26 செப்டம்பர் 2020

நெல்லி காயும் சொல்லி செல்லும் ..!

 நெல்லி காயும் சொல்லி செல்லும் 

கடந்து வாழ்ந்த வாழ்வதனை 💞💖

செல்வி அன்டி வீட்டு முற்றத்தில் மார்கழி பனி இரவின் மழைக்காற்றுக்கு தானே கனிந்த நெல்லி பழங்களும், காய்களும், கெப்புகளுடன் பிஞ்சும்  தரையெங்கும் நட்ஷத்திரங்கள் போல் வீழ்ந்து பரவி கிடக்கும். தானாய் வீழ்ந்த காய் பொறுக்கியதில் தின்றது போக  மரத்தையும் ஆட்டி, பொலு பொலுவென்று விழும் போது எட்டி பிடிக்கும் கிளையதையும் உலுக்கி அணிந்திருக்கும் சட்டையை மடியாக்கி  அள்ளி சென்று பள்ளிப்பை பக்கதினுள் ஒளித்து... 

ஜாம் காய்ச்சலாம் என்பதும் தெரியாது.

இன்றறியும் விடடமின் சத்தென்றும் தெரியாது ..!

வாய்க்கு ருசி , பசிக்கு பொரி

உப்போடும், உவப்போடும் 

தின்ன தின்ன சலிக்காது... !

வாய் கூசும்.. நா புளிக்கும் ..! 


நாங்கள் வாழ்ந்தோம்..! 

ஒரு காலம் தானாய் வளர்ந்தோம்..! 🏋️‍♂️🤼‍♀️🪂🤼‍♂️ 


🌻🙏😍 அல்லி அன்ரி யின் அம்மா வீட்டு நெல்லி மரமும்  செல்வி அன்ரி வீட்டு நெல்லி மரமும் எங்கள் பசியும் தாகமும் தீர்த்தது என்றால் மிகையில்லை.

3 கருத்துகள்:

  1. ஆம் அது ஒரு கனாக்காலம் நினைத்து நினைத்து மகிழத் தக்கதாய்...

    பதிலளிநீக்கு
  2. எங்கள் வீட்டிலேயே இருந்தது இந்த வகை நெல்லி மரம். எத்தனை சாப்பிட்டு இருக்கிறோம்! அதிலும் மரத்தில் ஏறி நான் பறித்துக் கொண்டு வர, உப்பு மிளகாய் போட்டு கலக்கி, ஊறவைத்து சாப்பிட்ட அந்த ருசி.... நினைக்கும்போதெல்லாம் நாக்கில் உணர முடிகிறது!

    பதிலளிநீக்கு
  3. மிகவும் அருமை நல்ல பதிவு வாழ்த்துக்கள் பயனுள்ள தகவல் நல்ல விஷயம் மிக்க மகிழ்ச்சி நல்ல இடுக்கை நண்பர்களே இந்த பதிவை படித்து மகிழும் நீங்களும் இதுபோன்று Blog ஆரம்பித்து Google Adsense மூலமாக பணம் சம்பாதிக்க, தமிழில் Blogging முறையாக கற்றுக்கொண்டு தங்களது ப்ளோகை Google Search ல் முதலிடம் பிடிக்க Tech Helper Tamil ஐ பாருங்கள் தமிழில் பிளாக்கரை ஆரம்பிப்பது எப்படி? https://www.techhelpertamil.xyz/

    பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!