ஓரெழுத்தில் ஓராயிரம் அர்த்தமிருக்கும்!
நாட்டை ஆளும் அரசன் எப்படி இருக்க வேண்டும் என்பதை ஓரெழுத்தில் காளமேகப்புலவர் எழுதிய பாடல்...! பாடல் முழுவதும் க வரிசையில் அமைந்திருப்பது இதன் சிறப்பு!
காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை
கோக்குக்கூக் காக்கைக்குக் கொக்கொக்க – கைக்கைக்குக்
காக்கைக்குக் கைக்கைக்காகா.
காக்கைக்காகா - காக்கைக்குஆகாது
கூகை - ஆந்தை
கூகைக்காகா - ஆந்தைக்கு ஆகாது
காக்கை - காக்கை
கோக்கு - கோவாகிய மன்னனுக்கு
கூ - கூவை அதாவது நாட்டை
காக்கைக்கு - காப்பதற்கு
கொக்கொக்க - கொக்கைப் போல இருக்க வேண்டும்.
கைக்கைக்கு - கைக்கு கை சண்டை போடும் பகையிடமிருந்து
காக்கைக்கு - தன் மக்களை காப்பதற்கு
கைக்கைக்கா கா = கைக்கு + ஐக்கு + ஆகா
ஐ - தலைவன்
கைக்கு ஆகா - தன் கையால் செய்ய இயலாமல் போய்விடும்.
விளக்கவுரை
******************
காக்கைக்கும் ஆந்தைக்கும் எப்போதும் பகை தான்.
******************
காக்கைக்கும் ஆந்தைக்கும் எப்போதும் பகை தான்.
ஆந்தைக்கு இரவில் தான் பார்வை தெரியும் என்பதனால் இரவில் மட்டும் விழித்திருந்து தன் எதிரியான காக்கையை வெல்லும், பகலில் ஆந்தைக்கு பார்வை தெரியாது என்பதனால் காக்கை ஆந்தையை வெல்லும்.
நாட்டை ஆளும் அரசன் காக்கையைப்போலவும் ஆந்தையை போலவும் இருக்காமல் சரியான இரை வரும் வரை தவமிருக்கும் கொக்கைப்போல் என்னேரமும் விழிப்புடனிருந்து தம் மக்களைக்காக்க வேண்டும்! அப்படி ஆளாத அரசனால் ஒன்றுமே செய்ய முடியாமல் போய் விடுமாம்.
என்றோ படித்ததை இன்று நினைவு கூர்ந்தேன்!
நாடாளும் மன்னன் மட்டுமல்ல நம அனைவருமே பின்பற்ற வேண்டிய அருமையாக ஆலோசனை இது!
ஆனால் இன்றைக்கு நடப்பதென்ன? வருமுன் காப்பதை விட்டு வந்தபின் திக்குத்திசை தெரியாமல் தவிக்கின்றோம். நாளைக்கு என்னாகும் என்பதை அறியாமல் இன்றைய நிலையை மட்டும் நினைத்து பெருமிதப்பட்டுக்கொள்கின்றோம்!வரமுன் காப்பதும் ஆயத்தமாய் இருப்பதும் நம் கடமை என்பதை மறந்தே போகின்றோம்!
சிந்திப்போம்!
படம் இணையத்திலிருந்து!
இந்த பாடல் படித்திருக்கிறேன்...
பதிலளிநீக்குபாடலும் அதற்கான சிறப்பான விளக்கமும் அருமை அக்கா...
அக்கா அடித்து ஆட ஆரம்பிச்சாச்சு... வாழ்த்துக்கள்...
தொடர்ந்து எழுதுங்கள்... சிறப்பான பதிவுகள் பவனி வரட்டும்.
அது சரி. வருகைக்கு நன்றி
நீக்குவிளக்கம் மிகவும் அருமை... தொடர வாழ்த்துகள்...
பதிலளிநீக்குவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
நீக்குபாடலும் அருமை. தங்கள் விளக்கமும் அருமை. ஆல்ப்ஸ் தென்றல் அடிக்கடி காணாமல் போய்விடுகிறதே. தெடர்ந்து உலா வரட்டும்.
பதிலளிநீக்குஎன்ன செய்யட்டும். என் பணி அத்தகையதாய் இருக்கின்றதே.. வேலை அதிகமானால் எங்குமெதிலும் கவனம் செலுத்த முடிவதில்லை.தங்கள் அன்புக்கு நன்றி
நீக்குவரும்முன் காப்பவன்தான் அறிவாளி
பதிலளிநீக்குவந்த பின்னே முழிப்பவன்தான் (என்னைப்போல்) ஏமாளி
நல்லதொரு தத்தவப்பாடலுடன் விளக்கம் நன்று வாழ்த்துகள்
வருகைக்கும் கருத்திடலுக்கும் நன்றி சார்
நீக்குபாடலும் விளக்கமும் அருமை சகோ/தோழி நிஷா....நல்லதொரு கருத்து....
பதிலளிநீக்கு