23 ஏப்ரல் 2020

கொரோனாவின் பின்னான தற்சார்பு வாழ்க்கை நோக்கி। - 2



தற்சார்பு வாழ்க்கை நோக்கிய வழி காடடல் -2

தற்சார்பு வாழ்க்கை நோக்கிய வழி காடடலில் தேவைக்கும் மேல் எதை உற்பத்தி செய்தாலும் அதுவும் வீண் விரயமே.

தனி மனிதர் தற்சார்பு முயற்சி வெற்றி பெற  ஒரே நேரத்தில் பல்வேறு முயற்சிகள் தேவை அதுவே சமூகம் இணைந்து முயற்சிக்கும் போது இலகுவானதாகவும், அதிக பலன் தருவதாகவும் இருக்கும்

அவரவர் தேவைக்கும் மேல் உற்பத்தி செய்வது  தவிர்க்க வேண்டும்.அனைவரும் ஒரே இலக்கில் ஒரே  பயிர்களை விதைப்பதும் தவிர்க்க வேண்டும்.

எல்லோரும் தக்காளியும். கீரையும், வெண்டியும், மரவள்ளியம் நடடால் தற்சார்பு வாழ்க்கை நிறைவு பெறுமா?

இல்ல...!

ஒரு குடும்பம் இனி வரும் நெருக்கடிக்கு தயாராக்குவதாக எடுத்து கொள்வோம்.

வீடடை சுற்றி இருக்கும் நிலத்தில் மரவள்ளி நடடால் பசிக்கு உதவும்.அதுவே தினமும் உணவாக உண்ண முடியுமா?அலுத்து, சலித்து போகுமா இல்லையா?

அப்படி எனில் என்ன தான்  செய்யணும்?

வீட்டுத்தோட்டம் செய்யும் ஒருவரிடம் கீரை, காய், பழம் இருக்கும் இது மட்டும்  தற்சார்பு வாழ்வுக்கு
போதாது.பால் முடடை அரிசி போன்ற ஏனைய பொருட்க்களை பெற்றால் தான் நிறையுணவை அவன் பெறுவான்.சோப்பு சீப்பு போன்ற ஏனைய அத்தியாவசிய பொருள்களும் வேண்டும்.அதற்கு பணம் தேவை.

எனில்.......?

தன் தேவைக்கு மேல் கிடைக்கும் உற்பத்தியை  பண்டமாற்று செய்யும் வாய்ப்பு இருந்தால் ( பணமாவோ பொருளாகவே பெற முடியும் போது தான் ) தற்சார்பு வாழ்க்கை முழுமை பெறும்!

கோழி வளர்க்கும் ஒருவர் முடடையும் இறைச்சியும் கொடுத்து அரசி பெறுவார்.
ஒரு கிராமத்தில் 5 பசுவும் மாடும் வைத்திருந்தால்  அந்த கிராமத்தில் இருக்கும் 100 குழந்தைக்கு தினமும் பால் கிடைக்கும்( அங்கர் மா இல்லை எனும் கவலை இல்லாமல் குழந்தைகள் ஆரோக்கியமாக வளரும் ) கீரை, காய், கனி, கிழங்குவகை நெல், முடடை, பால் இறைச்சி என எல்லாமே எமது தேவைக்கு ஏற்ற உற்பத்தி, தற்சார்பு வாழ்வுக்கு முக்கியம்.

அனைத்தும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்றால் குறுகிய, நீண்டகால பயன் தரும் திடடமிடல், வழி காடடல் இருக்க வேண்டும்.

கிராமங்கள் தோறும் ஒன்றில் பத்து நூறென பெருக்கும்  ஆர்வமும் நுண் திறனும் கொண்டவர்கள் இன்னமும் தமது ஆற்றலை பெளிப்படுத்தும் வாய்ப்பு இல்லாது  இருக்கின்றார்கள்.உங்கள் ஊரிலே  இவ்வாறானவர்களை தேர்ந்தெடுத்து ஒருங்கிணைப்பதன் மூலம் நிறைந்த பயனை பெறலாம்.

