அன்புள்ளங்கள் அனைவரும் நலமா?
விருந்துக்கு வருவோருக்கு வாசலில் வைத்து பரிமாறப்படும் குளிர்பானங்கள் வரிசையில் ஆரஞ்சுயூஸ், விட்டமின் யூஸ், ஒய்ட் வைன், மினரல் வாட்டர், கூடவே டீ காப்பியும் உண்டு
நான் வரவில்லை எனினும் பேஸ்புக்கில் காணும் போதெல்லாம் நலம் விசாரித்து பதிவுகள் இடுங்கள் என வேண்டுவதோடு என் வாசிக்கும், எழுதும் ஆர்வத்தினையும் விட்டு விலகி விடாமல் இருக்க என்னை ஊக்கப்படுத்திய அனைத்து அன்புள்ளங்களுக்கும் நன்றி!
கடந்த பத்து வருடமாய் சுவிஸ் நாட்டில் ஈவன்ஸ் களுக்கு உணவு மற்றும் மேடை, மேசை சோடனை முதல் இதர அனைத்து ஒழுங்குகளையும் செய்து வந்தாலும் ஐந்து வருடம் முன்னால் தான் எமக்கென நிலையாக ஹோட்டல் ஒன்றோடு இணைந்த விழா மணடபஙக்ள் இரண்டினையும் திறந்ந்திருந்து படிப்படி்யாய் வளர்ந்து சுவிஸிலிருக்கும் எம்மக்கள் மத்தியில் எமக்கென நிலையான நல்லதொரு இடத்தினை பெற்றிருக்கின்றோம்.
உள் நுழைந்ததும் சிற்றுண்டிகள்,
நான்கு வகையான பிரெட் சாண்ட் விச்
மட்டன் மற்றும் உருளைக்கிழந்து சேர்த்த ரோல்ஸ்
வெஜ் சமோசா, மீன் சேர்த்த கட்லெட்
ஸ்விட் சில்லி சாஸ்
மரவள்ளிக்கிழங்கு சிப்ஸ், மிக்சர்
தக்காளி, வெள்ளரி, மெசெரெல்லா ஸ்ரிக்
இந்த வருடத்தில் வந்த ஆர்டர்களும், பொறுப்புக்களும் எமக்கான வளர்ச்சியை மட்டுமல்ல எமது நிர்வாகத்தின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையையும் புரிந்திடும் படி இருந்தது. கடந்த பங்குனி மாதத்தில் ஆரம்பித்த ஓட்டம் கடந்த வாரத்தில் தான் சற்று ஓய்வைத்தந்தது. இந்த ஒரு வாரமும் சற்று ரிலாக்ஸாய் ..........!
இங்கே பாடசாலைகளுக்கு யூலை முதல் ஆகஸ்ட் முதலிரு வாரங்களுமாய் ஆறுவாரங்கள் கோடைகாலவிடுமுறை ஆகவும்,செப்டம்பர் கடைசியிலிருந்
து அக்ரோபர் நடுப்பகுதி வரையான மூன்று வாரங்கள் இலை உதிர் கால விடுமுறையாகவும் இருபப்தனால் கோசை விடுமுறையில் இந்தியா, இலங்கைக்கு செல்லலாம் என திட்டமிட்டு முடியாமல் போனது.
சொந்த தொழில் என்பது புலிவாலை பிடித்த கதையாய்.... பணம் கொட்டினாலும் அதை பெற நாம் நம் சுயத்தினை இழக்க வேண்டி இருக்கின்றது. தொழில் வளர்ச்சி என்பது மட்டுமே கண்முன் இலக்காக தெரிகின்றது. ஏனையவை களை பின்னர் பார்க்கலாம் என தட்டிக்கழிக்கும் படியும் செய்கின்றது.
