்றிருக்கின்றார். 

ஒவ்வொரு அடிகளிலும் வாழ்க்கை எங்களுக்கு புதிய கற்றலை தருகின்றது. 

இவ்வருட ஆரம்ப முதல் கொரோனாவில் பல பிரபலங்களை, மருத்துவ அறிவியல் சார்ந்தோரை இழந்திருந்தாலும்..... SP  அவர்களின் மரணம் பலரை நிலைகுலைய வைத்திருக்கின்றது என்பதை தொடரும் பதிவுகள் மூலம் உணர முடிகின்றது.

கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டு ஊரையும் உலகையும் பாதுகாக்க இறைஞ்சிய மனிதரின் கடைசி புகைப்படம் என் கண் முன்..... நிழலாடுகின்றது . அவர் வயதுக்கு எத்தனை வலிகள், வேதனைகள்..😓

கிட்ட தட்ட  சம காலத்தில் நானும் என் ட்யூமர் OP க்கு பின் மூன்று வாரங்கள்  வென்டிலேற்றார் உதவியோடு தான் படுத்திருந்தேன். என் சுவாசத்தில் ஓட்சீசன் 82 / 84  என்றளவில் இரண்டு மணி நேரத்துக்கு ஒரு தடவை இரத்த அழுத்தமும் ( 120 / 170 ) முதல் வாரங்களில் 200 க்கும் மேல்... ஒன்றுக்கு நான்கு BP  கவர் மாற்றி மாட்டி ( கவர் ஊதி பெருகும்). 

( Side  Effekt இதயத்தின் அடைப்பும் நுரையீரலின் அழுத்தம் ட்ரிட்ட்மென்ட் குறித்தும்  இன்னொரு பதிவில் எழுதுகின்றேன்) 

இடது பக்க காதுக்கு பின் பக்கம் தலையில் முடியை கட் செய்து ( வழித்து )  உள்ளங்கை நீளம் மண்டையில் வெட்டி கட்டியை வெளியே எடுத்து,  காதை மீண்டும் கேட்க வைக்கும் முயற்சியாக சிறு காந்தம் போல் ஒரு கருவி உள்ளே  வைத்து பொருத்தி தையல் போட்டு இருந்தார்கள். 

அதனால் காயத்தினாலோ  உள்ளே வைத்த கருவியால் ( நெகடிவ் ) இன்ஸ்பெக்சனோ ஆக கூடாது, காய்சசல் வர கூடாது என்று இரண்டு மணி நேரத்துக்கு ஒரு தடவை ரெம்பறேச்சரும், ஒரு நாளைக்கு மூன்று தடவை இரத்தம் குத்தி எடுப்பதும், தினம் ஊசியுமாக ( ஒரு கட்டத்தில் 

ஊசியை கண்டாலே என் உடலும் கை காலும் நடுங்க ஆரம்பித்து விட்ட்து ) 

எழுதும் போது எல்லாமே இலகுவாக தோன்றுகின்றது. அனுபவிக்கும் போது அதன் கொடுமை ... தூங்க முடியாது, சாப்பிட முடியாது, குடிக்க முடியாது, ஒருவகை குமடடல் .. வாந்தி எடுக்கணும் போலிருக்கும், ஆனால் வாந்தி எடுக்க போதுமான உணவு இல்லை. அரை மயக்க நிலையில் வலி தாங்க ஆண்டிபயாடிக் மருந்துகளுமாக வாழ்க்கையே ஒரு போர்க்களம் என்று உணர்ந்த காலங்கள் அவை. ( மருத்துவ சிகிச்சை நேரம் நான் என்னை புலைப்படம் எடுக்க அனுமதிக்கவில்லை. ) 

OP க்கு முன் இருந்ததை விட அதிக தலை சுற்று. நடக்க முடியாது, சக்கர நாற்காலி, எல்லாத்துக்கும் ஒருவர் உதவி தேவையாக இருந்தது.  இதற்கிடையில்  வலுவிழக்கும் வலது பக்க கை, கால்களுக்கு ஒரேயடியாக செயல் இழந்து விடாமல் ( Strok Golden Time ) வலிக்க வலிக்க பயிற்சி.... 

