கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி உண்ணாவிரதம் இருக்கும் புத்த பிக்குக்கள் குறித்து
எள்ளு காய்வது எண்ணைக்கு, ஆனால் கல்முனையில் எலிப்புழுக்கு எதுக்காக காய்கிறது ?
எனும் இம்போர்ட் மீரர் செய்தியாளரின் பதிவில் நியாயம் இருக்கத்தான் செய்கின்றது?
தமிழ் பேசும் சைவர்கள்,கிறிஸ்தவர்களையும் , தமிழ் பேசும் சோனகர் சமூகத்தவர்களையும் பிரித்தே ஆக வேண்டும் எனும் திட்டமிட்ட செயல் பாடுகள் வெற்றி பெற்றுக்கொண்டிருக்கும் இறுக்கமான சூழலில் செய்தியாளர் தமிழர்கள் சார்பாக நியாயமாக கேள்விகளை தான் கேட்டிருக்கின்றார். அதற்காக இம்போர்ட் மீரருக்கும், அதன் செய்தியாளருக்கும் பாராட்டுகளை தெரிவிக்கின்றேன். சரியான நேரத்தில் தகுந்த கேள்விகளோடு பதிவொன்றை இட்டு சிந்திக்க செய்தமைக்கு நன்றி.
அதே நேரம் கல்முனை வாழ் முஸ்லிம் சமுகம் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கூடாது என சத்யாக்கிரக போராட்டம் நடத்துவதும், தொடர்ந்து எதிர்ப்பதற்குமான பின்னனி காரணத்தை இம்போர்ட் மீரர் நிர்வாகிMunas Mps, முன்னாள் பொறுப்பாளர் Nisamudeen Risly Samsadபோன்றோர்கள் விளக்கம் தர முடியுமா?
தமிழர்கள் பகுதியான வடக்கு பக்கம் நிலப்பரப்பு அதிகமாகவும், மக்கள் செறிவு குறைந்தும், முஸ்லிம் சமூகத்தவர் வாழும் பக்கம் மக்கள் செறிவு அடத்தியாகவும், நிலப்பரப்பு குறுகியும் காணப்படுவதனால் தான் முஸ்லிம் சமூகம்.
தமிழர்களுக்காக பகுதி தரமுயர்த்துவதை எதிர்க்கின்றார்கள் என நான் கேள்விப்பட்டிருப்பது சரியான தகவலா?
காலத்தில் தேவை கருதி இதற்காக பதிலை நேர்மையான முறையில் எதிர்பார்க்கின்றேன்.
இரு பதிவுகள் சம்பந்தமாகவும், முழுச்செய்தியும் படிக்க முதல் பின்னூட்டத்தில் இணைக்கும் லிங்க கிளிக் செய்யுங்கள்.
எலிப் புழுக்கை என்பதே சரியான சொற்பதம். எலிப்புடுக்கு என்பது
பதிலளிநீக்குதவறான சொல் பழமொழிகள் எடுத்தாளும் போது பிழையின்றி எடுத்தாளப்படவேண்டும்.
உங்கள் வருகைக்கும் சுட்டிக்காட்டலுக்கும் நன்றி. ஒரெழுத்து பிழையில் அர்த்தமே மாறி விட்டது. மன்னிக்கவும்.
நீக்குதவறுகளைச்சுட்டிக்காட்டும்போது திருத்திக்கொள்வது தான் மனித
பதிலளிநீக்குபண்பு அது உங்களிடம் காணப்படவில்லை என்பதே ஜதார்த்தம்
புரியவில்லை.... என்ன தவறை திருத்திக்கொள்ளவில்லை?
நீக்கு