இக்காலத்தில் நிவாரணம் வழங்கும் பலர் தம் சுற்று வடடாரம்  கடந்து 20 - 30  கிமி பயணிப்பதை விட அவர்களின் ஒட்டு மொத்தமனித ஆற்றலை  தாம் வாழும் பிரதேசத்தை தற்சார்பு வாழ்க்கை நோக்கிய இலக்கில் செலுத்தி மாதிரி கிராமங்களை உருவாக்குவார்கள் என்றால்  அவர்களை பின் தொடர்ந்து பலர் தம்மை தாமே
உணர்ந்து.உருவாக்கி கொள்வார்கள்..! உரமாகுவார்கள். கிராமங்கள் செழித்து உயிர்க்கும் போது நகரங்கள் பிழைக்கும்!

நினைவில் கொள்ளுங்கள்....!
தற்சார்பு வாழ்க்கை என்பது பறப்பதற்கு வழி காடடாது!
உயிர் பிழைப்பதற்கு நிச்சயம் வழி காட்டும்!
( பிழைத்த பின் பறக்கவும் வலிமை தரும் 😀)

பணப்புழக்கம் குறைந்தாலும் பண்டமாற்று தொடர்ந்து நடந்தால் தான் தற்சார்பு வாழ்க்கை வெற்றி பெறும் என்பதனால் மக்களுக்கு இதை உணர்த்தி உண்மையில் ஆர்வம் காட்டுவோர், சமூகம், எதிர்காலம் என சிந்திப்போர்  விடாமுயற்சியும், ஆர்வமும் இருப்போரை இணைத்து கொள்ளுங்கள்.

கிராமங்கள் தோறும் ஆற்றலும்,ஆர்வமும் உள்ளவர்களை இணைந்து சமூக குழுக்களையும் மற்றும் Facebook, what's app குழுக்களையும் உருவாக்குங்கள்।
இந்த அமைப்புகள் மூலமாகவே விதைகளையும், விளைபொருள்களையும் பண்டமாற்று செய்யும் வாய்ப்புகளை உருவாக்கி கொள்ளுங்கள்

1. வீட்டு தோட்டம்
***************
1️⃣ சோளம் விதைக்கையில… சொல்லிப்புட்டு விதை’னு சொல்வாங்க!

எதை எதை எப்போது எங்கே எவ்வாறு விதைத்தால் பலன் அதிகம் என தகுந்த ஆலோசனைகளை பெற்று நிலத்தில் அன்றாட தேவையான  காய்கறி, கீரைவகை, சிறியவகை மரங்களான எலுமிச்சை, கொய்யா, மாதுளை,கறிவேப்பிலை,வாழை, மா, பப்பாசி,போன்றவையும் நட ஊக்கப்படுத்துங்கள்

அதே போல் ஒரே நேரம் அனைத்து விதையும் நடாமல் விதைக்கும் காலம், அறுவடை காலங்கள், கணக்கிட்டு தேவையான அளவு  வருடம் முழுதும் பயன் தருவது போல் கால இடைவெளி வீட்டு நட வேண்டும்.

ஒரு கிராமத்தில்  100  குடும்பம் இருக்கும் எனில் எல்லோரும் சம காலத்தில் கீரை, தக்காளி,வெண்டி பயிரிடுதல் தவறானது. எல்லோரும் மரவள்ளி நடுகை செய்வதும் பயனின்றி போகும். எல்லோர் வீட்டு தோட்டமும் ஒரே நேரம்  கீரை, தக்காளி  விளையும் எனில் என்ன நடக்கும் என  யோசித்து பாருங்கள். சலித்து போகும்
எங்கள் ஆற்றல் விரயமாகி போகும்.

