07 மார்ச் 2019

திருக்கேதீஷ்வரன் கோவில் நுழைவு வாயில் வளைவுப்பிரச்சனையும் தீர்வும்

இலங்கைத்தமிழக்கிறிஸ்தவர்கள் அனைவரும் இணைந்து தொன்மைமிக்க திருக்கேதீஸ்வர கோயிலுக்காna நுழைவு வாயிலை அமைத்து கொடுக்க வேண்டும் என்பதே எம் முன் இருக்கும் ஒரே தீர்வு.
அரசு மற்றும் ஆலயங்கள் சார்ந்த நிர்வாகத்தினரே நீங்கள் கூடிப்பேசி மனங்களில் பிரிவினை விஷ விதைகளை தூவுவதை நிறுத்துங்கள். தீர்வை மட்டும் எமக்கு முன் வையுங்கள். உங்கள் வழக்கும், வாய்தாவும், சட்டமும், திட்டங்களும் எமக்கு வேண்டாம். எங்கள் மக்களை நிம்மதியாக வாழ விடுங்கள். உங்கள் வரலாறுகளை மண் தோண்டிப்புதையுங்கள். மக்கள் மனங்களை கூறுபோடாதீர்கள்.
நடந்து கொண்டிருப்பது இரு மதத்தின் பிரச்சனை இல்லை.எமது உரிமை, உடமையை பாதுகாக்கும் கடமை.
மனங்களின் பிளவினை விரிசலாக்காமல் கடந்த நாட்களில் நடைபெற்ற அத்துமீறல்களுக்கான பிராயச்சித்தத்தை கிறிஸ்தவ மக்கள் செய்ய வேண்டும் என்பதற்கான காரணங்களை அலசுவோம்.
சற்று நீண்ட பதிவு தான். ஆனாலும் கட்டாயம் படியுங்கள்.
சத்தியம்,நீதி எல்லாம் இரண்டாம் பட்சம்தான் என்கிற அளவுக்கு உங்கள் இனம், மதம், அரசியல் சார்பு ஆகியவற்றின்மீது நீங்கள் உணர்வுபூர்வமாக பிடிப்புக் கொண்டிருந்தால், நீங்கள் கற்ற கல்வி பயனற்றதுதான். உங்களுக்குக் கிடைத்த அறிவுத்தேடலுக்கான வாய்ப்புகள் பயனற்றவை. கவைக்குதவாத பற்றார்வங்களை வென்று நீங்கள் மேலேற முடியவில்லை என்றால், இந்த சமூகத்துக்கு நீங்கள் ஒரு சுமைதான்.
ஒடுக்கப்படும் மக்களின் உரிமைக்கான போராட்டம் என்பதன் வரையறை என்ன?
மக்களுக்கான உரிமை அபிவிருத்தி எனும் பெயரில் நவீனங்களை நுழைத்தலினால் கிடைத்து விடாது.வானுயந்த கட்டடங்களை அமைப்பதினாலும் கிடைக்காது தொழில் நுட்ப சாதனங்களை பரவலாக்குவதனாலும் பெற முடியாதது.
எமது உரிமை என்பது இறையாண்மையை,தனித்துவத்தை இழக்காது, அறிவையும்,ஆற்றலையும், பாரமபரியங்களை விட்டுக்கொடுக்காது காப்பாற்றுவதிலும்,
இருப்புக்களை அழிந்து போகாது பாதுகாப்பதிலும் இருக்கின்றது.

