26 செப்டம்பர் 2020

மருத்துவம் படித்தால் மட்டும் தான் ...?

 எனக்கொரு டவுட்டு...? 

கொஞ்சம் clear பண்ணுங்கோ..!

கஷ்டப்படும், ஒதுக்கப்படும்  தனி நபரோ, குடும்பமோ, சமூகமோ தங்களை முன்னேற்றி கொள்ள மருத்துவம் படித்தால் மட்டும் தான் முடியும் என்ற புரிதல் தமிழர்களுக்கு எப்போது உருவானது..? 

படிப்பில் மருத்துவ படிப்பு தான் உசத்தி... அதை படித்தால் தான் குடும்பத்துக்கு விடியும்... சமூகத்துக்கு சேவை செய்ய முடியும் என்று சிறு பிள்ளை மனதினுள் புகுத்தி விரக்தியில் 

தற்கொலை செய்யும் வரை அழுத்தம் கொடுத்து எப்போதுமே போராட்டம், பதட்ட  மூவ்மெண்டில் சமூகத்தை வைத்திருக்க பாடுபடும் எத்தனை பேர் மருத்துவம் படித்தவர்கள்..? 

மருத்துவம் படித்ததனால் தன் குடும்பம், சமூகம் முன்னேற்றம் கண்டது என்பதற்கு முன்மாதிரியாக, எடுத்து காட்டும் படி படிப்பு முடிந்து கிராமங்களை நோக்கி சேவை செய்ய அல்லது சமூகம் சார்ந்த முன்னேற்றமே இலக்கு எனும்  நோக்கத்தில் பணி செய்வோர் எத்தனை பேர் என்றும் சொல்லுங்களேன்..! 


வாழ்க்கையில் முன்னேறணும் என்று நினைத்தால்  டாகடர் ஆகி ஸ்டெதற்க் கொப்  பிடித்தால் தான் முடியும் என்று இல்லை. 

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.. அவன் அறிவு பேராயுதம். ஒரு புல்லுக்கட்டு கூட போதுமாம்..! என்னமோ சொல்லணும் என்று தோணுது . அவ்வளவு தான்🤼‍♀️🤼‍♀️🤼‍♀️

2 கருத்துகள்:

  1. சொன்னது மிகச் சரி.எப்படி இப்படி ஒரு எண்ணம் தற்போது தமிழர்கள் மத்தியில் வந்தது எனத் தெரியவில்லை..ஒருவேளை தனியார் மருத்துவமனையில் அடிக்கிற கொள்ளை ஆசையைத் தூண்டி இருக்குமோ..

    பதிலளிநீக்கு
  2. சரியாகச் சொன்னீர்கள். எத்தனையோ துறைகள் இங்குண்டு. அவற்றிலும் சாதனைகள் புரியமுடியும். மனிதகுலத்திற்கு நன்மைகள் செய்ய முடியும். புரிந்து கொள்ளத்தான் இங்கே யாருக்கும் இஷ்டமில்லை.

    பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!