✅ இன்னார் இதை என நெறிப்படுத்தி காலத்தை பயனுடையதாக்க வேண்டும்

அதனால் தோட்டம்  போடும் முன் காலத்துக்கு தக்க ஊடு பயிர், பல பயிர், இரடடைபயிர் குறித்தும் தெளிவாக அறிந்து
நீர்ப்பாசன வசதி  குறித்தும் முன் கூட்டி திடடமிட்டு கொள்ளுங்கள்.

நாலு தக்காளி கண்டு என்றாலும்
நீர் வேண்டும்.கீரை பாத்தி நீரினுள் வேண்டும்

2️⃣ மரவள்ளி, உருளைக்கிழங்கு போன்றவைகளும்  ஊருக்குள் இருக்கும் விளை நிலங்களில் நட ஆற்றல் உள்ளோரை ஊக்கப்படுத்துங்கள்.

3️⃣ பாரம்பரிய நெல்ரகங்கள் அல்லது தானியவகைகளை வளருங்கள்.

🙏  வீட்டுதோட்டம் உங்களது எதிர்காலத்தை பாதுகாத்துக் கொள்ள இருக்கும் ஒரே வாய்ப்பு என்பதால் செயற்கை உரங்களை தவிர்த்து கிராம மற்றும் ஊர் பாரம்பரியங்களை பின்பற்றுங்கள்.



2. விவசாயத்திற்கு தேவையான நாட்டுமாடு, பால் தரும் பசுமாடு  ( ஜெரசி வேண்டாம் ) ஆடு, கோழி போன்ற கால்நடைகளை வளருங்கள் இதன் கழிவுகளை விவசாயத்திற்கு பயன்படுததுவதன் மூலம்
✅ இயற்கை உரம் கிடைக்கும்.
ஆரோக்கியம் மேம்படும்.

✅ முடடை, பால்,இறைச்சி போன்ற தேவைகளும் நிறைவாகும்

உங்களுக்கு தேவையானவற்றை போக மற்ற விளைபொருள்களை விற்று பொருள் ஈட்டிக் கொள்ளுங்கள்।.

 4. மழை நீர் சேமிப்பு தற்சார்பு வாழ்வுக்கு  அத்தியாவசியமானது.

5. தற்சார்பு வாழ்க்கை நோக்கிய திடடமிடலில் மிக முக்கியமானது மின்சாரம்
இலங்கை போன்ற வெப்பப்பிரதேசங்கள்  சூரிய சக்தியில் மின்சாரம் பெறும் வழிகளை குறித்தும் ஆராய்ந்து செயல் படுத்துவீர்கள் என்றால் தற்சார்பில் முழுமையடைந்த வெற்றி பெற்ற மாதிரி கிராமம் ஒன்றை உருவாக்கி இருப்பீர்கள்

☀️ புலம் பெயர்ந்து வாழும் எங்கள்உதவி  என்பது அவரவர் சொந்த கிராமத்தை இவ்வாறான மாதிரி கிராமங்களாக மாற்றும் இலக்கில் இருக்க வேண்டும்.

☀️  இங்கே எழுதும்  ஆர்வமிருக்கும் சிலர் இணைந்து இவ்வாறான கிராமம் ஒன்றை  முன் மாதிரியாக உருவாக்கி வழி காடட வேண்டும்.

🙋🏻‍♀️ மாதிரி தற்சார்பு கிராமம் ஒன்றை உருவாக்கும் முயற்சிக்கு என்னால் முடிந்த வரை  உதவ நான் தயாராக இருக்கின்றேன்

ஏந்திப்பிழைக்க அல்ல ,
எழுந்து நிமிர்ந்து ஜெயிக்க வழி காட்டுவோம்

இந்த ஆலோசனை கிராமங்களுக்கானது
என்பதனால் எப்போதும் போல் வியாபார ரீதியில் தோட்டம்  செய்யும்  விவசாயிகளை பாதிக்காது இருக்க அவர்கள் விளைச்சல்கள் நிலம் இல்லாத நகர வாசிகளுக்கும்
வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி
செய்ய, மதிப்பு கூட்டி விற்கும் வாய்ப்புக்கள் குறித்தும் ஆலோசித்து செயல் படுத்த வேண்டும்.