தமிழர்க்கான உரிமை, சமூக மீட்சி என்பது பாராம்பரிய மொழி,மதம்,கலை, காலச்சாரம், கட்டுமானங்களோடு மட்டுமலல் பொதுச்சொத்துக்களில் எமக்கிருந்த உரிமையை விட்டு கொடுக்காமல் காப்பாற்றுவதிலும் இருக்க வேண்டும்.
திருக்கேதீஸ்வர கோயில் வளைவினால் தமிழர்களாகிய நமக்குள் இந்துக்கள் /கிறிஸ்தவர் எனும் பிளவானது ஊடகங்களால் ஊதி பெரிதாக்கப்பட்டு கொண்டிருக்கின்றது.
நடப்பதெல்லாம் நல்லதுக்கே என இதிலும் நாம் நன்மையை தேட முடியும்,இப்பிரச்சனையை வைத்தே நிரந்தர தீர்வினை நோக்கி நகர்த்த நம்மால் முடியும்.
மனங்களை பிரித்தாழ சூழ்ச்சிகள் செய்வோரின் தந்திரங்களுக்கு பலியாகாமல் எம்மக்களுக்கான தீர்வுகளை நமக்குள் நாமே திர்மானிக்க வேண்டும்.
சில விடயங்களில் உரிமை என்பது கேட்டுப்பெறுவது அல்ல.எடுத்து கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் நமக்குள் திணிக்கப்படுகின்றது.
மக்கள் சொல்வதை செய்யத்தான் நிர்வாகங்களும் அரசும். எந்த நிர்வாகத்துக்கும் ஆடும் மகுடிகளாக மக்கள் வாழ தேவையில்லை. அவரவர் சுய புத்தியை தீட்டுவோம். ஆராய்வோம். .
சிறுபிள்ளைதனமான சிலரின் செயல்பாடுகளையும் எழுத்துக்களையும், ஒருபக்கசார்பான துவேஷங்க்ளையும ஒதுக்கி, இந்த பிரச்சனையில் நாம் செய்யகூடியது என்ன?
சைவம், கோயில் என இரு மதம் சார்ந்த தனிப்பட்ட பிரச்சனை இது இல்லை என்பதை பொதுமக்களாகிய நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
நமது உரிமையை காப்பாற்ற முடியாத மதம் இருந்தென்ன போயென்ன? 😡
திருக்கேதீஷ்வரம் கோயில் குறித்த கடந்த கால வரலாறும் அக்கோயிலின் பாராம்பரியமும் இராமாயண காலத்தோடு சம்ப்ந்தபட்டதென தரவுகள் சுட்டிக்காட்டுகின்றது./ படம் இணைத்துள்ளேன்.
கோயில்கள் என்பது மதங்களின் அடையாளம் அல்ல மனங்களின் சங்கமம் . மனிதர்களை நெறிப்படுத்தவே கோயில்கள் .அன்பையும் அகிம்சையையும் போதிக்க வேண்டிய மத ஆலயங்கள் வன்மத்தையும், வன்முறையையும் வளர்க்குமானால் கல்லறைகளாகி விடும்.
திருக்கேதீஸ்வர கோயிலுக்கான திருக்கேதிஸ்வரம் செல்லும் பாதையில் 1km க்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த அழகாக,அ லங்கரித்த நுழைவாயில் வளைவு வீதி அபிவிருத்தி எனும் பெயரில் வீதி அபிவிருத்தி சபையினரால் அகற்றப்பட்டிகிறது.
திருக்கேதீஷ்வர நுழைவு வாயில் வளைவொன்றின் புகைப்ப்படத்தினையும், தற்காலிக வளைவின் தோற்றமும் புகைப்படமாக, பகிர்ந்துள்ளேன்.
1.கோயிலுக்கு செல்லும் பாதையில் 1km க்கு முன்பாக நிரந்தரமாக நிர்மாணிக்கப்பட்டிருந்த வளைவு வீதி அபிவிருத்தி எனும் பெயரில் நீக்கப்பட்டது
2.அப்போது ஆட்சேபனை தெரிவித்த மக்களுக்கு அரசு சார்பில் மீண்டும் அவ்விடம் அமைக்கப்படும் எனும் உறுதி மொழி வழங்கப்பட்டிருக்கின்றது. .
3. வீதி அபிவிருத்திக்கு பின் மீண்டும் அவ்விடத்தில் மீளமைக்க அரசு மறுக்கிறது. மக்கள் ஆதரவில்லை எனும் சாக்குபோக்குக்கள், வளைவுக்கு முன் இருக்கும் சர்ச் குறித்த பிரச்ச்னைகள் புதிதாக முளை விடுகின்றது.
4❗️அந்த வளைவு அவ்விடத்தில் முன்னும் இருந்தது எனும் போது வீதி அபிவிருத்திக்கு பின் அவ்வளைவை அங்கே நிரந்தரமாக நிர்மாணிப்பதில் என்ன தடை
5. மக்கள் அனைவருமே ஒருமனப்பட்டு அவ்வளவை மீண்டும் இருந்தது போல் கட்டி விடு என அரசு நிர்வாக்த்தை உரிமையாக நிர்ப்பந்தித்திருக்க வேண்டும்.மகக்ள் ஒருமனப்பட்டிருக்க வேண்டும்.
ஆண்டாண்டு காலமாக நமக்கென தொடர்ந்து வரும் பாராம்பரியங்களை விட்டுக்கொடுக்காது, நமது மண்ணுக்கான இறையாணமை, பண்பாட்டு கலாச்சாரங்களை கட்டிக்காப்பதில் மத பேதம் எங்கிருந்து நுழைந்தது?
6. இதற்கிடையில் அந்தவீதியில் புதிதாக தாக நுழைந்த பௌத்த கோயிலை அனுமதித்து இருக்கின்றீர்கள். புத்தர் சிலை வந்தால் அனுமதிக்கின்றீர்கள். ஏற்கனவே இருந்த நுழைவு வாயில் வளைவை எதிர்க்கின்றீர்கள்?
எவ்வகை நியாயம் இது?
இந்த பிரச்சனையில் பின்புலம் கோயில் நுழைவாயில் சம்பந்தப்பட்டது அல்ல.அனைத்து தமிழர்கள் உரிமைக்குமானது.
இழந்து வரும் எமது உரிமை சார்ந்தது. 
இலங்கையில் எமக்கு சொந்தமான தொன்மை மிக்க வரலாற்று சிறப்புக்களை நாம் இழந்து கொண்டுள்ளோம்.

