08 பிப்ரவரி 2020

Fake I’d யில்

சிலர் சிலருடன் சாட்டிங் செய்ததாக கூறி Fake I’d  பெயரில் பெண்களை  மிரட்டுவதான ஸ்கிரீன் ஷாட் பகிர்வுகளை போட்டு பகிரும் சிலர் பதிவுகளை பார்க்கும் போது குறிப்பிடட சிலருக்கும், சில ஊடகங்களுக்கும் மட்டும் இவ்வாறான செய்திகள் எப்படி கிடைக்கின்றது எனும் கேள்விகளை எமக்குள் உருவாக்கி இருக்க வேண்டும்.

1. Fake  I’d யில் உரையாடியதாக பகிரப்படட Screen சாட்டின் தொலைபேசி இலக்கங்களை வைத்து அந்த ID க்குரியோர் விபரங்களை காவல் துறை அனுமதி இன்றி தொலைபேசித்துறை  தருகின்றதா?

2.Fake  I’d களை எப்படிஇன்னார் தான் என உறுதிப்படுத்தி கொண்டார்கள்?

3.தெரிந்தே குற்றமொன்றை செய்பவன் அதற்கான ஆதாரங்களை இந்தா பிடி என கிடைக்கும் படியா தப்பு செய்வான்?

4. பாதிக்கப்படும் பெண் அல்லது ஆண் இவர்களை தொடர்பு கொண்டு அவன் அல்லது அவள் ஏமாற்றி விட்டாள் அல்லது மிரட்டுகின்றார் என ஆதரவும் பாதுகாப்பும் கேட்கும்  படி இந்த ஊடகங்கள் அல்லது சில தனி நபர்கள் எவ்வகையில் நம்பிக்கை தருகின்றார்கள்?

5. பல்கலைக்கழக ராகிங்பிரச்சனை மட்டும் என்றில்லை இன்னும்  பல சம்பவங்களின் பின்னணி குறித்து குறிப்பிடட சிலருக்கும் பிரபலமாகாத சின்ன     ஊடகங்களுக்கும் மட்டும் எப்படி ஆதாரங்கள் கிடைக்கின்றன?

இரு நபர் அல்லது குழுவுக்குள் பேசப்படுவதான தொலைபேசித்தொடர்புகளை,  சேட்டிங், வாய்ஸ் செய்திகளை  குறிப்பிடட சில ஊடகங்கள் ( அத்தனை பிரபல்யமாகதவை ) ஒரே நாளில், இரவில் வெளியிடுகின்றன.அருகில் இருந்து அனைத்தையும் கண்காணித்து போல் ஆதாரங்களை அள்ளி வீசுகின்றன. ( பிரபலங்களை அல்லது சில விடயங்களை அம்பலப்படுத்த திடடமிட்டு ஆதாரங்களை சேகரிப்பது வேறு விடயம். இது அப்ப்டியானதல்ல)

திடடமிட்டு உண்மையாக நடத்தும் ஒன்றை ( நாடகம்) பகிர்வது போல் அனைத்து ஆதாரங்களோடும் பகிருங்கள் என குறிப்பிடட ஊடகங்களுக்கு தந்து  விட்டு ( செய்வது தவறென உணராமல் செயல் பட்டிருப்பார்கள் என்பதை நம்ப முடியாது ) தைரியமாக குற்றம் செய்திருக்கின்றார்கள் எனில்

• இலகுவாக தொலைபேசி, மெயில், கடித தொடர்புகள் வெளிப்படுத்தபெற்றுக்கொள்ளத்தக்கதாக பாதுகாப்பில்லாத  தொடர்பாடல்களை குறித்த பயமோ பதடடமோ, குற்ற உணர்வோ இல்லாமல் கட்டுப்பாடில்லாத அறியாமை கொண்டவர்களா?

• உயர்தரம் கற்ற, பல்கலைக்கழகம் அனுமதி பெற்ற இளையோர் உலக அறிவில்லாது, குறுகிய சிந்தனையோடு வளர்ந்திருக்கின்றார்களா?

• தற்காப்பு, சுய பாதுகாப்பு சிறிதும் இல்லாத அறிவற்ற மூடர்களா எம் இளையோர்?

ஏழை, படிப்பில்லை எனும் நொண்டிசாக்கை சொல்லி எங்கள் சமூகத்தின் அறிவையும் ஆற்றலையும் குறைத்து மதிப்பிடாமல் சிந்தித்து பார்க்க வேண்டும்

சம்பந்தப்பட்ட பெண் தொலைபேசியினுடாக குறிப்பிடட உரையாடல் வெளி வந்தது என்றாலும் குறிப்பாக இந்த ஊடகத்தை தேடி அத்தனை ஆதாரங்களையும் எப்படி பகிர முடியும் எனும் சாதாரண கேள்வி வரவில்லையா?

 நடந்த சம்பவங்கள், பாதிப்புக்கள் உண்மை தான்  என்பதில் மாற்று கருத்து இல்லை என்ற போதும், அவை உண்மையில் நடத்தப்பட்டு எமக்கான கல்வியை தூரமாக்கி எமது இளையோரை குறிவைக்க பட்டிருக்கும் துப்பாக்கியின் கூர்முனை
யூதர்களை தேடித்தேடி விசவாயுவால் அழித்த ஹிட்லரின் சாடிசத்துக்கு நிகரானது.

அழிக்கப்படுவதும் பாதிக்கப்படுவதும் எவனோ எவளோ அல்ல.
எம்மவன், தமிழன்...!

ஈஸ்ரர் குண்டு வெடிப்பில் குற்றம் சாடடபடட போது இஸ்லாமியர்கள் எத்துணை ஒற்றுமையாக அப்பிரச்சனையை எதிர் கொண்டார்கள்?

அவர்கள் சார்ந்த ஊடகங்கள் தங்கள் சுயத்தை விட்டுக்கொடுக்காது குற்றவாளிகள் என இனம் காடட ப்பட்டவர்கள் குறித்து தெளிவாக முடிவுகளை வெளிப்படுத்தினார்கள்.
அவர்கள் மீதான அடக்குமுறையை முறியடித்தார்கள் என்பதை உணர்ந்த பின்னும் ........
.
யாருக்கோ எங்கோ நடக்கும் ஒன்றேனும் வரை அது செய்தியாக இருக்கும்.
அது நம்மைக்குறித்தேனும் போது சம்பவமாகி பேசு பொருளாக நாமும் இருப்போம்.

வெளி நாடுகளில் இப்படியான சம்பவங்கள் நடக்கும் போது பொதுவெளியில் பகிர்ந்து சக மாணவர்கள் மன நிலையை குழப்பி பதடடப்படுத்த மாடடார்கள்.

போலித்தன ஊடகங்கள்சு, யநலஅரசியல் வாதிகளை போல் சமூகப்பொறுப்பு மிக்க கல்விமான்களும் ஆய்வுகள் இன்றி சம்பவங்களின் உண்மை தன்மை ஆராயாமல் செய்திகளை காவுவது கவலைக்குரியது🔥


1 கருத்து:

  1. 24 மணி நேர ஒளிபரப்பிற்கு இவர்களுக்கு Content தேவையாக இருக்கிறது - டி.ஆர்.பி. ரேட்டிங்க் போட்டி வேறு சேர்ந்து கொள்ள, உண்மை இருக்கிறதோ இல்லையோ, யார் முதலில் பரபரப்பு செய்தி வெளியிடுவது என்பது ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு இயங்குகிறார்கள். வேதனை தரும் மீடியா வேலைகள்...

    பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!