07 மார்ச் 2019

எங்கட தமிழரிட்ட இருக்கின்ற நல்ல பழக்கம் என்ன தெரியுமா?

எங்கட தமிழரிட்ட இருக்கின்ற நல்ல பழக்கம் என்ன தெரியுமா?
எந்த பிரச்சனை வந்தாலும் அந்த பிரச்சனைக்கான சமகால சூழல், நமது சமூகத்தின் மேம்பாட்டை நிம்மதியை குறித்து சிந்திக்க மாட்டார்கள்.
மூன்று நான்கு தலைமுறைகள் அல்லது நூறுவருடம், ஆயிரம் வருடப் பாராம்பரியம், பெருமை பேசுவது. எதை எதையெதுடனோ முடிச்சிப்போட்டு இருக்கும் சிக்கலை பெரிசாக்குவது. அல்லது கம்முன்னு உட்கார்ந்து வேடிக்கை பார்ப்பது.
ஆயிரம் ஆண்டு காலம் இல்லை அதுக்கு முன் பூமி தோன்றிய காலம் முதல் இலங்கை இருக்கு. அதில் மனிதரும் இருக்கினம். அங்கே வாழ்ந்தது ஆறறிவு மனித இனமா என்பது தான் எண்ட மண்டைக்குள் இருக்கும் கேள்வி?
எம்பூட்டு பெருமை பேசிட்டிருக்கோம். இருப்பதையும் இழக்க வைக்கும் பெருமை.
ஆதித்தொன்மை மிக்க தமிழனுக்கென சுயமான ஆளுமையோட ஒரு சிறு துண்டு பரப்பில் இது எண்ட நாடு எண்டு சொல்ல ஒண்டுமில்லை.
அவன் செய்தான், அப்ப செய்தான், 
இப்ப நான் செய்யக்கூடாதா, செய்தால் என்ன இப்படி எடக்கு மடக்கா கேள்வி கேட்பது. அப்ப அவன் செய்திருந்தால் அக்கால சூழல் எப்படி இருந்தது?என்ன நடந்தது என எவருக்கும் தெரியாது.

கேட்டு கேட்டு தான் இருந்ததை இழந்து இன்னமும் பழம் பெருமை பேசிட்டு நடு ரோட்டில் நிற்கின்றம்.
என்னமோ இவங்க நேரில் பார்த்து வந்தது போல் எழுதுவாங்க, தமிழர் எனும் உணர்வும் வீரமும் எழுத்தில் மட்டும் அனல் பறக்கும்.
தென்னிந்திய திருச்சபைகளைகள்,கிறிஸ்தவ மதம் பரப்ப வந்த மிஷனரிகள் , பௌத்த மரம் பரப்ப அரச மரக்கிளையோட வந்த சங்கமித்தை, விஜயனும் தோழர்களும், வியாபார நிமித்தம் வந்த அராபியர்கள், யவனர்கள் என காலத்துக்கு காலம் எவனென்வனோ வந்தான். போனான்.
அவன் வந்த காலத்தில் தமிழர்கள் மேன்மை அடைந்திருந்தார்கள்.ஆட்சி அதிகாரங்களோட வாழ்ந்தார்கள் வந்தவனை வா வா என இரு கை கூப்பி வரவேற்று, உட்கார வைச்சு விருந்தளித்தார்கள். வீட்டுக்குள் வாசலோடு அனுப்ப வேண்டியவனெல்லாம் உப்பும் உறைப்புமா சமைச்சத திண்டு போட்டு /உப்ப தூவி அவிச்சி திண்டவனுக்கு நமம் மசாலாவெல்லாம் போட்டு சமைச்சால் சும்மாவா இருக்கும், ஆஹா , ஓஹோ விருந்தோம்பலில் சிறந்தவன் தமிழன் எண்டதும், நம்மாளுங்களும் அப்படியே ம்யங்கி போய் வீட்டுக்குள் கூட்டி வைச்சு படுக்கையும் போட்டு விசிறியும் விட்டாங்க.
நெடு நெடுவென உயரமா வெள்ளையா இருந்தவனை பார்ததும் வெள்ளை தோல் எண்டால் கடவுள் எனும் ரேஞ்சுக்கு கூனி குறுகி கும்பிடு போட்டு காலடியில் உட்கார்ந்தும் இருப்பாங்க. 
இப்படித்தான் எல்லாரையும், நல்லவன் என நம்பி கடைசில தனக்கும் போக்கிடம் இலலாமல் இருப்பை எல்லாம் இழந்து கை கட்டி வாய் பொத்தி நிண்டான். கூழை கும்பிடு போட்ட தமிழனின் பண்பும்,பணிவும்,அவனை ஏமாளி என புரிய வைச்சிருச்சி.