புஷ் பண்ணு... நீ தானாக நடக்கணும் என்றால் முயற்சி செய் என்று நாளுக்கு நாலு தடவை வெவ்வேறு உடல் அசைக்கும் பயிற்சி. கடந்து எழுந்து நிற்கின்றேன்🏋️‍♂️

இன்னும் முழு பெலம் காலுக்கும், கைக்கும் வரவில்லை என்கின்றார் என் பிசியோ. ( I can do ) ஆனாலும் வீட்டினுள நடக்கின்றேன், சமைகின்றேன். கடந்த வாரம்  கேடடரிங் Party ( 125 + 100  + 50 ) என் கணவர் பிரபா, தங்கை கணவர் ஜீவா, டேனியல், சுதா உதவியோடு செய்தோம். தங்கை dali ,அவள்  மாமி, மகள், மகன், இன்னும் சர்ச்  நண்பர்கள் உதவுகின்றார்கள். 

மருத்துவர்கள் நீ முயன்றால் உன்னால் முடியும், கொஞ்சம் காலமெடுத்தாலும் முடியும் என்று நம்பு என்று சொன்னார்களே அன்றி எங்களால் முடியும் என்ற நம்பிக்கையை இன்று வரை தரவில்லை. 

எனது வயது, எனது உணர்வு, எனக்காக நான் சேர்த்து கொண்ட positive எனெர்ஜி, மருத்துவ,அறிவியல் அறிவும் , என் உடல் குறித்த தெளிவும் மருத்துவர்களின் கவனிப்பும் தாதிபணியாளர்களின் பொறுமை, அன்பு, அக்கறையும் , இன்னும் இந்த உலகத்துக்கு  செய்யும் கடமை நிறைவேறவில்லை எனும்  இறைவனின் சித்தமுமாக மீண்டும் வந்திருக்கின்றேன். 

எனக்கு கொரோனா இது வரை இல்லை. இனியும் என்னையும், என் உடல் நிலையையும், கொரோனாவின் விளைவுகளையும் நன்கு அறிந்து இருப்பதால் 

என்னால் இயன்ற தற்பாதுகாப்பு முயற்சிகளோடு அரசின் சட்டத்தினை  ஒழுங்காக கடைப்பிடித்து  வருகின்றேன். 

SP அவர்களின் மருத்துவமனை கடைசி புகைப்படம்  பார்க்கும் போது அவர் மருத்துவ சிகிச்சை காலங்களில் எத்தகைய வலிகள், சிரமங்களை எதிர் கொண்டிருப்பார் என என்னால் உணர முடிகின்றது. ஒரு வகையில் இத்தனைக்கு பின்னும் அவர் உடலை வதைக்காமல்  ஊசி , வலி மருந்து மாத்திரை யிலிருந்து விடுதலை எனும்  நிம்மதி தான் தோன்றுகின்றது. அவர் உடல் தான் இங்கே இல்லை. ஆனால் முன்னதை விட இனி அவர் குரல் ஓங்கி ஒலிக்கும். 

இறுதி மாதங்களில் கொரோனாவை வெல்வோம்..   என்று எமக்கு நம்பிக்கை தர பாடினார், பேசினார். 

கொரோனா...அணுவை விடவும் சிறியது

அணுகுண்டை போல் கொடியது

சத்தமில்லாமல் நுழைவது

யுத்தமில்லாமல் அழிப்பது

என்று உணர்ந்து பாடியவருக்கு அந்த அரக்கனிடமிருந்து தப்பிக்க முடியாமல் போனது . 🖤 எத்தனை போர்கள் மனிதன் கண்டான். அத்தனை போர்களிலும் அவனே வென்றான் என்று பெருமை பேசும் மனிதனுக்கு அணுவளவான வைரஸ் இடமிருந்து தற்காத்து கொள்ள முடியாமல் ..... தானே தான் அழிந்து போகின்றான் மனிதன்..! 

