19 ஜூலை 2020

உளவியல் ஆலோசனை சொல்வோர்..!

உளவியல் ஆலோசனைகளுக்கு முக்கிய அடிப்படை கட்டுப்பாடு இரகசியம் காப்பது..  பெயர் சொல்லாமல் என்னுடன் பேசிய ஒருவருக்கு இப்படி பிரச்சனை .. இப்படி ஆலோசித்தேன்... அறிவுரைத்தேன் என எழுதி ... அதன் மூலம் தன் மீதான பிம்பத்தை பெரிதாக உருவாக்கும் சுய விளம்பர பிரியர்கள் அதிகமாக உலவுகின்றார்கள். 

( ஆலோசனை கேட்கும் நபரும் நண்பர் லிஸ்ட் என்பதை மறந்து  அவர் பெயர் சொல்லாமல் எழுதினாலும் அவருக்கு தன் பிரச்சனை இப்படி பொதுவில் பேசு பொருளானது ..   இனி மேல்  தனது பிரச்சனை, கவலையை இன்னொருவரிடம் சொல்லி ஆலோசனை கேட்பதுக்கான 
நம்பிக்கையை தகர்க்கும், அந்த நபரை தெரிந்த வேறு நபர்கள் வாசிக்கும் போது இது இன்னாரின் பிரச்சனை என புரிந்து கொள்வர்..  )

உளவியல் ஆலோசனை சொல்வோர் அதுக்கு முன்மாதிரிகளாக வாழ்ந்து காடடனும் எனும் புரிதல் இல்லாமல் பலர் இவ்வாறான பதிவுகளுக்கு கிடைக்கும் பிம்பத்தை நம்பி வீட்டில் பூச்சி களாக விழுந்து சிக்கலை தேடி கொள்கின்றார்கள். அவர்களின் பதிவுகளை, commentகள் வாசித்தால் 90 % அரசியல் வாதிகள் ரேஞ்சில் புகழ் மாலை ஆஹா.. ஓஹோ என்றிருக்கும்.. தவிர அவர் பகிர்ந்த விடயம் சார்ந்து இன்னொருவர் கேட்கும் ஆலோசனைகளுக்கு பதில் இருக்காது. இங்கே தங்களை உளவியல் ஆலோசகராக வெளிப்படுத்தும் பலரும் இன்னொரு நபரின் பிரச்சனைக்கு வழிகாட்டும், ஆலோசனை சொல்லும் முன்மாதிரிகளாக இல்லை.. உளவியல் ஆலோசனை செய்வதற்குப்படித்த பலருக்கு அத்தகைய நான் பார்த்தளவில் உளவியல் ஆலோசனை செய்வதற்குப்படித்த பலருக்கு அத்தகைய ஆலோசனை அவசியமாக உள்ளது என்பதே கசப்பான உண்மை😞

கவுன்சிலிங் தவறில்லை.. எல்லோருக்கும் ஒரே மாதிரியான வாழ்க்கை இல்லை .   பலருக்கு  எதோ ஒரு வகையில் ஆறுதல், அன்பு, ஆலோசனை தேவை படுகின்றது.. அதை யாரிடம் பெற்று கொள்கின்றோம் என்பதில் தான் கவனமாக இருக்கணும். மன அழுத்தத்துக்கான கவுன்சிலிங் குறித்து நானும் எழுதி இருக்கேன்.. ( ஒரு நிறுவனத்தின் நிர்வாக மேலாண்மையில் சக மனிதர்களை உளவியல் சார்ந்து அணுகும் முறையையும் சேர்த்தே கற்று கொள்ளவேண்டும்.. அவ்வாறான அனுபவத்தை பகிர்ந்துள்ளேன் ( என்னிடம் பேசுங்கள் என்று சொல்லவில்லை.. அது என் வேலையும் இல்லை ) 

எங்கள் சமூகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சிக்கலாக இது இருக்கின்றது. தற்கொலை, கொலை என அதிகரித்து வருகின்றது. உலகளவில் நடக்கும் தற்கொலைகளில் பெரும்பான்மை டிப்ரேஸிவ் மன அழுத்தத்தினால் என்கின்றது மருத்துவ அறிவியல் ஆய்வுகள்.. நாலு சுவற்றுக்குள், வீட்டுக்குள் அடைபட்டு வாழும் வெளி நாட்டு வாழ் மக்களுக்கு இணையதளத்தில் எழுதுவது, கிடைக்கும் கமெண்ட், நண்பர்களின் பாராட்டு ஊக்குவிய்ப்புகள் மன அழுத்தத்துக்கு வடிகாலாக இருக்கின்றது. அதே நேரம் மன அழுத்தத்தால் பாதிக்கப்படட நபருடன் மட்டும் பேசி ஆலோசனை சொல்லி அவர்களை மாற்றி விடலாம் என ...... ஒவ்வொரு பிரச்சனைக்கு பின்னும்  உங்களுக்கு மனம் விட்டு பேச யாரும் இல்லை என்றால் என்னுடன் பேசுங்கள், பேசினால் சரியாகும் என்பது போன்ற பதிவுகள் தவறானது. 

மன அழுத்தத்துக்கு கவன்சிலிங் தேவை ....  ஆனால் அது நேரடி மன நல மருத்துவர் மற்றும் மருத்துவர் உடன் இணைந்து பாதிக்கப்படும் நபர், குடும்ப உறவுகள், நண்பர்கள், வேலை செய்யும் இடத்து மேலதிகாரிகளுடன் பேசி அனைவர் ஒத்துழைப்புடன்  பேசி.. பேச விட்டு உள்ளத்திலிருக்கும் அழுத்தத்தை ஒன்று மில்லை என மீட்டு எடுக்கும் முயற்சியாக இருக்கணும். 

பிரச்சனை இல்லை என மூடி மறைக்காமல் தீர்வுகளை தேடுவது முக்கியம்.. Face  book  மூலம் கிடைக்கும் தீர்வுகள்  நிரந்தரமில்லை எனும் உணர்தல் அதை விட முக்கியம்.

Nisha



1 கருத்து:

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!