ஒரு சிலரை நாம் நேரில் சந்தித்திருக்க மாட்டோம்,
பேசி இருக்க மாட்டோம்,
ஆனால் அவர்கள் பெயரைக்கேட்டாலே மனம் அதிரும்.
ஆனால் அவர்கள் பெயரைக்கேட்டாலே மனம் அதிரும்.
மனதில் மதிப்புணர்வு தோன்றும்.
அதில் குறிப்பிடத்தக்கவர் ஜெயலலிதா!
ஜெ என்றாலே கம்பீரம் தான் எனும் படி அதிகாரம்,பதவி,பட்டம், பணம் என பல நிலைகளைக்கடந்து இரும்பைப்போல் உறுதியாய் நின்றவர்.
ஆணாதிக்க சமூகத்தின் முன் நான் இப்படித்தான், என் முடிவு இப்படித்தான் என நாட்டின் பிரதமரையே அசைத்தவர்.
அரசியல் வாதியாக இவரின் சில செயல்பாடுகள் எனக்கு பிடிக்காது போனாலும்...................?
குறைகள் பல இருந்தாலும் நிறைகளை அதிகமாய் கொண்டுமேலாண்மைக்கு முன்னுதாரணமாய் என்னை அசத்தும் போல்டான பெண்மணி.மிகச்சிறந்த நிர்வாகி இவர்.
நான் மதிக்கும் உயர்ந்த பெண்மணி!
இவர் வாழ்க்கை எனக்கு மட்டுமல்ல பல பெண்களுக்கு அருமையான முன்னுதாரணம். மன உறுதியுடன் போராடினால் சிகரம் தொடலாம் என நிருபித்தவர்.
**இவரின் ஆளுமை எனக்கு பிடிக்கும்.
**துன்பங்கள் சூழும் நேரம் கலங்காது திடமாய் எதிர்த்து ஜெயித்து அசத்தியது பிடிக்கும்.
**தன்னை உதாசீனம் செய்வோரை ஒற்றை விரலை நீட்டி மண்டியிட வைத்த தன்னம்பிக்கை பிடிக்கும.
நான் பிரமித்து பார்க்கும் இருவரில் ஒருவர் ஜெ மேடம்.
பெருமைக்குரியவரும் இவரே!
பரிதாபத்துக்குரியவரும் இவரே!
சினிமா பின்னனி இல்லாமல் இருந்திருந்தால் இவரின் திறமை, நெஞ்சுரம்,அறிவு,ஆற்றல் வேறு வகையில் பிரகாசித்திருக்கலாம்.ஆனாலும் அப்பின்னனி தான் பல விமர்சனங்களயும் கடந்து இத்தனை தூரம் உயர்த்தியும் இருக்கின்றது.
அவர் பலமும் பலவீனமும் சினிமாவும் அரசியலுமே!
தனக்கென குடும்பம் கட்டுப்பாடு என இல்லாமல் தொண்டர்களின் கண்மூடித்தனமான அன்பை இவர் இன்னும் ஆக்க பூர்வமாக் செயல் படுத்தி இருக்கலாம் என நினைத்துள்ளேன்.அதே நேரம்..... ஏனைய அரசியல் வாதிகளின் நிஜமுகம், குடும்ப நிர்ப்பந்தங்கள், உள்ளொன்று வைத்து புறமொன்றாக மக்களை ஏமாற்றும் செயல் பாடுகளோடு ஒப்பிடும் போது தமிழ் நாட்டுக்கும் மக்களுக்கு ஓரளவேனும் நன்மை செய்ய திட்டங்களை இட்டு செயல் படுத்தியவர் ஜெயலலிதா அவர்கள். அதே போல் ஒரு விடயத்தில் முடிவெடுத்தால் இறுதி வரை அம்முடிவில் உறுதியாய் நின்று ஜெயித்தவர் இவர்.முன் பின் முரண்பாடுகள் இவருள் அரிது.
அரசியல் காரணங்களில் அவரை சூழ உள்ளோரால் தவறான வழி நடத்தப்பட்டிருந்தாலும் தமிழ் நாட்டுக்கு இவரைப்போல் இன்னொருவர் இனி பிறந்து வந்தால் தான் உண்டு.
இவரின் அதிகாரத்தில் சில பலதை தவிர்த்திருக்கலாம் எனினும் இந்த நேரத்தில் அதை விமர்சிப்பதை தவிர்ப்பது மனிதாபிமானம்
தனிப்பட்ட விருப்பு,வெறுப்புக்கள், ஆட்சிக்கால சாதகபாதகங்கள், அரசியல் எதிர்ப்புக்கள், மத பேத விமர்சனங்களைக் கடந்து சக மனுஷியாக அவர் நிம்மதியாக உறங்க பிரார்த்திப்பதே நாம் அவருக்கு செய்யக்கூடியதாக இருக்கின்றது.
ஹாட்ஸ் அப் ஜெ மேடம்.
கடைசி காலம் மரணம் கூட உங்களை நிம்மதியாக , அமைதியுடன் அணுகுவதாய் இல்லையோ?
இப்பூமிப்பந்தில் வாழ்ந்த வாழ்க்கையில் நீங்கள் நிம்மதியை ருசித்தது குறைவாக இருந்திருக்கலாம். செல்லுமிடத்திலேனும் நீங்கள் தேடும் ஆத்ம நிம்மதி, விடுதலை உங்களுக்கு கிட்டட்டும்.
ஆனாலும்...................................
நீங்கள் பீனீக்ஸ் போல் மீண்டும் மீண்டு வரவேண்டும் என தான் ஆழ் மனம் எதிர்பார்க்கின்றது.
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
மிகவும் வருத்தப்பட வைத்த செய்தி. எங்கள் அஞ்சலிகள்.
பதிலளிநீக்குநடுநிலையான பெண்ணாக நன்கு கருத்து வெளியிட்டமைக்கு நன்றி. ஆழ்ந்த இரங்கல் ஜெ மறைவுக்கு...
பதிலளிநீக்குஆழ்ந்த இரங்கல்கள்..... தமிழகத்திற்கு ஒரு பெரிய இழப்பு இது.
பதிலளிநீக்குpainful
பதிலளிநீக்கு