இன்று நாம் அந்த நுழைவாயிலை நமது கையால் உடைத்து போட்டோமானால் எதிர்காலத்தில் பௌத்தர்கள் பெயர் சொல்லி அந்த வீதியில் நுழைவாயில் கட்டும் வாய்ப்பை உருவாக்கி கொடுக்கின்றோம் என்பதை உணராவிட்டால் இருப்பையும் இழப்போம்.
எமது தொன்மையை இழப்போம்.
நுழைவாயில் வளைவு சம்பந்தமாக இனி பேசி தீர்க்க எதுவுமே இல்லை. மன்னார், யாழ் கத்தோலிக்க தேவாலய ஆயர்களும், மக்களும் தம் சுய விருப்பு வெறுப்பை தவிர்த்து உடனடியாக அந்த நுழைவாயில் வளைவை முன்னிருந்ததை விடப் பிரமாண்டமானதாக அழகாக கட்டிக்கொடுக்க வேண்டும் எனும் சகோதரத்துவ மத நல்லிணக்கம் நல்லெண்ணத்துடன் முடிவெடுப்போம்.
இலங்கைக் தமிழக்கிறிஸ்தவர்களே அனைவரும் ஒன்றிணையுங்கள். முடிவு ஒன்று மட்டுமே எமக்கு முன் இருக்கின்றது.கட்டுமான பணிகளுக்காக அமைப்பை உருவாக்குங்கள்.
எம்மக்கள் மீட்சி எம்மால் மட்டுமே சாத்தியம்.எமக்கிடையில் எந்த தரகரகளும் வேண்டாம். அழுத்தமாக பதிவுகளை இடுங்கள்.
ஓரிரவில் மன்னிப்பு அறிக்கை வெளியிட ஆயரால் முடியுமானால் இதுவும் அவரால் முடியும்.
🙏🙏🙏திருக்கேதீஸ்வர ஆலய நுழைவாயில் வளைவை அவ்விடத்தில் நிரந்தரமாக கட்டுவதற்காக முதல் நிதி எனது குடும்பத்தின் சார்பில் வழங்கப்படும். ❤️
இதை வாசிக்கும் மக்களே தயவு செய்து கடந்து செல்லாதீர்கள் .உங்கள் கருத்துக்களை பதிவாக்குகள். மாற்றுக்கருத்துக்களை எதிர்க்கருத்துக்களாக்கும் ஒரு பகக் சார்பான குறுகிய புத்தி என்னுள் இல்லை.

திருக்கேதீஷ்வரன் கோவில் நுழைவு வாயில் வளைவுப்பிரச்சனையும் தீர்வும்




திருக்கேதீச்வரம் செல்லும் ஏ 14 சாலையில் இருக்கும் வளைவு. 
 Entrance Of Thirukkeethiswaram எனும் தலைப்பில் 
lk. Geoview.info இணையத்தில் பதிவாக்கி இருக்கும் புகைப்படம் இது.
இப்படித்தான் வீதி சீரமைப்புக்கு முன் பழைய நுழைவு வாயில் இருந்திருக்க வேண்டும் என யுகிக்க முடிகின்றது.

 மார்ச் 2019 ஆம் ஆண்டில் விதி அபிவிருத்திக்கு பின் 

  கத்தோலிக்க தேவாலயமும் தற்போதைய ஆலய நுழைவு வாயிலின் தோற்றமும். மார்ச் 2019


உண்மையை நாம் உணர இந்த ஒரு படமே போதும். ஆலயத்தின் தொன்மையை இராமாயண காலத்தின் சம்பவங்கள் நடந்ததாக இலங்கையை இணைக்கும் வரைபடம் உணர்த்துகின்றது.


திருக்கேதீஸ்வரம் செல்லும் பாதையில் இருக்கும் வளைவு.
Entrance Of Thirukkeethiswaram எனும் தலைப்பில்
lk. Geoview.info இணையத்தில் பதிவாக்கி இருக்கும் புகைப்படம் இது.

இப்படித்தான் வீதி சீரமைப்புக்கு முன் பழைய நுழைவு வாயில் இருந்திருக்க வேண்டும் என யுகிக்க முடிகின்றது.



04.03.2019 ல் மன்னார் திருக்கேதிஷ்வர ஆலய தற்காலிக நுழைவு வாயில் தோற்றம்.

தேடலில் வேறு புகைப்படம் கிடைக்கவில்ல்லை.. என் இன்பாக்ஸில் வந்ததை தேவை கருதி பகிர்ந்துள்ளேன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!