04 ஆகஸ்ட் 2020

உளவியல்_உண்மைகள்

அவரவர் வீட்டில் மகிழ்ச்சி இருக்கின்றதோ இல்லையோ எல்லோரும் மகிழ்வோடிப்பதாக வெளியில் காட்டி கொண்டு இருக்கின்றார்கள். இந்த போலித்தனத்திலிருந்து வெளி வந்து உள்ளத்திலிருக்கும் கசப்புக்களை, கவலைகள், துக்கங்களை பகிரும் போது உண்மையோடும் அக்கறையோடும் அமைதியாக பேச விட்டு கேட்க அன்பு செலுத்தும் நட்பு உண்டெனும் உறுதியை உருவாக்குவதும் உளவியல் தத்துவமே..!

நம்மை பற்றி அனைத்தையும் ஒருவரிடம் மனம் திறந்து பகிர முடிகின்றது என்றால் (நம்பிக்கை) அப்போது மனதை அழுத்தும் பாரங்கள் குறைந்து விடும் என்பதே மனோதத்துவ ஆலோசனைக்கு பின் இருக்கும் முக்கிய தத்துவம்.

மன பாரத்தோடு இருப்பவரை அவருள் இருக்கும்அனைத்தையும் வெளிப்படையாக பேச விட்டு கேளுங்கள்.அவரவர் நியாயம் அவரவருக்கு சரியாகவே இருக்கும் அதனால் ஒருவர் சொல்வதை வைத்து அதுவே சரி, பிழை நியாயம் தீர்க்கவும் ஆலோசனை சொல்லவும் வேண்டாம். ஆதரவும், அன்பும், உன்னை நான் புரிந்து கொண்டேன். உன்னுடன் நான் இருக்கின்றேன், உனக்கு மட்டும் இல்லை எல்லோருக்கும் பிரச்சனை உண்டு, அனைத்துக்கும் தீர்வு உண்டு எனும் நம்பிக்கையையும் கொடுங்கள்.


„ வாய் விட்டு சிரித்தால் மட்டும் அல்ல, மனம் விட்டு பேசினாலும் நோய் விட்டு போகும்“

2 கருத்துகள்:

  1. /மனம் விட்டுப் பேசினாலும் நோய் விட்டுப் போகும்!/ உண்மையான வார்த்தைகள்.

    பதிலளிநீக்கு
  2. உண்மைதான்.  இப்போதைய சூழ்நிலையில் அதற்கு கூட ஆள் இல்லை என்பதுதான் சோகம்.சொந்தக்காரர்களைக் கூட நெருங்காமல், இருமினால் தும்மினாலும் தூர விலகி ஓடி...!!

    பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!