09 நவம்பர் 2020

COVID 19 தடுப்பூசி தயார்




SARS-CoV-2  

BioNTech மற்றும் Pfizer இணைந்து உருவாக்கிய தடுப்பூசி....! 

3 கட்ட  சோதனைகளுக்கு பின்  கோவிட் -19  நோய்த்தொற்றுகளைத் தடுப்பதில் 90% பயனுள்ளதாக இருக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க நிறுவனமான  Pfizer மற்றும் ஜெர்மன் நிறுவனமான BioNTech அறிவித்திருக்கின்றது.

இந்த அறிவிப்பின் பின் Pfizer பங்கு 6% அதிகரித்து, BioNTech's க்கின் அமெரிக்க பங்குகள் 18% உயர்ந்துள்ளதால், ஐரோப்பிய பங்குச் சந்தைகள் தடுப்பூசி அறிவிப்பு செய்திகளுக்கு சாதகமாக பதிலளித்தன.

அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ Biden தடுப்பூசி சோதனைகளின் நம்பிக்கைக்குரிய முடிவுகளை வரவேற்றார், 

ஆனால் தடுப்பூசி பரவலாக இன்னும் சில மாதங்கள் உள்ளது என்று எச்சரித்தார். அதுவரை முகமூடிகள் மற்றும் சமூக இடைவெளியை  தொடர வேண்டும் என்றும் அவர் அமெரிக்க மக்களை Biden வலியுறுத்தினார்.

"இன்றைய செய்தி ஒரு சிறந்த செய்தி, ஆனால் அது  உண்மையை மாற்றாது" 

"இன்றைய அறிவிப்பு அடுத்த ஆண்டு மாற்றுவதற்கான வாய்ப்பை உறுதியளிக்கிறது, ஆனால் இப்போது நமக்கு முன் உள்ள பணிகள் அப்படியே இருக்கின்றன." என்றும் Biden கூறினார் 


Pfizer: 

News

COVID 19 தடுப்பூசி தயார் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!