டிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ்
தோசை வார்க்கும் சட்டிகளில் பரோட்டா, சப்பாத்தி, போன்றவைகளும் எண்ணெய் சேர்த்த பொரியல்வகைகளும் செய்தால் சட்டியிலிருந்து தோசை கிளம்பாமல் ஒட்டிக்கொண்டு அடம்பிடிக்கும், இரும்புச்சட்டியிலோ, நான்ஸ்டிக் சட்டியிலோ தோசை வார்க்க முன் சட்டியை அடுப்பில் வைத்து சூடாக்கி அதன் மேல் சமையல் உப்பை தூவி கோல்ட் கலராகும் வரை வறுத்து கொட்டி விட்டு சட்டியை கழுவி அல்லது நன்கு துடைத்து மீண்டும் சூடாக்கி எண்ணெய் தடவி தோசை வார்த்து பாருங்கள் முதல் தோசை அடம் பிடிக்கும், இரண்டாம் தோசை ஜம்ம்ம்முன்னு இலகுவாக மேலே கிளம்பி வரும், புதிய ஆப்பச்சட்டியைப்பழக்கவும், புதிய தோசைக்கல், சட்டிகளை பழக்கவும் இதே முறை தான்.
அருமை
பதிலளிநீக்குதம 1
தங்கள் தொடர் ஆதரவுக்கும் ஊக்கப்படுத்தலுக்கும் நன்றி ஐயா
நீக்குஒரு மாதமாக பதிவு வராததால் காரணம் அறியாமல் இருந்தேன் இன்று விளங்கி விட்டது தோசை ஆராய்ச்சி தொடரட்டும்
பதிலளிநீக்குஅடுத்து இட்லி வரும் என்று விழாக்கமிட்டியாளர்களால் எதிர் பார்க்கப்படுகிறது.
ஹாஹா! நான் சொல்லிவிட்டுத்தானே காணாமல் போனேன் கில்லர்ஜி சார்? வேலை அதிகம் சார். ஆனால் தோசையை கண்ணால் கண்டே ரெம்ப நாள் ஆச்சு சார். தினம் சப்பாத்தி, பூரி, சாதம் என தான் ஹோட்டலிலும் ரன்னிங்க. இந்தப்பதிவு பேஸ்புக்கில் வேறொருத்தர் பதிவில் நான் இட்ட பின்னூட்டம்,அதை இங்கே தனிப்பதிவாக்கி இட்டேன். அதையும் மேக்கப், பேஷியல், டச்சப் என படமெல்லாம் தேடி எடுத்து பதிய நேரம் இல்லை என்றால் பாருங்களேன்!
நீக்கு
பதிலளிநீக்குஆஹா. இனி தைரியமாக
தோசை ஊற்றி நல்ல பெயர் எடுத்துவிடுவேன்
டிப்ஸ் கொடுத்தமைக்கு நல்வாழ்த்துக்கள்
ஆஹா.பொதுவாக தனியாக வசிப்போருக்கும், வெளி நாட்டுப்பயணம் செய்வோருக்கும் வெளி நாட்டில் வசிப்போருக்கும் பெரிய பிரச்சனையே சட்டியோடு ஒட்டும் ஆம்லெட்டை எப்படி உடையாமல் எடுப்பது என்பதும் தோசையை திருப்பிப்போடுவதும் தானே?
நீக்குவாவ் !! நல்ல டிப்ஸ் நிஷா ஒரு நான்ஸ்டிக் ஆப்ப சட்டி இருக்கு இதுவரைக்கும் ஒன்னும் செய்ய முடில எப்ப ஆப்பம் ஊற்றினாலும் சுருளும் இந்த மாதிரி செய்து பார்க்கிறேன் ..
