உழவன் நாள்
அறுவடை நாள்
தைத்திரு நாள் வாழ்த்துகள்
எனது அம்மா வழி தாத்தா ஓர் உழவன்!
இதில் எனக்கு பெருமை❤️💃
இலங்கையில் கிழக்கு மாகாணம், திருகோணமலையில், தம்பலகாமம் எனும் வேளாண்மை கிராமத்தின் வயலும் வாழ்வுமாக நெல், வாழை, தென்னந்தோட்டங்களில் தங்கள் உயிர்ப்பை உணர்த்திய
பராம்பரியம், பழமை
பண்பாடடை,பாதுகாக்கும்
உழவன் மகனாய்
மேன்மை மிகு மாமனும்,
அவர் தம் மக்களும்
ஓலைக்குடிலும்
மாட்டுசாண தரை மெழுகலும்
திருக்கோணேஸ்வரத்திலிருந்து
கதிர்காமம் போகும் முருகனை
சுமந்து செல்லும் மயில் உதிர்த்த
மயிலிறகும்... 😍
ஏழ்மையிலும் எளிமையாக
நெல்லவித்து குத்தி வரும் உடன் தவிட்டு சிவப்பு அரிசிக்கோறுடன்
மாமி சமைத்த முருங்கை இல்ல சுண்டலும்
அமிர்தமான காலங்கள்.
மலை உச்சியில் மகாவலியாய்
உயிர்த்து கடலில் சங்கமிக்க
பயணிக்கும் நதி,
கரையோடும், ஊரோடும்
வாய்க்காலாகி
நெல்லுக்கும் புல்லுக்கும் பொசிந்து
குளிக்க துவைக்க
கூடிக் கும்மாளமிட
குன்றுகளாய் கரும் எருமை
இளைப்பாற
சேற்றில் புரண்டு
சோற்றை அள்ளி உண்ண
வயலும் வாழ்வுமாக
மண்ணை பதப்படுத்தி
எம்மை உயிர்ப்பித்த
உழவன் நாள்!
அறுவடைப்பெரு நாள் !
நெற்பல பொலிக!
பொன்பெரிது சிறக்க!"
விளைக வயலே! அருக இரவலர்!"
பால்பல ஊறுக! பகடுபல சிறக்க!"
அறம்நனி சிறக்க! அல்லது கெடுக!
பசிஇல் லாகுக! பிணி சேண் நீங்குக!
நன்று பெரிதுசிறக்க! தீதில் லாகுக!!
மாரி வாய்க்க! வளம்நனி சிறக்க!
நண்பர்கள்
அன்பர்கள்
உறவுகள்
அனைவருக்கும்
தைத்திரு நாள் வாழ்த்துகள்
புகைப்படத்தில் மாமனும், மாமன் மகனும் Shankar Mari and Thiyani Shankar
அவர் தம் சுற்றமும் ( Trincomale , Tambalakamam)
ஆ ஹா..அருமை...படங்களுடன் பதிவிட்டு வாழ்த்துச் சொன்னவிதம் அருமை...வாழ்த்துக்களுடன்..
பதிலளிநீக்குஇனிய நினைவுகள்.
பதிலளிநீக்குதங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த பொங்கல் நல்வாழ்த்துகள்.