அவனால் இயற்கையையம் வெல்ல முடியவில்லை, அவன் உருவாக்கிய செயற்கையையும் வெல்ல தெரியவில்லை. உயிர்களை அழிக்கும் ஆயுதங்கள், போர்களில் வெல்வதை சாதனை என்று வெற்று பெருமை பேசுகின்றான். பணம், பொருள், புகழ் இருந்தென்ன பயன்..! அத்தனையும் காலுக்கு தூசாகி விடுகின்றது. 

நாளைய உலகின் நாயகமே

கரோனாவையும் கொன்று முடிப்பான்

கொள்ளை நோயை வென்று முடிப்பான்..? எனும் நம்பிக்கை தர பாடியவருக்கு தானும் இங்கே விதியாவோம் என்றுதெரிந்திருக்காது🖤. 

இந்த நம்பிக்கை நிறைவேறும தான். அதற்குள்  எத்தனை உயிர்களை பலி கொன்று முடிப்பான்....? 

அடுத்தடுத்து தொடரும்  சில விடயங்கள் மனதை பாரமாக அழுத்துகின்றன. இந்த உலகத்து மக்களுக்கு நல்லது செய்தோர், அர்ப்பணிப்பாய் வாழ்ந்தோர் வயது வேறு பாடு இன்றி விடை பெறுகின்றார்கள். பிரபலங்கள் என்பதால் அவர்கள் இழப்புக்களை மீடியாக்கள் வெளிக்கொண்டு வருகின்றன . நாங்கள் அறியாமல். நமக்கு தெரியாமல்.. மருத்துவ  வசதி இன்றி எத்தனை பேர்  பரிதவிக்கின்றார்களோ? 

உலக சுகாதார துறை மற்றும் நாடுகளின் சுகாதார அமைச்சுக்களின் அறிக்கைகளின் படி இவ்வருடம் மார்ச் மாதம் lock down  ஆரம்பிக்கப்படட போது கொரோனா வைரஸ் பரவிய வேகத்தை விட அதி வேகமாக பரவுகின்றதாம். ஆனால் பொருளாதார சரிவை சமாளிக்க முடியாத நிலையில் கொரோனாவோடு வாழும் நிர்பந்தம்  மக்களுக்கு உருவாகி இருக்கின்றன. 

அரசினால் சட்டம்  போட தான் முடியும். அது எங்கள் உயிர்களுக்கான ( வலிகளுக்கான) 

பாதுகாப்பு முயற்சி என புரிந்து கொண்டு எங்களை பாதுகாத்து கொள்வோம். கொரோனா வந்தால் மீண்டு விடுவோம் என்று நம்பிக்கை வேண்டும் என்றாலும் அந்த மீட்சிக்கு பின் விளைவுகள் உண்டு என்று உணர்ந்து கொரோனா வராத படி எச்சரிக்கையாக வாழ்வோம்.

அது தான் SP  அவர்களுக்கு நாங்கள் செய்யும் அஞ்சலியாக இருக்கும்.

🔹

இதை எழுதுவது இதை வாசிப்போர் உணரவும், விழிப்புணர்வுக்கும் தான். தமிழில் எழுதுகின்றேன், மருத்துவ அறிவியல் சொல் தெரியும் என்றெல்லாம் புரியாத சொல்களை  வெளிப்படுத்தாமல் என் பதிவை வாசிக்கும் ஆங்கிலம் தெரியாத கிராமத்தவனும் புரிந்து கொள்ள வேண்டும் என்றே பேசும் தமிழில் எழுதி இருக்கின்றேன். 

சோகம், கவலை ரியாக்ஷன் வேண்டாம் 

Take  care / take  Rest  தவிர்த்தல் நல்லது 

தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் 🙏

நன்றி : நிஷா 

26.09.2020 


#COVID19

#அறிவியல் அறிவோம்

#அனுபவம்  பகிர்வோம்.. 

https://www.facebook.com/100000786292216/posts/3269928976376613/?extid=wMDljxsin4IAZIq7&d=nஓட்சிசன் வென்டிலேற்றார் 


நடமாடும் போது கொண்டு செல்லும் ஓட்சிசன் வென்டிலேற்றார் ( உணவு உண்ணும் நேரம் தவிர மீதி நேரங்களுக்கு) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!