சுண்டிக்குளம் தேசிய பூங்கா
உயர்ந்த உயிர்ப் பல்வகைத் தன்மையைப் போன்றே தனித்துவமான நீர்வாழ் மற்றும் கடலோர சூழல் அமைப்புகளினாலும் கொண்ட இலங்கையின் வட மாகாணத்தில் யாழ்ப்பாண தீபகற்பத்தை நோக்கி களப்பைச் அண்டி அமைந்துள்ள ஈரநில சூழல் தொகுதியொன்றாக சுண்டிக்குளம் தேசிய பூங்காவை இனங்காட்ட முடியும். 19565.33ஹெக்டயார் நில அளவைக் கொண்ட இப்பிரதேசம் 1983 பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதி சரணாலயமொன்றாக ஆரம்பத்தில் பெயர் பதிக்கப்பட்டிருந்ததோடு வன விலங்குகள் மற்றும் தாவர பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் விதிமுறைகளின்படி 2015 ஜூன் மாதம் 22 ஆம் திகதி தேசிய பூங்காவொன்றாக பிரகடனப்படுத்தப்பட்டது. பூங்கா புச்சிலைப்பலி மற்றும் கரச்சி பிரதேசங்களுக்கிடையில் அமைந்துள்ளதோடு இதற்கு அண்மையிலான நகரம் கிளிநொச்சியாகும்.
சுண்டிக்குளம் பூங்காவின் நிலம் களப்பு சூழல் அமைப்பொன்றினை அண்டி அமைந்துள்ளமையினால் இங்கு நன்னீர் மற்றும் உவர்நீர் நிலங்களினுடைய குணாதிசயங்களைக் காண முடியும். கடல் மட்டத்துக்குச் சமாந்தரமாக அமைந்துள்ள இது தாழ்நறில உலர் காலநிலைப் பண்புகளைக் காட்டும் பல சூழற் தொகுதிகளின் இணைப்பினால் ஆன சமவெளிப் பிரதேசம் என்பதோடுஇங்கு நீரின் உவர்த்தன்மை காலத்துக்குக்காலம் மாறிதல்களுக்கும் உட்படுகின்றது. வடகீழ் பருவ மழை மற்றும் வெப்ப மழை மூலம் மழை கிடைப்பதோடு வருடத்தில் ஏப்ரல் முதல் செப்டெம்பர் வரையான காலம் வரண்ட காலநிலையொன்றினைக் காட்டுகின்றது.
பல சூழல் அமைப்புக்களினால் ஆன இப்பூங்காவில் உயர் தாவர பன்முகத்தன்மையைக் கண்டு கொள்ள முடிகின்றது. அதன்படி தாவர இனங்கள் சுமார் 187 ஆனவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதோடு அவற்றில் பெருமளவு ஈரநிலத்தை அண்டி வளரும் தாவர இனங்கள் ஆகும். அவற்றில் சதுப்புநில புதர்கள் இனங்கள் மற்றும் கடற் புட்கள் இனங்களையும் பெருமளவில் கண்டு கொள்ள முடிகின்றது. சதுப்பு நில இனங்களாக சாம்பல் சதுப்பு நிலம், கறுப்பு சதுப்பு நிலம், கைதை, சிவப்பு சதுப்பு நிலம், கிண்ணை என்பவற்றைக் கண்டு கொள்ள முடிகின்றது. பாரியளவு தாவரங்களை பூங்காவினுள் காண முடியாவிட்டாலும் அவற்றுள் ஆசியப் பனையை காணலாம். மேலும் நீர்த் தாவர இனங்கள் சுமார் 18 உம் இனங்காணப்பட்டுள்ளன.
ஆசியப் பனை
பட்டைவால் மூக்கன்
சுண்டிக்குளம் தேசிய பூங்காதொடர்பான விளக்கத்தில் காணப்படும் விலங்குகளின் பெயர்ப் பட்டியல்
சுண்டிக்குளம் தேசிய பூங்காதொடர்பான விளக்கத்தில் காணப்படும் மரங்களின் பெயர்ப் பட்டியல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!