19 டிசம்பர் 2015

புரியாத புதிர்!

நீ என்ன இறையென்றெனக்கு
இன்றுவரை புரியவில்ல்லை. 

இருப்போருக்கு இன்னும் கொடுக்கிறாய்,

இரப்போரிடம் இருப்பதை எடுக்கிறாய் 
இரப்போரைபார்த்து இரங்காது
இருப்போருக்கு இன்னும் இரங்குவதால் 
நீ என்ன இறை யென்றெனக்கு புரியவில்லை

நோயினால் நோகடிப்பதும் வாதையால் வதைப்பதும். 

செல்லும் பாதையில் தடைகல்லென அறிவாயோ?
நல்லது செய்வோர் அல்லல்களாலே 
துன்புறுவதும்.. தீயவரெல்லாம் தித்திக்கும் வாழ்வில் 
இன்புறுவதுவதும் உன் வஞ்சனைகள் 
ஏனென்றெனக்கென்றுமே புரிவதில்லை !

ஏன் என்ற கேள்விகள்  என்னுள் எழும் போதெல்லாம் 

நானுந்தன் தெய்வம் என்றே நீ சொன்னாலும் 
உன் சேயுறும் துயருன்னை  சேரவே இல்லையோ?
சொரிந்திடும் கண்ணீரை உண்ர்ந்திடாமலே
தூரமாய் நிறுத்தியே துயறுற செய்வதேனென 
எனக்கு புரியவே இல்லையே!

துயறுரும் மானிடன் துயர் துடைக்க 

துடிக்கும் கரங்களை  துயரிலாழ்த்துவதும் 
துஷ்டராய்  துணிகர துன்பம் தருவோரை 
தூணில் உயர்த்துவதுமாய் -உன் 
நியாயங்களும், நீதிகளும், நியாயத்தீர்ப்புக்களும் 
எனக்கு புரியவே இல்லை. 

உள்ளத்தில் உனை இருத்தி . 

உணர்விலே உன்னுடன் இயைந்து 
உச்சி வானை தொட்டிட வேண்டாம். 
உள்ளம்துடிக்க கலங்கிடாமல் 
காத்திடாமல் கலங்கடிப்பதேன் 
என்றெனக்கு புரியவே இல்லையே! 

புரியாமல் புரிந்திட, புரிந்ததை புரியாமல் 

புரிந்ததாய்  புகழ் பாடி உனை நம்பிடும் 
வித்தையே உன் சொத்தும் பத்துமாய் 
நித்தமும் பித்தனாய் உனை தேடிட செய்திடும்  
பகதனை பைத்தியம் என்பதேன் 
என்றெனக்கும் புரியவும் இல்லைத்தான்! 

புரியாதவை புரியாதைவையாகவே இருக்கட்டும். 

புரிந்தவை புரியாதவைகளாகட்டும். 
புரிதலும் பிரிதலும் உனை சேர்த்லாய் மாறட்டும் 
பிறப்பும் இறப்புமே பக்குவப்படுத்தட்டும்

24 கருத்துகள்:

  1. அருமை.

    என்ன நொந்து கொண்டாலும் இறையை பற்று கோலாகக் கொள்வதில் தடையில்லை!

    கெட்டவர்கள் நன்றாக வாழ்வதைப் பார்த்துக் கொண்டே 'தெய்வம் நின்று கேட்கும்' என்று காத்திருப்பார்கள் நல்லவர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கருத்திடலுக்கு நன்றி ஐயா!

      நீக்கு
  2. அருமையான வரிகள் இந்த புரியாதபுதிர் தன்மையால்தான் இறைப்பற்று இன்றைய வாழ்வில் பலருக்கும் அற்றுப்போகின்றது அருமை தொடர வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனாலும் இறைவன் மேலான பற்று எனக்குள் அதிகரிக்கத்தான் செய்கின்றது. உங்கள் வருகைக்கு நன்றி!

      நீக்கு
  3. புரியாத புதிர்தானே அவன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புரியாமல் இருப்பதனால் தான் நான் அவனை தேடுகின்றோமோ என்னமோ? யார் அறிவார்? தங்கள் வருகைக்கு நன்றிங்க!

      நீக்கு
  4. நல்லது செய்வோர் அல்லல்களாலே
    துன்புறுவதும்.. தீயவரெல்லாம் தித்திக்கும் வாழ்வில்
    இன்புறுவதுவதும் உன் வஞ்சனைகள்-----அங்கேயும் சுயநலம் நண்பரே.......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிஜம் தானேப்பா! தங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி!

