15 நவம்பர் 2018

குறள்களும் குரல்களும். / வலைப்பதிவுகளில் என் பதில்கள்


திண்டுக்கல் தனபாலன் அவர்களின் வலைப்பக்கம் பத்து கேள்விகளை கேட்டிருந்தார்கள். அக்கேள்விகளும் கேள்விகளுக்கான என் பதில்கல்களும். 
1. தலைமை என்றால்? 
அ.சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து. 
 
.நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்
யாநலத்து உள்ளதூஉம் அன்று 
தன்னம்பிக்கை மிக்கவராக,சுய மதிப்பிடல், சுயஆளுமை கொண்டவராக இருக்க வேண்டும். (self-esteem) தன்னிலிருந்தே மாற்றங்களை விதைப்பவரே சிறந்த தலைமைப்பண்புக்கு தகுதியானவர்.
தம்மையும்,தம் சொல்லையும் வெல்ல இனி எவரும் இல்லை எனும் நம்பிக்கையை தருபவராக இருக்க வேண்டும். பேச்சால்,செயலால், அன்பால் தனக்கு பின் தொடர்பவர்களை வழி நடத்தும் திறமை கொண்டிருக்க வேண்டும். நம்பினவர்களை கைவிடாத உறுதியும் கைவிட மாட்டார் எனும் நம்பிக்கையை பெற்றவராகவும் இருக்க வேண்டும். 

2.சிந்தித்தால் போதுமா? 
இல்லை, இல்லவே இல்லை.  
அ. ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்
நீள்வினையால் நீளும் குடி.  

.கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்
பெருமையின் பீடுடையது இல்.
சிந்தனைகளை செயல்படுத்தி  வீட்டையும் நாட்டையும்மேன்மை பெற வைக்க  வேண்டும். .   

.சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்
சொல்வதும், சிந்திப்பதும் எளிது தான். அதை  சொல்லிய படி செய்ய வேண்டும் 
சிந்தனைகளை செயல்படுத்த நினைக்காதவர்களை குறித்து பாரதியார் பாடி இருப்பதை பாருங்களேன். . 
“நெஞ்சில் உரமும் இன்றி,நேர்மைத் திறமும் இன்றிவஞ்சனை செய்வாரடி – கிளியேவாய்ச்சொல்லில் வீரரடி”

3.நல்லவராக இருந்தால் போதுமா? 
இல்லை,  நல்லவர் எல்லோருமே தங்களை தவிர எல்லோரும்  நல்லவர்கள் அல்ல எனும் சுய பெருமைக்குள் சிக்கி இருப்பார்கள். அதனால் எவருக்கும் பயனில்லை. 

அ.இணருழ்த்தும் நாறா மலரனையர் கற்றது
உணர விரித்துரையா தார்.  

தான் கற்றதைப் பிறர் மனங்கொள்ள விளக்கிச்சொல்லும் ஆற்றல் அற்றவர் வாசனை வீசாத  மலரை போன்றவர். நல்லவராக இருந்தாலும்  பிறருக்கு பயன் படாதவராக, சமுதாயத்து சிந்தனை அற்றவராக இருந்தால் எவருக்கும் பயனில்லை.  நல்லவராகவும் நாலு பேருக்கு நல்லது  சொல்பவராகவும், செய்பவராகவும் இருக்க வேண்டும். ஏட்டுச்சுரக்காய் கறிக்குதாவது போல் நல்லவர் பட்டம் மட்டும் போதாது. 

4.  மற்றவர்களுக்கு எப்படி புரிய வைக்கின்றது
 நம்ம வாழும் வாழ்க்கையை முன்னுதாரணமாக்கி தான்.
அ.கற்க கசடறக் கற்பவை கற்றபின் 
நிற்க அதற்குத் தக   
 மற்றவர்கள் எதை செய்யக்கூடாது என நாம் சொல்கின்றோமோ அதை நாமும் செய்யாமல் வாழ்ந்து காட்ட வேண்டும். கல்வி என்பது ஏட்டுக்கல்வி மட்டும் இல்லை. பட்டறிவும் கல்வி தான். பல நூல்கள் படித்து நாம் அறிந்து கொள்வதை நாம் பின்பற்றும் போது மற்றவர்கள் தாமாகவே புரிந்து  கொள்வார்கள்.  சொல்லை விட செயல் முக்கியம்.   
  
