21 மார்ச் 2019

வழிகள் பல இங்குண்டு கேள் பெண்ணே....!

ஆங்கோர் அபலை 
கடலைலை போலே 
அங்குமிங்கும் பரிதவிக்க 
ஊருக்குள் யோக்கியராய் 
உத்தமராய் வேஷமிட்டு 
உள்வீட்டு உடைசல்களை
உடைத்தெறிய வழிதெரியா 
நீதிமான் போதனைகள்
நீயறிவாயா பெண்ணே....!

உனக்கென நானிருப்பேன் 
உள்ளமெல்லாம் உன்நினைவே
உணர்வை யள்ளித்தெளித்து 
உயர்வது வென்றுரைத்து
சத்தியம் தானென்றும் 
நித்தியம் நீ என்பார். 
தடையகற்றி தாண்டி விடும்
வழிகள் பல சொல்லிடுவார்
விதி யொன்றை உனக்காகச் சமைப்பார்

தங்கு தடையில்லாமல் 
தாராளமாய் வாழ்தல் 
தவறில்லை என்றுரைப்பார்
உன் வழி இதுவெனவே
தனி வழியை பரிந்துரைப்பார்.
தன்னகத்தில் கறையில்லை
நிறைகுடம் தானென்பார்.
கலங்கிடும் காரிகையவளை 
காதலெனும் மாயையால் வீழ்த்தி 
காமத்தில் முழ்கடிப்பார்.
காமத்தை தூதுவிடும் காளையர்கள்

காதலதில் கறையுண்டென்றுணர்ந்து 
புறம் தள்ளி பறந்தோடி வா பெண்ணே
புது விடியல் உனக்குண்டு பெண்ணே
வாழ்க்கையது வாழ்வதற்குத்தான் பெண்ணே
வழிகள் பல இங்குண்டு கேள் பெண்ணே....!

3 கருத்துகள்:

  1. வழிகள் பல இங்குண்டு கேள் பெண்ணே....

    நம்பிக்கை கொள் பெண்ணே - வழிகள் இங்கே உண்டு...

    நல்ல கவிதை. பாராட்டுகள் நிஷா.

    பதிலளிநீக்கு
  2. அருமையா எழுதி இருக்கீங்க.

    பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!