06 நவம்பர் 2018

மனித அம்மாக்களுக்கு கரடி அம்மா கற்றுத்தரும் பாடம் என்ன?

வீடியோ சொல்லும் அருமையான வாழ்க்கைப்பாடம். 

குட்டிக்கரடியின் அக்டிவிட்டி, விடா முயற்சி,  இலக்கை அடையும் வரை  சோர்ந்து விடாமல், விழுந்தாலும்  நின்று நிதானிக்காமல் அம்மாவை தேடி அழாமல்  தன் இலக்கை  மட்டுமே நோக்கிய பயணம்,  அழகான   வாழ்க்கைப்போதனையை தருகின்றது. 

வீடியோவை பார்த்து கொண்டிருக்கும் ஒவ்வொரு நொடியும் திக் திக, கண் கொட்டாமல் பார்த்து கொண்டே இருந்தேன். எத்தனை முயற்சி. கடைசியில் சட்டென கிட்டத்தட்ட 3000 அடி சறுக்கி கீழே வந்தும் மீண்டும் மீண்டும் முயற்சித்து தாயுடன் இணைந்ததும் தாய்க்கரடி தூக்கி கொஞ்சவும் இல்லை, நின்று நிதானிக்கவும் இல்லை. மாலை மரியாதையும் இல்லை.  ஆஹா ஓஓ ஓஹோ    நான் மேலேறி வந்திட்டேன் என  ஆர்ப்பரிப்பும் இல்லை.  அம்மாக்கரடி வீர நடை போட்டு முன்  நடக்கின்றது. குட்டிக்கரடி அம்மாவை பின் தொடர்கின்றது.

மனித அம்மாக்களுக்கு கரடி அம்மா கற்றுத்தரும் பாடம் என்ன?

அம்மாக்கரடி குட்டிக்கரடிக்கு உதவி செய்ய எப்போது வேண்டுமானலும் சர்ர்ர்ர்ர்னு சறுக்கி வரும் என நப்பாசை ... பிள்ளைக்கரடி விழுந்து விழுந்து மேலே போய் திரும்ப விழுந்து .... என்ன அம்மா இந்த அம்மாக்கரடி என என் மனதுக்குள் திட்டி தீர்த்தேன்.

மனது கேட்காமல் ஒரே ஒரு முறை கிட்ட வரும் குட்டியை எக்கிப்பிடிக்க முயற்சிக்க அதுவே பிள்ளைக்கரடிக்கு பதற்றம் தந்து முன்னரை விட நீண்ட தூரம் கீழே சறுக்க... அதன் பின் அம்மாக்கரடியின் பதற்றம் அதன் நடையில் தெரிகின்றது. ஆனாலும் மனித அம்மாக்கள் போல் என் பிள்ளையை பிடிக்க போகின்றேன் என தானும் சர்ர்ர்ர்னு சறுக்கவில்லை.

நீயாக மேலேறி வா.. நான் உனக்காக காத்திருக்கின்றேன் என அங்குமிங்கும், நடந்த படி காத்திருக்கின்றது. உன்னை விட்டு எங்கேயும் போகவில்லை, உன்னுடன் இருக்கின்றேன் என அப்பப்போ தன்னை வெளிப்படுத்துகின்றது.

இந்த கரடி அம்மா உலகின் அற்புதமான அம்மா.

எல்லா அம்மாக்களுக்கும் தன் பிள்ளை சாதிக்க வேண்டும் எனும் ஆசை தான். ஆனால் அதை எப்படி நாம் பிள்ளைக்குள் ஊன்றுகின்றோம் எனும் வாழ்க்கை பாடத்தினை கற்று தரும் கரடி
ஷோ ஸ்வீட். ஐ லவ் அம்மா அண்ட் குட்டிக்கரடி.
முயலும் வெல்லும். 
ஆமையும் வெல்லும்
முயலாமை வெல்லாது.

முடியாது என்று சொல்பவன் முட்டாள்..!
முடியுமா என்று கேட்பவன் மூடன்!! 
முடியும் என்று முயற்சிப்பவனே மனிதன் ...!!!

 விடா முயற்சி எனும் வாழ்க்கை பாடத்தினை கற்றுத்தரும் கரடிகுட்டி.
அதன் முயற்சிகாக காத்திருக்கும் அம்மா.   

Life is hart.but so am I.!!! 

 நாம் யாராக வேண்டும் என நாம் தான் தீர்மானிக்க வேண்டும், 
சாதாரண வீடியோ தான் ஆனால் அது தரும்  உந்து சக்தி அசாத்தியமானது. 
கரடிக்குட்டியின் விடா முயற்சி நாம் யாராக வேண்டும் என கற்றுத்தருகின்றது.
“Never, never, never give up.”

7 கருத்துகள்:

 1. செம கருத்து நிஷா! குட்டி ஏறியதும் அம்மா ஒரு துள்ளல் போட்டு ஓடுது உடனே குட்டியும் அதே போல ஓடி நடக்குது...ஹையோ ரொம்பவே ரசித்துப் பார்த்தேன்... பதிவைப் படித்துவிட்டுப் பார்த்ததால் குட்டி ஏறிவிடும் என்ற நம்பிக்கை...பதிவை வாசிக்காமல் பார்த்திருந்தால் கண்டிப்பாக திக் திக் சீட் நுனி விரல் நகம் கடிதான்...ஹா ஹா

  அருமையான வீடியோ பகிர்வு நிஷா...ரொம்ப நாளாச்சு உங்களைப் பார்த்து...நலம் தானே!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் நலம் கீதா, நீங்கள் எல்லோரும் நலம் தானே? நான் அவ்வப்போது எங்கள் பிளாக் பக்கம் தலை காட்டுவேனே.. கவனிக்கவில்லையா?

   உண்மை தான், கருத்தில்லாமல் வீடியோ பார்த்தால் ஒவ்வொரு நொடியும் திக் திக் தான். பதிவிடும் போது கருத்து இடாமல் பதிவிட முடியாதே? பதிவை படிக்க முன் வீடியோவை பாருங்கள் என எழுதி விடலாமோ?

   எனக்கு இந்த குட்டிக்கரடியை ரெம்ப பிசித்து போச்சிது. என்னை போலவே இருக்குது ஹாஹா

   நீக்கு
 2. அருமையான காணொளி. நானும் நேற்று தான் பார்த்து ரசித்தேன்.

  உங்கள் கருத்துகளும் சிறப்பு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி வெங்கட் நாகராஜ் சார்.

   உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.

   உங்களுக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்

   நீக்கு
 3. அருமை...

  இனிய தீபத்திருநாள் வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர்க்கும் அன்பு நல் வாழ்த்துகள் சார். பின்னூட்டத்துக்கும் நன்றி

   நீக்கு
 4. மிருகங்கள் அன்புக்கு மனிதர்கள் போட்டியிட முடியுமா...???

  பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!