அப்ப இருந்த சனமும் ஏன் எண்டு கேட்கல்ல. கேட்டாங்களா என எனக்கு தெரியல்ல. ஏன் எண்டால் எல்லாரும் தொன்மை பேசினமே தவிர ஆதாரங்கள் என்பது அரிதாகவே ஆவண[ப்படுத்தி இருக்கினம். அப்ப அவன் செய்த தப்புத்தான் நம்ம தலையில் விடிந்திருக்கு.
இப்ப எல்லாத்தையும் இழந்து போட்டு கேவலப்பட்டு நிற்கின்றம். உங்களுக்கு வெட்கமா இல்லையோ என்னமோ எனக்கு வெட்கமா இருக்கு.
ஏன் தெரியுமா.? ஏண்ட மூண்டு தலைமுறைக்கு முந்திய தலைமுறை அதாகப்பட்டது 150 / 200 வருடம் முந்தி என்னோட முப்பாட்டனுக்கு முந்திய தலை முறையும் இந்த தப்பை செய்திருக்கு.
எங்கூரில் பிள்ளையார் கோயிலும், அம்மன் கோயிலும் இருக்கும் நிலம் எங்க குடும்பத்தின் தானமாம், அதனால் எங்க குடும்பத்துக்கு என இன்னமும் முதல் பூஜையும் மரியாதையும் இருக்கு எண்டு என் அம்மாம்மா முதல் அம்மா வரை சொல்வாங்க. ஆதாரம் இருக்கா என இனி நானும் தோண்ட போறேன். எண்ட உரிமையை கேட்க போறேன். 😍
அதான் அப்படி எண்டால் 
வேதக்காரர் கதை இன்னொரு பக்கம். 
பைபிளில் நூதனம் பார்த்து மனிதரை ஒதுக்கி வைக்க சொல்லவும், இல்லை. தெரிந்து தின்னாதே. தெரியாமல் திண்டால் அது உன் தப்பில்லை. எதை திண்டாலும் ஜெபிச்சிப்போட்டு திண்ணு

உன் ஒரு கண்ணால் உன் சகோதரனுக்கு கேடு உண்டாகும் என நினைச்சால்,உன் கண்னை பிடுங்கி போடு எண்டு தான் பைபிள் சொல்லுது .
படைச்சதை திண்டால் என்ன தின்னாட்டில் என்ன?
எவன் எதை தின்னனும் என நீங்கள் ஏன் நிர்பந்திக்கின்றீர்கள்? நீங்கள் செய்தால் அதை எல்லாரும் செய்யணும் எண்ட எதிர்பார்ப்பு ஏன்? 
அவனவன் அவனவனுக்கு பிடிச்ச மாதிரி வாழுறான்.

உரிமையை காப்பாத்துதுவதில் தனி மனித விருப்பு வெறுப்புக்கு இடமில்லங்க.
அன்னியனுக்கு இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான் எண்ட பட்டறிவு அனுபவம் ஏற்கனவே இருக்கில்ல. அப்புறம் என்ன மண்ணுக்கு உள்ளூட்டு பிரச்சனைக்கு அடுத்தாத்து காரனை பந்தி விசாரிக்க கூப்பிடுறியள் என்கின்றேன். அங்கயும் பிச்சி இங்கயும் பிச்சி மொத்தமா எல்ல்லாத்தையும் பிச்சி எடுக்க திட்டம் போடுறியளோ?
உங்கட வீட்டில் நடக்கும் பிரச்சனைக்குரிய தீர்வை உள்ளூட்டுக்குள் நிண்டு கொண்டு, கேட்டு பெறணும், எந்த உரிமைக்க்கு போராடுறியளோ அதை முதல்ல பெறணும். ஒன்றில் ஆரம்பிச்சு பத்தில் நிறுத்தி, பத்துக்கு முன்னால் இருகும் ஒன்றை விட்டு ஒட்டுமொத்தமா பூஜ்ஜியத்தில் எங்கட சனத்தை கொண்டு வந்து விட்டிருக்கியள்.
இன்னுமா புத்தி வரலல். 
எண்ட வீட்டு பிரச்சனையை நானே தீர்த்துப்பேன், நாட்டாமை செய்ய எவனும் வர வேண்டாம். அண்டை அயலில் இருக்கவுகளோட சமாதானமா இருக்கிறது. ஆபத்து நேரம், அவசர உதவிக்கு தான். வீட்டுக்குள் வநது படுக்க சொல்லி கேட்க தேவைல்ல.

வீட்டு சாவியை கொடுத்து காவல் காரனாக்கி வீட்டுக்குள் பூந்து வீட்டு பிரச்சனையை தீர்த்து வைக்கணும் என ஒரு தடவை அல்ல பல தடவை பட்டும் புத்தி கொள்முதலில் தான் இருக்கியள்.
ஆளாளுக்கு பதிவு போட்டு மதம் காக்க மதம் பிடிச்சி மதவெறியை ஊட்டி பிரிவினை வளர்த்து நாட்டாமைக்கு எவனை நுழைக்கலாம் என தான் யோசிக்கிறியளே தவிர இந்த பிரச்சனைக்கு தற்கால தீர்வை தேடவும், அந்த மகக்ளின் அமைதியையும் நிம்மதியையும் நீங்கல்லாம் விரும்பல்லல்.
உங்களுக்கு தமிழ் மக்கள் எப்பவும் ஏதோ ஒரு பிரச்சனையில் எரிந்திட்டே இருக்கணும், அதில் நீங்கள் குளிர் காயணும்.
ஈழத்து வாழ்மக்களே, இவங்க வெளி நாட்டில் பத்திரமா, பாதுகாப்பா இருந்து கொண்டு நல்லா ஏத்தி ஊத்தி விடுவாங்க. இவங்கட போலிபேச்சை நம்பி நாம் இழந்தது போதும்.
உணர்ச்சிகளுக்கு இடம் கொடுத்துது இனியும் உங்கள் நிம்மதியை இழக்காதிங்க போயிட்டு உங்கட புள்ள குட்டிகளை பாருங்க படிப்பிக்க என்ன செய்யலாம் என யோசிங்க. இப்போதைய இருப்பை இழக்காமல் இருக்கணும். அவ்வளவ தான் நான் சொல்வன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!