பீட்ருட்
பிரபாவிடம் பீட்ரூட் வாங்கி வாங்கோ என்றேன். பிரெஷ் இல்லையாம் என்று அவித்து பதப்படுத்திய BIO பீட்ரூட் அரை கிலோ பாக்கெட் இரண்டு வாங்கி வந்திருந்தார்.
இது அவித்த பீட்ரூட்..
மண் இல்லாமல் சுத்தமாக கழுவி, உலர வீட்டு காற்று புகாமல் பாக்கெட் செய்து 100 °C யில் ஆவியில் அவித்து குளிர் படுத்தி பிரிட்ஜ் ல் வைத்து மூன்று மாதம் வரை பயன்படுத்தலாம்.
தோல் சீவி சின்னதாக நறுக்கி, வெங்காயம் சில்லி தூள், உப்பு சேர்த்து எண்ணெய் விடாமல் நான்ஸ்டிக் சட்டியில் மூடி ஐந்து - பத்து நிமிடங்கள் மிதமான தீயில் வேக வீட்டு எடுத்தால் சூப்பர் கறி ரெடி.
பொதுவாக கிழங்கு வகைகளை உடனே வாங்கி சமைப்போம். அல்லது சில நாட்கள் வைத்து பயன் படுத்துவோம். வாரம், மாதம் என்று வைத்திருக்க முடியாது.
அப்படின்னு நான் பலர் நினைக்கின்றோம்.
ஆனால் அவைகளை சுவையும், ஊட்ட சத்துக்களும் மாற்றம் அடையாமல் பதப்படுத்தி பாதுகாக்கும் போது மாதங்கள், வருடங்களுக்கு பயன்படுத்த முடியும்.
இதை குறித்து முன்னரே தற்சார்பு குழுவில் எழுதி இருந்தேன். விவசாய உற்பத்தி அதிகமாகி சந்தைப்படுத்தல் வாய்ப்புகள் குறையும் போது ( திடீர் lockdown , ஊரடங்கு) அல்லது விலை மலிவான காலங்களில் வாங்கி வீட்டு தேவைகளுக்கு சேமித்தும் வைக்கலாம்.
சுவிஸ் ல் ஒன்பது மாதம் குளிர், மூன்று மாதம் மட்டுமே வெயில் .. அதிலும் மழைக்காலம், காலா நிலை மாற்றம் என்று பெரும்பாலும் குளிர் காலமே அதிகம் என்றாலும் கிராமத்து மக்கள் கிடைக்கும் வெயிலில் அடுத்து வரும் குளிர்காலத்துக்கு தேவையான காய், பழங்கள், கிழங்குகள் என்று விளைவித்து பதப்படுத்தி சேமித்து நிலவறைகளில் அடுக்கி விடுவார்கள்.
இங்கே நகர்ப்புற மக்களும், வெளி நாட்டவரும் தான் அதிகளவில் சூப்பர் மார்க்கட் நுகர்வோராக இருக்கின்றார்கள். கிராம மக்களுக்கு அங்கங்கே சிறிய மளிகைக்கடைகள் ( பால், இறைச்சி, பிரெஷ் பழங்கள், காய்கள், சாலட் ) இயற்கையான உற்பத்திகள் அவசர தேவைகளுக்கு வாங்கி கொள்ள முடியும்.
https://www.facebook.com/100000786292216/posts/3483198908382951/?d=n
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!