Nisha 🙏
https://www.facebook.com/100000786292216/posts/2839779066058275/?d=n

கொரோனாவின் பின்னான தற்சார்பு வாழ்க்கை நோக்கி। - 1




இனி வரும் காலத்தில் உணவு தட்டுப்பாட்டைசமாளிக்க தற்சார்பு வாழ்க்கை க்கு தயாராக்குங்கோ

வீட்டு தோட்டம் போடுங்கோ கீரை பாத்தி கட்டுங்கோ என்றதும்

பலர் உணர்ந்து தோட்டம் குறித்த அவசியம் புரிந்திருப்பது தெரியுது.

இன்று 20 மேற்பட்ட  நண்பர்கள் தோடடம் குறித்து பகிர்ந்ததை அவதானிக்க முடிந்தது .

பத்து நூறாகி, நூறு ஆயிரமாகி இலடசங்களாகும் போது இல்டசியம் வெல்லும்.  ஒரு எழுத்து ஓராயிரம் மாற்றம் உருவாக்கும்.

ஒருவரின் மாற்றம் அவர் சார்ந்த சமூகத்தை உயர்த்தும்.

நாங்களும் சுவிஸில் தோடடம் போட்டிருக்கோம்

ஆனால் எல்லோரும் ஒரே போல் வீடடுக்கொரு தோடடம் ஒரே மாதிரி  போட்டால் இதையே தொழிலாக செய்வோர் நிலை என்ன?

இதை குறித்தும் கொஞ்சம் சிந்திக்கணும்

நெருக்கடி நிலை இன்னும் முடியல்ல

விவசாயிகளும்  தோட்டம்  செய்வோரும் என்றும் எமக்கு முக்கியம்

அப்படியே
கோழி வளர்ப்பு
ஆடு, மாடு வளர்ப்பு
தையல்
இட்லி, தோசை, வடை, இடியப்பம் சம்பல்
மசாலா பொருட்க்கள் அரைத்து கொடுப்பது
ஊறுகாய், சட்னி வகை என அவரவர் வசதிக்கு ஏற்ற படி மிக குறைந்த முதலீட்டில் ஆரம்பித்து அதை தொடர்ந்து செய்யும் படி உற்சாகம் கொடுங்கோ

2009 - 2020  இப்படி இன்னாருக்கு  வாங்கி கொடுத்தோம் எனும் பதிவே இலங்கை சனத்தொகையை தாண்டி கொண்டிருக்கு போல
அதை விடுவோம்

தற்சார்பு வாழ்க்கையில்
பண்டமாற்றுக்கும் முக்கிய பாகம் உண்டு

காசில்லை எண்டால் என்ன ?
நீ முடடை கொடு,
நான் கத்தரிக்காய் கொடுக்கின்றேன் என கூட மாத்தி கொள்ளலாம்.

ஒவ்வொரு கிராமம் தோறும் அந்தந்த  மக்கள் தமது பொது பிரச்சனைகளை இப்படி சமூகவலை தளம் ஊடாக வெளிக்கொண்டு வருவீர்கள் எனும் அதுவும் அரசின் மேல் மடட கவனத்துக்கு போகும் வாய்ப்பு இருக்குது

வெற்று பொழுதை வெற்றி பொழுதாக்குவதும் நம்  கைகளில் தான்

வாழ்க்கை வாழ்வதுக்கே

Photos thanks geogle

தற்சார்பு வாழ்க்கை நோக்கிய வழி காடடல் -1
Nisha


19 ஏப்ரல் 2020

Swiss Matterhorn மலை உச்சியில் ஒளிர்ந்த இந்திய தேசியக்கொடி 🇮🇳

சுவிட்சர்லாந்தின் சின்னமான மூவாயிரம் மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள Matterhorn முக்கோண வடிவ மலை பாறை உலக மக்களின் நம்பிக்கை மற்றும் ஒற்றுமையின்  அவசியத்தை உணர்த்தும் நோக்கதில்  ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நாட்டின் தேசியக்கொடியோடு  ஒளிர்கின்றது.