சுடச்சுட பூரி, பிரைட் ரைஸ்,
சிவப்புக்குத்தரிசி சாதம்
மட்டன் குழம்பு,
இறாலுடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்த பொரியல் தந்தூரி சிக்கன்
வெள்ளரி சேர்த்த தயிர் ரைதா
கத்தரிக்காய் வத்தக்குழம்பு
பருப்பு
உருளைக்கிழங்கு பிரட்டல்
அப்பளம்,மோர் மிளகாய்
ஹோட்டல் நிர்வாகமும், ஈவன்ஸ் ஓழுங்குகளும் எனது தலைமையின் கீழ் மட்டுமே என்பதனால் நான் இல்லாத சூழலில் எந்த விருந்து ஒழுங்குகளையும் ஒழுங்காய் செய்ய முடியாது என்பதனால் பயணத்திட்டம் இட முடியவில்லை. பல நட்புக்கள் என் வருகையை எதிர்பார்த்து இன்னும்ஆர்வமுடன் இருப்பதை நான் அறிந்தாலும் நாம் சந்திக்கும் காலம் நிச்சயம் வரும் எனும் கடவுள் நம்பிக்கையில் இருக்கின்றேன்.
ஊஞ்சலாடும் கேக்
கடந்த வாரத்தில் எம்மால் நடத்தப்பட்ட விருந்துகளிலிருந்து உங்கள் பார்வைக்காக சில படங்களை இடையிடையே பகிர்ந்துள்ளேன்.
மேசை அலங்காரம்
மேலும் படங்கள் பார்க்க...
.https://www.facebook.com/hegas.prabha/media_set?set=a.1085077021528497.1073741839.100000786292216&type=3
விருந்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று ஆசை தோன்றுகிறது
பதிலளிநீக்குசகோதரியாரே
வாருங்கள் ஐயா!
நீக்குஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நிஷா.. தொழில் விருத்தியடைய பொறுமையும் தொழிலில் தேர்ந்த திறமையும் நம்பிக்கையும் கடின உழைப்பும் அவசியம். இவை அத்தனையும் உங்களிடம் உள்ளன.. நிச்சயம் மென்மேலும் வளர்ச்சி பெறுவீர்கள்.. பரபரப்பான பொழுதுகளுக்கு இடையிடையே நமக்கென நேரம் ஒதுக்கி தனிப்பட்ட வாழ்விலும் கவனமெடுத்துக்கொள்வது குடும்பத்தினிடையே இணக்கம் பெருக்கும். எண்ணிய யாவும் இனிதே நிறைவேற என் இனிய வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநன்றி அக்கா!
நீக்குநிஷா சகோ அருமையான விருந்துப் படைப்புகள்!! ஆசையைத் தூண்டுகின்றன. சரி அடுத்த பதிவர் சந்திப்பு அங்கு வைத்துக் கொண்டுவிடலாமா!!!!????
பதிலளிநீக்குதங்களின் தொழி மேன்மேலும் வளர்ச்சியடைய வாழ்த்துகள் சகோ/நிஷா.
அதற்கென்ன நடத்திடலாமே!எப்போ வரப்போகின்றீர்கள் என சொல்லுங்கள்,
நீக்குமென்மேலும் தொழிலில் வெற்றி பெற எமது வாழ்த்துகள்
பதிலளிநீக்குபசி நேரத்தில் பதிவுக்கு தெரியாமல் வந்து விட்டேன் ஏட்டுச் சுரைக்காய் கூட்டுக்கு உதவாது என்ன செய்வது ?
நன்றி!சுவிஸுக்கு வந்திட்டு போவது தானே?
நீக்குஅழகிய மேசை அலங்காரம்... கவர்ந்திழுக்கும் உணவு வகைகளின் புகைப்படங்கள். மென்மேலும் உயர வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஊஞ்சலாடும் கேக்.... மேசை அலங்காரங்கள் என அனைத்துமே அழகு.
பதிலளிநீக்குஇங்கேயும் ஒரு முறை பிறந்த நாள் வாழ்த்துகளைச் சொல்ல முடிவதில் மகிழ்ச்சி. மனம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.
அனைத்துக்கும் நனறி!
நீக்குஆஹா...
பதிலளிநீக்குகலக்குங்க அக்கா...
விருந்தில் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல்...
என்றாவது ஒருநாள் தம்பிக்கு விருந்து கிடைக்காமலா போகும்...
ஆவலுடன் வெயிட்டிங்க்...
my best wishes to you ...may your business grow in volumes...
பதிலளிநீக்கு