5. கூடவே இருப்பவர்கள் எப்படி இருக்க வேண்டும்? 
ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்; மூடருக்குத் தோழனோ நாசமடைவான்.  
 அ.உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.
என்ன தான் படித்திருந்தாலும் நல்லதை ஏற்று கெட்டதை விலக்க கூடியவர்களாக நம் நட்புக்கள் இருக்க வேண்டும்.

ஆ.இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் 
கெடுப்பா ரிலானுங் கெடும்.

நாம் தவறு செய்தால்  அதைக்கடிந்து திருத்துபவர்களாக இருக்க வேண்டும். 

6. சூழ்ச்சிகளும் தடைகளும்? 
அ.நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
ஒட்டாரை ஒட்டிக் கொளல்.  

ஆ.துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை.

எந்த விளைவுகளுக்கும் எதிர் விளைவுகள் உண்டு. குடும்ப வாழ்க்கையிலும் , சமூக வாழ்க்கையிலும் ரோபோ போல் செயல் பட முடியாது.  நல்லது  இருந்தால் கெட்டதும் அங்கே இருக்கும், சாதகம் இருந்தால் பாதகங்களும் உருவாகும்.  நாம் நம்ம கடமையை செய்திட்டே இருக்கணும். முடிந்தால் அவர்களுக்கு  புரிய வைத்து  நம் கூட சேர்த்துக்க பார்க்கலாம்.  காரியம் சித்தி பெற அதை எதிர்ப்பவர்களை கூட்டு சேர்த்து கொள்வது புத்திசாலித்தனம். சூழ்ச்சிகளை வெல்லும் தந்திரம் நமக்கு தெரிந்திருக்க வேண்டும். தலைமைப்பண்புக்கு இதுவும் முக்கியம். 

7.ஏட்டுச்சுரக்காய் கறிக்கு உதவுமா? 
உண்மையில் இந்த கேள்வியை கவனிக்காமல் மூன்றாவது கேள்விக்கு இந்த பழமொழியை  பதிலாக்கி இருக்கின்றேன். 
அ.முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்
திறப்பாடு இலாஅ தவர்  
திறம்படச் செயல்படத் தெரியாதவர்களிடம் சிக்கிக்கொள்ளும் காரியம் முழுமையடையாமல், முடங்கிப் போய்விடும்.  எந்த செயலானாலும்  கற்றலுடன், பயிற்சியும், திறமைவும்  முக்கியம். 
முயலும் வெல்லும்
ஆமையும் வெல்லும்
முயலாமை வெல்லாது 
ஏட்டுச்சுரக்காயும் அப்படித்தான். 

8.சொல்புத்தி, செயல் புத்தி?
தலையில்  தண்ணீரை கொட்டி தலை முழுகி விட வேண்டியது தான். அவரவர் வாழ்க்கை அவரவர் கைகளில் 
சொல்வது நம் கடமை கேட்பது அவர்கள் இஷ்டம் 
என்னோட பாலிசி இது தான். 
 1.ஆலோசனையைக் கேட்கிறவர்களிடத்திலோ ஞானம் உண்டு. 
11.புத்திமதிகளைத் தள்ளுகிறவன் தரித்திரத்தையும் இலச்சையையும் அடைவான்; கடிந்து கொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ கனமடைவான் 
  
9. சுய நலவாதி? 
 அ.அன்பு இலார் எல்லாம் தமக்கு உரியர் ; அன்பு உடையார்,
என்பும் உரியர், பிறர்க்கு
அன்பும், பண்பும், இல்லாதவர்கள். காணும் அனைத்தையும் தமக்கென உரிமை கொண்டாடுபவர்கள். அவர்களை நாம் நம்ப வேண்டாம். 
‘உன்னைப்போல் பிறரையும் நேசி’  என்கின்றது  கிறிஸ்தவர்களின் பைபிள் 

10. முதல் கேள்விக்கு பதில்?
.வியவற்க எஞ்ஞான்றும் தன்னை, நயவற்க
நன்றி பயவா வினை.
.யான்எனது என்னும் செருக்குஅறுப்பான வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்.

2 கருத்துகள்:

  1. நன்றி... மிக்க நன்றி...

    'அமைச்சு' அதிகாரத்தின் குறள்களுக்கு குறள்...

    பாராட்டுக்கள்... வாழ்த்துகள் சகோதரி...

    பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!