பதிலளிநீக்குநான் தோசை சப்பாத்திக்கி தனித்தனி கல்தான் யூஸ் பண்ணுவேன்
ம்ம் பலர் அப்படித்தானபா. ஆனால் எங்க வீட்டில் பல நேரம் இது மாறி விடும். நான்ஸ்டிக் சட்டிகளையே தோசை வார்க்கவும் பயன் படுத்துவதனால் மறந்து போய் வேறு ஏதேனும் சமையலுக்கும் பயன் படுத்தி விடுவேன்.
நீக்குநல்ல டிப்ஸ் நிஷாக்கா. எங்க வீட்டுல சப்பாத்தி, பராத்தாவுக்குன்னு தனி தவா வச்சிருக்குறாதால ஒரு பிரச்சனையுமில்ல.
பதிலளிநீக்குதம 6
நன்றி ராஜி. ஊரிலிருக்கும் வரை அம்மா வீட்டில் தோசைக்கு இருப்பு தோசைக்கல்தான்.அது விறகடுப்பில் தோசை சுட இலகுவாயிருந்தது. இங்கே நான்ஸ்டிக் தான்பா. மின்சார அடுப்பு என்பதனால் ஏனோ இரும்புச்சட்டியை அதன் மேல் வைக்க முடியவில்லை. நானும் அப்பத்துக்கு என தனிச்சட்டி வைத்திருக்கின்றேன். ஆனால் தோசை சுடும் சட்டியில் அப்பப்ப வேறு சமையல் செய்து விடுவேன்.
நீக்குஅருமையான விளக்கம்! இனி செயல்படுத்திப்பார்க்கின்றேன்))
பதிலளிநீக்கும்ம் கட்டாயம்பா. பொதுவாக சட்டியோடு ஒட்டிக்கொண்டு வராமல் மறுக்கும் உணவுகளுக்கு இந்த உப்புவறுவல் நல்ல பயன் தருவதை அனுபவ ரிதியில் உணர்ந்துள்ளேன்.
நீக்குஃபேஸ்புக்கிலேயே பார்த்தேன். என் பாஸ் கிட்டயும் சொன்னேன். நன்றி. தம +1
பதிலளிநீக்குபேஸ்புக்கில் வேறொருவருக்கு இட்ட பின்னூட்டம் தாம் இங்கே மேக்கப் டச்சப் இல்லாமல் பதிவாகிவிட்டதாம். உங்க வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றிங்க
நீக்குதொடர்ந்து தோசை வார்க்க வாழ்த்துகள் :)
பதிலளிநீக்குஹாஹா! அப்படியே ஆகட்டும்,
நீக்குநான் ஒரே தாவாவில் எல்லாம் செய்வதில்லை. சப்பாத்திக்குத் தனி....பராத்தாவுக்குத் தனி (பரோட்டா இல்லை...அது செய்வதில்லை....கோதுமை மாவில் செய்தால் மட்டும் பரோட்டா செய்வதுண்டு...அதுதான் ஸ்ப்ரிங்க் மாதிரி..செய்வது..) அப்புறம் அடை செய்வதற்குத் தனி....தோசைக்குத் தனி. ஆப்பத்திற்குச் சட்டி. எல்லாமே ப்ளாக் ப்யூட்டிஸ்!!! (இரும்பு)...
பதிலளிநீக்குஅப்படியே ஒன்றாக இருந்தாலும் இப்படித்தான் ஒரு துணியில் எண்ணை முக்கி எடுத்து, உப்பும் போட்டு துணியால் கல்லை நன்றாகத் தேய்த்து விட்டு தோசை சுட்டால் நன்றாக வரும்...
கல்லில் தேய்த்தவுடன் எண்ணை தடவி வைத்துவிடுவதுண்டு. பின்னர் எடுக்கும் போது கழுவி விட்டு பயன் படுத்துவதுண்டு....நல்ல டிப்ஸ் நிஷா!!!!
கீதா
வணக்கம் !
பதிலளிநீக்குதோசையில் ஆசை இல்லையே எப்படி
செய்யத் துணிவது ! இருந்தும் நல்ல தகவல் நன்றி !