அழுவாச்சி பதிவுகளுக்கு ஆறுதல் எனும் பெயரில் கருத்துகள் இட செல்லமுன் என்ன நடக்குது? எது நடக்குது என்று சுற்றி ஆராய்ந்த பின்னர் கருத்திடுங்கள்.
உங்களுக்கான மரியாதை, கௌரவம் வெளியிலிருந்து இல்லை. உங்களிடம் தான்.
தயவு செய்து தனிப்பட்ட பிரச்சனை விருப்பு வெறுப்புகளை அண்டம், ஆகாச பிரச்சனைகளோடெல்லாம் இணைந்து கற்பனை செய்து பேனை பெருமாள் ஆக்காதீர்கள்.
கிண்டர் கார்டன் babis கூட இப்போ செம்ம மெச்சுரிட்டி குட்டிசா மாறி கொண்டிருக்காங்க.
சிலரோட பதிவுக்கு சிலர் போடும் ரியாக்சன்கள் பார்த்து எங்க சமூகத்தின் அவல நிலை நினைச்சு அழுகின்றேன்.. சிரிக்கின்றேன்.. சிரித்து கொண்டே அழுகின்றேன்..!
🤷♀️🙆♀️ முடியல்ல
அவனவன் உசிருக்கு பயந்து போராடி கொண்டிருக்கான். பொது தளத்தில் எதை,எப்படி எழுதணும் என்று முன் மாதிரியாக வாழ்ந்து காட்ட முடியாதவர்கள் இன்றைய இளையோருக்கு எப்படி வழி காட்டுவார்கள். நல்ல பசங்களையும் குட்டி சுவராக்கி விடுவாங்க போலிருக்கு.
யாராச்சும் நான் போட்டு வாறன் என்று அழுவாச்சி காவியம் எழுதினால் இனி நிஷா 😷😬 தான்.
அன்பு, பாசம், நட்புக்கும் எல்லை போடணும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!