இரவு 9:30 மணி முதல் நள்ளிரவு வரையிலும், அதிகாலை 2:00 மணி முதல் அதிகாலை 4:00 மணி வரையிலும் மலை மின் விளக்குகளால் ஒளிரும் படியான  ஒழுங்குகள்.  செய்யப்பட்டிருக்கின்றன 

ஒளி என்பது நம்பிக்கை! 
இந்த அர்த்தத்தில், கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் பரவும் இந்த கடினமான நேரத்தில் மக்களுக்கு நம்பிக்கை மற்றும் ஒற்றுமையின் அடையாளத்தை கொடுக்க Zermatt கிராமத்து மக்கள் விரும்புகின்றார்கள்.

Zermatt Tourismus ஏற்பாட்டில் உலக நாடுகளின் தேசியக்கொடியோடு Swiss மாநிலங்களின் கொடிகளும் ஒளிர வைக்கப்படுகின்றன.

India 🇮🇳:
உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா கொரோனா tநெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளது. 

இவ்வளவு பெரிய நாட்டில்நோய் பரவலை தடுக்கும் சவால்கள்  மிகப்பெரியவை! 

நாம் நமது ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டும் மற்றும் அனைத்து இந்தியர்களுக்கும் நம்பிக்கையையும் பலத்தையும் கொடுக்க வேண்டும். எனும் நோக்கத்தோடு  18.04.2020 விடிகாலை  3.30 மணிக்கு தேசியக்கொடி மின் விளக்குகளால் ஒளிர்ந்தது.






24.03.2020 ஆரம்பித்து இது வரை மலை மேல் உதிக்கும் ஒளி உணர்த்தியவை 

24.03.2020 : ஒளி என்பது நம்பிக்கை!
25.03.2020 : ஒற்றுமை
26.03.2020 : stayhome, நேசிப்பு 
28.03.2020 : Italy 
31.03.2020 : அனைவருக்கும் 
01.04.2020 : Kanton Tessin
02.04.2020 : ஆதரவு
03.04.2020 : stayhome
05.04.2020 : Portugal
06.04.2020 : நம்பிக்கை
07.04.2020 : Kantone Genf und Waadt
08.04.2020 : இப்போது கனவு காணுங்கள் - பின்னர் பயணம் செய்யுங்கள்
09.04.2020 : France , Spain 
10.04.2020 : ஐக்கிய இராச்சியம்
11.04.2020 : Easter 
12.04.2020 : மெழுகுவர்த்தி
13.04.2020 : AllOfUs
14.04.2020 : Germany
15.04.2020 : Japan 
16.04.2020 : Kanton Zurich , USA 
17.04.2020 :  GCC-Staaten
18.04.2020 : India . Kantone Bern und Wallis
19.04 . 2020 : China 

இது நம் அனைவருக்கும் ஒரே மாதிரியானது: நம் வாழ்க்கை முன்பைப் போல இல்லை. ஆனால் ஒன்றாக நாம் வைரஸைப் பிடித்து மீறுகிறோம். நாங்கள், இந்த உலக மக்கள். அன்றாட வாழ்க்கைக்கு திரும்புவதற்கான வழியை பலப்படுத்துவோம்.
Nisha 🙏

Zermatt Tourismus
Bahnhofplatz 5
3920 Zermatt
Telefon: +41 27 966 81 00
info@zermatt.ch


Beleuchtung 18. April 2020: Indien


15 ஏப்ரல் 2020

Covid 19 சீனாவின் தகவலும் உறுதியற்றவை

சீனாவின் வெளியுறவு உளவுத்துறை அதிகாரிகளும் நாட்டின் அரசாங்கமும் கொரோனா வைரஸின் பரவலைக் குறைத்துவிட்டது என்றும், அங்கு தொற்றுநோயால் ஏற்பட்டுள்ள சேதத்தை குறைத்து மதிப்பிட்டுள்ளது என்றும்தி  நியூயார்க் டைம்ஸ் ஏப்ரல் 2020 ஆரம்பத்தில் அறிக்கை செய்தது:

