27 மார்ச் 2019

தமிழ் நாட்டு கல்வியும், சிந்தனைகளும்....!!!!

தமிழ் நாட்டில் கல்வி விடயத்தில் ஏன் இத்தனை குழப்பம் என எனக்கு புரியவில்லை?
தேர்வினை எதிர்கொள்ள இயலாத மாணவர்கள்.... ?
பதறித்துடிக்கும் பெற்றோரும், ஆசிரியர்களும்......?
முடியாது,இயலாது,கடினம்,கஷ்டம் என சொல்லி நெகடிவ் அலைகளை பரப்பிக்கொண்டிருப்பதன் பின்னனி என்ன?
மாணவர்கள் கல்வி சார்ந்து பாடத்திட்டத்தில் இல்லாத கேள்விகள் தேர்வுத்தாளில் வருகின்றதா?
மாணவர்கள் செயல்முறை இல்லாமல் மனன முறையில் கற்றலை பெறுகின்றார்கள் எனில் இதில் ஆசிரியர்கள் பங்களிப்பு எவ்வகையில் இருக்கின்றது?
மக்களில் சிலர் இன்னமும் ஆரம்ப கல்வி,அடிப்படை கல்வி என பேசிக்கொண்டிருப்பதை காணும் போது இவர்கள் என்ன எதிர்பார்க்கின்றார்கள் எனும் குழப்பம் வருகின்றது?

இந்திய அரசின் கல்வித்திட்டம் தமிழ் நாட்டுக்கென தனி பாட திட்டங்களையும், தேர்வுத்தாட்களையும் தயாரிக்கின்றதா?
பள்ளிப்பாடத்தில் அரசு பாடத்திட்டம் கடினமாக இருந்தாலும் ஆசிரியர்கள் என்ன செய்கின்றார்கள்?
பாடத்திட்டத்துக்கு ஏற்ப மாணவர்களை தயார்ப்படுத்தாதது ஏன்?

அரசு பாடத்திட்டங்களை காலத்துக்கேற்ப மாற்ற வேண்டும்,உலகத்தின் தொழில் நுட்ப வளர்ச்சி, நவீனத்துவத்துக்கு ஏற்ப கல்விதிட்டங்கள் மாற்றமடைய வேண்டும் என்பதுடன் மாறும் சூழலுக்கேற்ப பிராக்டிகல் வாழ்க்கை முறையை கல்வியின் மூலம் உணர்த்த வேண்டும்.
அடிப்படையே அனைத்தும் தவறென்கின்றோமா?
அரசு அரசு என அரசின் மேல் எல்லாப்பழியையும் இட்டால் சமூகத்துக்கான் கடமை என்ன? தனிமனிதர்கள் கடமை என்ன?
எனக்கு புரியவில்லை. நாங்கள் எங்கள் கடமைகளை மறந்து எல்லாவற்றையும் அரசு செய்யட்டும் என எதிர்பார்ப்பது எவ்வகையில் நன்மையை தரும்,
இப்படியே பேசிக்கொண்டிருந்தால், தமிழ் நாடு இந்தியாவில் பின் தங்கிய மாநிலமெனும் பட்டியலில் இடம் பிடிக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை.
நமக்குள் பலர் தமிழ் நாடு கல்வியில் முன்னேறி இருப்பதாகவும், முன்னனியில் இருப்பதாகவும் கருத்தை கொண்டுள்ளார்கள்.
ஆனால் நிதர்சனம் வேறு ....!!!!
கடந்த 2011 எடுக்கப்பபட்ட சென்சஸ் கருத்துக்கணிப்பில் தமிழ் நாடு இந்திய அளவில் கல்வியில் 14 ஆவது இடத்தை பிடித்திருக்கின்றது.
2018 ஆம் ஆண்டில் தமிழ் நாட்டுக்கல்விச்சூழல் இன்னமும் பின்னோக்கி சென்றிருக்க வேண்டும். முன்னேறிச்சென்றிருக்கும் வாய்ப்புக்கள் இல்லை.
உலகத்தில் தனி நபர் தன்னிறைவு பட்டியலில் 2014 /2016 ஆண்டுகளில் 122 இடத்தில் இருந்த இந்தியா , 2018 / 133 இடத்தை பின்னோக்கி சென்றிருக்கும் போது தமிழ் நாட்டு கல்வியும் பின்னோக்கி தான் சென்றிருக்கும். ஆட்சி நிர்வாகம் மட்டுமல்ல, மக்கள் சிந்தனைப்போக்கும் சீரற்றதாக இருக்கின்றது.
உண்மை நிலை உணராது, மேம்போக்காக நாங்களும் வளர்கின்றோம் எனும் போலித்தனமான மாயைக்குள் தாங்களும் சிக்கி, மக்களையும் சிக்க வைப்பது ஏன்?
வீண் கௌரவம், வரட்டு பிடிவாதமே உன் இன்னொரு பெயர் தான் தமிழ் நாட்டு தமிழரோ?
இந்தியாவில் தமிழ் நாடு தான் கல்வியில் முன்னனியில் இருக்கின்றது எனும் வெற்றுப்பிரச்சாரங்களை மேற்கொள்வதும் அதை நம்பிக்கொண்டிருக்கும் மக்களையும் என்னவகையில் சேர்ப்பது எனவும் புரியவில்லை.
உலகை ஆண்ட பரம்பரை எனும் வரலாற்றை கொண்ட ஆதித்தமிழனின் தொன்மை மிகு சிறப்பை இனி வரும் காலத்தில் சிறுமைப்படுத்தும் செயல்பாடுகளை தவிர்க்க நாம் என்ன செய்ய வேண்டும்?
மக்களே..........!!!!
தூங்கியது போதும் 
விழித்தெழுங்கள்


எழுத்தறிவு அடிப்படையில் இந்திய மாநிலங்கள் எனும் பட்டியல் ஆங்கிலத்தளத்தில் இந்தியாவில் 14 ஆவது இடத்தில் தமிழ் நாடு இருப்பதாக சொல்கின்றது. ஆனால் தமிழ மொழிபெயர்ப்போ 21 ஆவது இடத்துக்கு அதை நகர்த்தி விட்டிருக்கின்றது. இதன் மூலம் நாம் அறிய வேண்டியது என்னவென்றால், இக்கால தமிழர்கள் வாய்ச்சொல் வீரர்களாக மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கின்றர்கள். எதையும் சரியான தரவுகளோடு ஆவணப்படுத்தவும், ஆதாரப்படுத்தவும் எவருக்கும் ஆர்வமில்லை. வரலாற்றில் கரும்புள்ளிகளாக தற்கால தமிழர்கள் பதிவாகுவார்கள் என்பது மட்டும் உண்மை. எழுத்தறிவு அடிப்படையில் இந்திய மாநிலங்கள்


பேஸ்புக் பதிவு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!