30 டிசம்பர் 2015

இதயமே இதயமே!


தேவைகளின் ஆரம்பமும் தேடலின்
முடிவுமாய் ஆனவன் நீ
உன் இருப்பு என்னுள் சோகத்தின்
தொடக்கமாய் ஆனதேனோ?

என்னுள் நுழைந்து உணர்வாகி
உயிரோட்டமுமாயானவனே
ஆரம்பமும் முடிவுமாய் என்னை
ஓரிடத்தில் நிறுத்துவதேனோ?

நீயில்லா இடமெல்லாம்  நிம்மதியும்
நின்றுதானே போகின்றது
பேச்சும் மூச்சும் ஒரு நொடியில் நின்றிடலாம்
கடந்த நாட்கள் மறந்திடுமோ..?

உன் நினைவால் ஓட ஓட விரட்டுகின்றாய்...
தேய்ந்து விடும் நினைவும் இல்லை.
ஓய்ந்திருக்கும் மனதுமில்லை.
ஒழிந்து கொள்ள இடமுமில்லை

சடுதியில் வந்தாலும் குறுகிய நாட்களிலே
அனைத்திலும் நிறைந்தவன் நீ யென்பதை
என்னுள்ளிருக்கும் உன் நினைவால் தவிக்கும் போது
கடிந்து கொண்டேன் நீ யார் எனக்குள்?



இதயமே இதயமே என்னை மறந்தது ஏன்
பிரிவு எனும் துயரிலே என்னை தள்ளியதேன்
உன் பெயர் சொல்லி நான் பைத்தியம் ஆனேன்
நிழல் என தொடர்ந்தேன் அதை நீ அறிவாயோ?
நிழல் தர நீ இங்கு வருவாயோ?

பொன்னை போல் பூவை போல் 
உன்னை சூடி கொண்ட நான் இன்று வாடி கிடப்பதோ?
பிரிவிங்கே உண்மை தான் என்றால் 
உறவு என்னையா வாழ்வது கனவு பூமியா?
பாதைகள் இல்லை என்றால் பயணங்கள் போவதோ
நம் குற்றம் என்ன ஏதோ தெய்வத்தை நோவதோ
யாரிடம் என்ன சொல்வது இனி சேரும் இடம் இங்கு வேறேது

எங்கோ நீ இருக்கின்றாய் என்றே உள்ளம் சொல்லுதே 
அதில் என் உயிரும் உள்ளதே
கண்ணுக்குள் தூங்கிடும் கங்கை கன்னம் இறங்குதே 
அதுவும் உன்னை தேடுத்தே
நீ பார்த்த நிலவு இங்கே நீ எங்கே தெய்வமே
வாராமல் நீ இருந்தால் வாழ்வேது நெஞ்சமே
கூவிடும் குயில் வாடுது ஒரு கூண்டு எங்கே இது நியாயமோ?...!

15 கருத்துகள்:

  1. அருமை மிகவும் ரசித்தேன் கவிதையை காணொளியும் கேட்டேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாவ்! நன்றி கில்லர்ஜி சார்! பதிவிட்ட அடுத்த நொடியே படித்து பின்னூட்டிய வேகத்துக்கு ராயல் சல்யூட்.!

      நீக்கு
  2. அச்சச்சோ சோ ஸ்வீட் அழகான வரிகள் அன்பான உள்ளங்கள் அமைதியானால் அதைத்தாங்கும் உள்ளம் யாருக்குத்தான் உண்டு இத்தரணியில் சூப்பராக உள்ளது வரிகள்

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்
    கவிதையில் சிதறிக்கிடக்கும் கருப்பொருள் அற்புதம்... இறுதியில் சொல்லி முடித்த விதம் சிறப்பு... வாழ்த்துக்கள்
    இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: இறந்த சடலத்தின் கற்பனை அழுகை.:

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  4. அக்கா...
    கவிதை அருமை...
    வலியும் வார்த்தையும் கலந்து பாசத்தால் பயணிக்கிறது...
    அருமை...
    பாடலும் கலக்கல்.

    பதிலளிநீக்கு
  5. மனதின் வலிகள் வார்த்தைகளில் கவியாய்...

    அருமை.

    பதிலளிநீக்கு
  6. காதலும், சோகமும் கலந்து கட்டின கவிதை அருமை

    பதிலளிநீக்கு
  7. நான் மிக விரும்பும் வரிகள் படமாய்,,,

    கவி வரிகள் அபாரம், வாழ்த்துக்கள்.

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. அருமையான வரிகள் சகோ! ரொமப்வே ரசித்தோம்!!!!

    பதிலளிநீக்கு
  9. அருமையான ரசனையான ஒரு கவிதை. ரசித்தேன் சகோ.

    தங்களுக்கும் தங்களின் குடும்பத்தாருக்கும் ஆங்கில நல்புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  10. புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரியாரே

    பதிலளிநீக்கு
  11. ஏக்கத்தின் தேடல் அடைந்திடும் அவசியம் உங்களுக்குள் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  12. வடித்த கவிதையில் சொற்களில் சோக இழை ஓடுகிறது

    பதிலளிநீக்கு
  13. உணர்வின் வலிகள் வரிகளில்..
    பேசாத பொழுதெல்லாம் வீணாகும் வாழ்க்கை...
    நல்லவரிகள்...தொடர்க சோகம் விடுத்து...

    பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!