நட்பா? காதலா? என பல முறை பல இடங்களில் விவாதித்தாகி விட்டது.. என் ஒட்டு காதலை விட நட்புக்கே இருப்பதும் ஆண் பெண் நட்பை நல்ல மெல்லிய நூலால் கட்டும் போது இயல்பாய் இருவருக்குமிடையிலான ஏதோ ஒன்று அங்கே இழையோடுவதும்அந்த இழையே நட்பின் வெற்றிக்கு பின் இருபப்தும் நிஜம் என்பதை உணர்ந்தவர் புரிந்து இருப்பார்கள்..
ஆங்கிலத்தில் LOVE என்பதை அன்பினை தாண்டிய எதிர்பார்ப்பில்லாத பிரியத்தை சொல்ல பயன்படுத்து வார்கள். ஐ லவ் அம்மா, ஐ லவ்அப்பா என அனைவரையும் LOVE எனும் அன்பால் கட்டுவார்கள். ஆம நேசிப்பு...... அனைவருக்கும் பொதுவானது.அனைவரையும் லவ் செய்யலாம்.அனைத்தையுமே நேசிக்கலாம்!
ஆனால் நம் சினிமாக்கள் LOVE என்பதை ஆணுக்கும் பெண்ணுக்குமே உரியதான காதல் எனும் வட்டத்தினுள் நிறுத்துவதால் LOVE சொன்னாலே ஏதோ பெரிய தப்பு எனும் உணர்வு இன்னும் நம்மவர்களிடம் உண்டு.
காதல் ஒரு காலத்தில் பூத்து சிலகாலத்தில் மறையும், நேசிப்பு மரணம் வரை கூட தொடரும்.
நீ என்னை நேசிக்கிறாயா? நீ என்னை LOVE பண்ணுகின்றாயா என கேட்டால் ஆமாம் I LOVE YOU என சட்டென சொல்லிட முடிவது போல் காதலை சொல்ல முடியதில்லை. காதலில் காமம் சேரும் போது அதிலிருக்கும் LOVE சில நாட்களில் சாதலை அடைவதும் உண்டு.
அதிலும் இந்த நட்பெனும் ஆண்பெண் நூலிழை இழைவில்.... நேசிப்புக்கும் காதலுக்கும் மெல்லிய கோடு தான்.அந்த கோட்டை நிர்ணயிப்பது நம் உணர்வுகள் தான்!. தமக்குள் இருப்பதை நேசிப்பாக்குவதும் காதலாக்குவதும் அவரவர் கைகளில் தான் என்பேன்! காதலுக்கு எல்லை உண்டு, ஆனால் நட்புக்கு எல்லை இல்லை!
காந்தந்தின் இரு துருவங்களை நாம் அருகருகே வைத்து விட்டு ஈர்ப்பே இல்லை என சொன்னால் அது எப்படி தவறாகுமோ அப்படித்தான் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான நட்பும் , பெண்ணுக்கு பெண்ணும் , ஆணுக்கு ஆணும் பழகும் போது இல்லாத ஏதோ ஒன்று ஆண் பெண் நட்பில் இருந்தாலும் அதையும் அவர்களில் புரிதலுடனான நேசிப்பாய் இறுதி வரை தொடர முடியும். என நான் நினைக்கின்றேன்?
பெரும் பாலான பெண்கள் சட்டென அறிமுகமாகும் வேற்று ஆண்களை அண்ணனாய், தம்பியாய் அழைப்பதும் தமக்கான பாதுகாப்பு வளையம் இறுகவே.. ஆண்களை நம்ப இயலாமை அல்லது தன்னில் நம்பிக்கை இல்லாமை ஆண்களை பெண்களை சகோதர உறவில் தூரமாய் வைத்து விடச்செய்கின்றது.
இதையெல்லாம் தாண்டி ஜெயிக்கும் ஆண் பெண் நட்பூ.... பல ஆண்டுகளானாலும் தொடர செய்யும் நட்பூவாய் மரணம் வரை கூட வரும் என்பது என் கருத்து!
நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?
நட்பா? காதலா? எது சிறந்தது?
உன்னகம் கொன்று என்னகம் ஜெயிப்பதும்
என்னகம் கொன்று உன்னகம் வெல்வதும்
விண்ணகம் சென்றிட தூண்டிடும் வலியடா?
