30 அக்டோபர் 2018

ரௌத்திரம் பழகுவோம்.

ரௌத்திரம் பழகுவோம். 
********************************

பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா,

மோதி மிதித்துவிடு பாப்பா - அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா.

இது நாம் சிறுவயதில் கற்பது தான். இந்த தார்மீக கோபம் நமக்குள் எப்போதும் உறங்கி கொண்டே இருக்க வேண்டும். கோபப்பட வேண்டிய இடத்தில் குணமாக சொல்வதெல்லாம் செல்லுபடியாகுமா என நாம் தான் சூழலை வைத்து புரிந்து முடிவெடுக்க வேண்டும்.
தர்மமும், நீதியும் தோற்று அதர்மமும், அநீதியும் தலையெடுக்கும் காலத்திலும் குணமாக தான் சொல்லி திருத்த வேண்டும் என நினைத்து செயல் பட்டோமானால் எந்த பயனும் இருக்க போவதில்லை.
ரௌத்திரம் பேணுதல் எங்கே முக்கியம் என முடிவெடுக்க முடியாமல் கோபத்தை அடக்குவதற்கு கற்பிப்பதும் தவறே.
ஐந்தறிவு மிருகங்களுக்கு கூட தன்னை சீண்டினால் எதிர்த்து தாக்க வேண்டும், தன்னை காத்து கொள்ள வேண்டும் எனும் உணர்வு இருக்கும் போது மனிதருக்குள் அவ்வாறான எதிர்ப்புணர்வும், சுய சிந்தனையும், தார்மீக கோபமும் இருக்க கூடாது என எதிர்பார்ப்பதும் தவறே.
கோபத்தை அடக்க ஆயிரம் வழி சொல்லும் நமது சமூகம் நியாயத்துக்காக குரல் கொடுக்கும் சினமும் அவசியம் என உணர்த்தாமல் போனதனால் நாம் இழந்தவைகள் அனேகம்.
இனியும் இழக்க ஏதுமுண்டா என நம்மை நாமே ஆராய்ந்தால் நமது இயலாமையே நம்முள் கோபமாக வெளிப்பட்டு ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டெனும் இன்னொரு புறத்தினை மட்டுமே உணர்த்தி நிற்பதையும் நாமே உணர்வோம்.

➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤ 

செல்ஃபி மோகம்
*********************
பிரபல்யமானவர்கள் உடன் நின்று எடுக்கப்படும் புகைப்படங்களுக்கான மவுசும், மரியாதையும் பெரிதென இவ்வுலகம் உணர்த்தி நிற்கும் வரை நாம் என்ன சொன்னாலும் எவரும் திருந்தபோவதில்லை. இன்னாருடன் இணைந்து புகைப்படம் எடுத்தேன் என்பது தற்புகழ்ச்சிகுரியதாக மட்டுமல்ல அவருக்கான பெரும் சாதனையாக கொண்டு ஆஹா, ஓஹோ அபபடியா, நீ பெரிய ஆளுப்பா என பாராட்டுதல்களோடு அதுவே மிகப்பெரிய இமேஜ் சான்றெனப்படும் வரை செல்ஃபிக்களுக்கு ஓய்வும் இல்லை
மரணமே வந்தாலும் பிணத்துடனும் செல்ஃபி எடுத்தே தீருவோம் சங்கத்தின் சார்பில் உங்கள் நிஷா.

🤣🤣🤣🤣🤣🤣🤣

எங்க சங்கத்தில் நீங்கள் எப்போது இணைய போகின்றீர்கள் நட்புக்களே ?👁️👁️👁️ 👁️👁️

6 கருத்துகள்:

  1. செல்லா இடத்து சினம் தீது என்று வள்ளுவர் சொல்லி இருந்தாலும் நியாயங்களுக்காக குரல் கொடுத்து கோபப்படுவது இந்நாளில் குறைந்தே இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான், குரல் கொடுக்க வேண்டியவைகளுக்கு குரல் கொடுப்போரை கண்டு கொள்ளவும் எவருமிலர்.

      உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி

      நீக்கு
  2. சிவகுமார் செயலில் பெரிய தவறுஇல்லை. பிரபலமானவர் என்பதால் நாம் உற்று கவனிக்கப்படுவோம் என்பதை உணர்ந்து அவர் கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கலாம். மனமார மன்னிப்பும் கேட்டு விட்டார். தேவை இல்லாத ஒரு சம்பவம்!​

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மீ டூ அலையை ஓய வைத்த சம்பவம் எனவும் கொள்க.

      நீக்கு
  3. பதில்கள்
    1. புரியவில்லை . எங்கே என்ன கொடுமை சார்?

      நீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!