சீனா கொரோனா வைரஸ் வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான முன்கணிப்பு மாதிரிகளை அமெரிக்கா தொகுத்து வருவதால்  சீனா தொற்றுநோய்களைக் குறைத்து மதிப்பிட்டுள்ளது என்றும், அதன் எண்ணிக்கையை நம்ப முடியாது என்றும் பிப்ரவரி தொடக்கத்தில் இருந்தே சிஐஏ உளவுத்துறை அதிகாரிகள் வெள்ளை மாளிகைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்

அமெரிக்க அரசாங்க புலனாய்வு அமைப்புகள் சீன அரசாங்கமே வைரஸின் அளவை அறியவில்லை என்றும் உலகின் பிற பகுதிகளைப் போலவே  சீனாவின் தகவலும் உறுதியற்றவை என்றும் முடிவு செய்துள்ளன

வைரஸ் தோன்றிய வுஹான் நகரத்திலும், சீனாவின் பிற இடங்களிலும் உள்ள மிட்லெவல் அதிகாரத்துவத்தினர் நோய்த்தொற்று வீதங்கள், சோதனை மற்றும் இறப்பு எண்ணிக்கைகள் குறித்தும் பொய்  கூறி வருகின்றனர், 

அதிகாரத்துவ தவறான அறிக்கை எந்தவொரு அரசாங்கத்திற்கும் ஒரு நாள்பட்ட பிரச்சினையாகும், ஆனால் சீனாவில் இது மோசமாகிவிட்டது, ஏனெனில் கம்யூனிஸ்ட் தலைமை திரு ஷியின் கீழ் சமீபத்திய ஆண்டுகளில் அதிக சர்வாதிகார அதிகாரத்தை எடுத்துள்ளது

லிங்க் இணைப்பு : 
எல்லாம் உண்மையா என்று எனக்கு தெரியாது 

ஆனால் உண்மையாக இருக்க கூடாது என்பதுடன், நடப்பு நிலை அவதானிக்கும் போது உலகத்தால் சாத்தியப்படாத ஒன்று சீனாவால் எப்படி சாத்தியமானது எனும் கேள்வி உதிக்கின்றது

சிந்திப்போம் 






▪️

நிருபர்: சீனா அதிபரோடு உரையாடினார்கள் தானே? எப்படி இருந்தது? 

Drumb : நல்லா இருந்தது 
நமக்கு உதவுவதா சொல்லி மருந்து data  எல்லாம் அனுப்புறேன் என்றார் 

நிருபர்: அவர்கள் அனுப்பும் data பத்தி? 

Drumb  : முழுதா நம்ப முடியாது 
நிரம்ப மறைத்து இருப்பார்கள் 

இதுவும் அந்த இந்திய பிரதமரின் ( மிரடடல்😳?? )  எதிர்வினை என்ன எனும் கேள்விகள்வந்த பிரஸ் மீட் தான்

😳😳

எனக்கும் சீனாவுக்கும் போன ஜென்மத்தில் வாய்க்கால், வரம்பு சண்டை பாக்கி இருப்பதால் சீனா குறித்த ஒரு பக்கம் சார்ந்தே பார்க்கும் ஒற்றை கண் பார்வையில் கிடைத்த சேதி இவைகள் 

இது தான் முடிவென எடுத்து கொண்டு அதற்க்கான ஆதாரங்களை உருவாக்கினேன் என சொன்னாலும் 

உண்மை என நினைப்பதை கேள்விக்குள்ளாக்கி உண்மையான உண்மையை வெளிக்கொண்டு வருகின்றது  corona  வைரஸ்.

என்ன தான் நடக்க போகின்றது என பொறுத்திருந்து பார்க்கலாம்