துன்பமா இன்பமா,,, சகலமும் நம்முள்ளே
தாயிவள் சேயாவதும் சகலமும் சரணென
சொல்லிடும் உணர்வினில் ...
சவாலென விலகியே சடுதியாய் செல்கின்றாய்?
எப்படி உனைக்கொன்று உன்னை நான் வெல்வது?!
தரணியில் தோல்விகள் துவண்டேனே தோழியே என்றதும்
தொட்டதும் தொல்லை தான் என்று நீ உரைத்ததும்
தாங்கிடும் மனமின்றி தவிப்பவள் தாயடா!
தோல்வியில் துவண்டிட்டால் தோள் தந்து
தாங்கிடும உன்னவள் உனக்கென்றும் சேயடா!
தோள் தர துணை நிற்கும் தோழியும் அவளடா!
காதலை மிஞ்சிய பாசமும் நேசமும்
யுகத்திலே உண்டென புரிந்தவள் பெண்ணடா!
அனைத்தையும் வெல்லுவேன் அன்று நான் சொல்லுவேன்
அனைத்திலும் இருந்தவள் அன்பான தோழி நீ என்றவன்
என் மனமுணராமல் போனதேன் தோழா?
விழித்தெழு, ஜெயித்திடு சொல்லிடும் உன் தோழி
தன்னிலே உன்னை நீ தோற்கணும் என்பாளோ?
நீயா நானா சவால்கள் வந்திட்டால் - உன்
அன்பினுள் அடங்கியே ஜெயித்திடும்
சேயுந்தன் தாயுமானானவள் தோழியாம்!
வரமென சொன்னவன் தூரமாய் செல்கின்றான்
வீம்புடன் வார்த்தையை வீசித்தான் கொல்கின்றான்
பெண்மையோ மௌனமாய் கண்ணீரை வடிக்குதே!
மென்மையாம் மனதினில் உருகிடும் உணர்விலே
ஜெயிப்பவன் என்றுமே நீயாய்த்தானிருக்கணும்
வானமே எல்லையாய் அனைத்தையும் ஜெயிக்கணும்!
வஞ்சியின் வாஞ்சையில் வஞ்சனையில்லையே!
நெஞ்சத்தின் வேதனை புரிந்திடும் நாளேது?
காதலும், காமமும் கலந்திடும் இகத்திலே
காதலை தாவென கசிந்து நீ வேண்டினால்
கறைகளும் வாழ்க்கையை கலைத்து வைக்குமே!
காதலே வேண்டாமே கசக்குமே என்றிட்டால்
காதலித்துப்பார் உனக்கது புரியும் என்கிறாய் !
நட்புக்கோர் இலக்கணம் பிசிராந்தையார் நட்பாம்
பாராமல் மனமுணர்ந்தவர வருயிரையும் விட்டாராம்
என்றோ உரைத்ததை இன்று நீ மறந்ததேன்?
பின் குறிப்பு
அனவருக்கும் அன்பு வணக்கம்,!
வலையுலகிற்கு புதியவளாய் தமிழுக்கு சிறு மழலையாய் உங்கள் முன் தவழ்ந்திடும் என்னை தட்டிக்கொடுத்து தாலாட்டி, சீராட்டி நான் நடைபயில உதவிடும் அனைத்து வலைத்தமிழ் நல்லுள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி!
ஆல்ப்ஸ் தென்றலில் பதிவாகும் என் எழுத்துக்கள் புதியவைகள் அல்ல என்பதையும், அதில் இருக்கும் சோகங்கள் சோர்வுகள் இன்றைய என் நிலையை சொல்லும் சொந்தக்கதையல்ல என்பதையும் நான் பகிரும் பல கவிதைகள் 2009ம் ஆண்டிலேயே எழுதப்பட்டு முத்தமிழ் மன்றம், தமிழ் மன்றம், சேனைத்தமிழ் உலாக்களில்பதிவாக்கப்பட்டிருக்கின்றது என்பதோடு...அங்கொன்று இங்கொன்றுமாய் பரவி இருப்பதை ஒரே தொகுப்பாக்கிட ஆலோசனை சொல்லி என் வலைப்பூ வழி காட்டியாம் மனசு குமாரின் ஆலோசனையில் ஒவ்வொன்றாக இங்கே பதிவாக்குகின்றேன்.

படம் நன்றி இணையம்

புரிதலுக்கு நன்றி!