04 மார்ச் 2019

மதம் எனும் மதம்!!

மறத்தமிழர்கள் மறைந்து போனதால்
மானத்தமிழினம் மதம் பிடித்தலையிது
மனிதம் மனங்களில் மரணித்து போகுது 
மனமொன்றிங்கே மௌனமாய் கதறுது!!

நடப்பதெல்லாம் நலமாயில்லை
நாமுணரும் தருணமும் இல்லை
நாளைய தேசம் பகற்கனவாகி 
நாடுகள் தோறும் அகதியாய் அலைவோம!!

இன வாத விசத்தால் 
இலங்கை தீவை 
இரு கூறாக்கி 
இருப்பை தொலைத்தோம்!!

உரிமை கேட்டோம் 
உடமை இழந்தோம்
உணர்வுகள் மரத்தோம்
உயிர்ப்பை அழித்தோம்!!

விடுதலை தேடி 
வீட்டை இழந்தோம்,
நியாயம் பேசி 
நிம்மதி தொலைத்தோம்!!

மதம் எனும் பெயரால்
மனங்களை பிரித்து
தமிழர் நாம் இனி 
தனித்து வமாவோம்!!😭👿

2 கருத்துகள்:

  1. சூப்பர் நிஷா! உங்கள் வேதனையையும் ஆதங்கத்தையும் ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க...

    கீதா

    பதிலளிநீக்கு
  2. கடைசி பாரா அருமை...ஆனால் வேதனையும் கூடவே...

    கீதா

    பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!