      நீக்கு
  5. புரியாதவை புரியாதைவையாகவே இருக்கட்டும்.
    புரிந்தவை புரியாதவைகளாகட்டும்.
    புரிதலும் பிரிதலும் உனை சேர்த்லாய் மாறட்டும்
    பிறப்பும் இறப்புமே பக்குவப்படுத்தட்டும்

    இறைவனை நொந்து என்ன செய்வது..?

    நாம்தான் திருந்த வேண்டும்...

    அருமை அக்கா...

    தொடருங்கள்.

    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் திருந்தத்தான் வேண்டும் குமார். நன்றிப்பா.

      நீக்கு
    2. ஆமாம் திருந்தத்தான் வேண்டும் குமார். நன்றிப்பா.

      அவர் சொன்ன பத்திரிகை காகிதமாக்கும். நான் காகிதத்தில் எழுதி இருந்தால் கண்ணீரில் காகிதம் கரைந்திருக்கும் என்கின்றார். ஹாஹா.. கொஞ்சூண்டு நிஜமும் தானே.. என் நிலை எண்ணி நான் சிரிக்கவா முடியும். ஆனால் அழுதும் என்ன பலன் சொல்லுங்கள்.

      சிலருக்கு வாழ்க்கையில் போராட்டம்.. எனக்கோ வாழ்க்கையே போராட்டம்.. போராட்டமே வாழ்க்கை. ஏன் ஏன் இறைவனே என கேட்டாலும் என் காதை போல் அவன் காதையும் மூடிகொண்டு தான் இருக்கின்றான் போலும்.

      நீக்கு
  6. இந்தக்கவிதையினைப் படிக்கும் போது கண் கலங்கி விட்டேன்
    இதே  கவிதைதனை நீங்கள் ஒரு  பத்திரிகையில் எழுதியிருந்தால் நிச்சியமாக பத்திரிகை உங்கள் கண்ணீரிலே கரைந்திருக்கும் என்று நான் நினைக்கிறேன்

    ஆழமாக சிந்தித்தேன் எவ்வளவு மனவேதனை அவ்வளவையும் படைத்தவனிடத்திலே முறையிடும் விதம் மிக மிக அருமையாக உள்ளது  ஒரு வினாவாக உங்கள் கவிதை வரிகள் அமைந்திருக்கறது   அத்தோடு  

    ஏன் என்ற கேள்விகள்  என்னுள் எழும் போதெல்லாம்
    நானுந்தன் தெய்வம் என்றே நீ சொன்னாலும்
    [strike]உன் சேயுறும் துயருன்னை  சேரவே இல்லையோ?[/strike]
    சொரிந்திடும் கண்ணீரை உண்ர்ந்திடாமலே
    தூரமாய் நிறுத்தியே துயருர செய்வதேன்?
    எனக்கு புரியவே இல்லையே!

    தயாக இருந்தால் கண் முன்னே சேயுறும் துயர்தனை துடைத்தெறிவாள்  அதற்குமேலோனான படைத்தவன் நின்றுதுான் துயர் துடைப்பான்  அவனுக்கு நீங்கள் சேயுமில்லை அவன் உங்களுக்கு தாயுமில்லை  அவன் யாரயும் பெறவும் இல்லை பெறப்படவுமில்லை

    துயறுரும் மானிடன் துயர் துடைக்க
    துடிக்கும் கரங்களை  துயரிலாழ்த்துவதும்
    துஷ்டராய்  துணிகர துன்பம் தருவோரை
    தூணில் உயர்த்துவதுமாய் -உன்
    நியாயங்களும், நீதிகளும், நியாயத்தீர்ப்புக்களும்
    எனக்கு புரியவே இல்லை.

    உள்ளத்தில் உனை இருத்தி .
    உணர்விலே உன்னுடன் இயைந்து
    உச்சி வானை தொட்டிட வேண்டாம்.
    உள்ளம்துடிக்க கலங்கிடாமல்
    காத்திடாமல் கலங்கடிப்பதேன்
    என்றெனக்கு புரியவே இல்லையே!

    அருமையான வரிகள் இந்த வரிகள்தான் என்னைக் கண்ணீர் வர வைத்தது  படைத்தவனிடம் மண்டியிட்டு நீங்கள் கரைந்துள்ளீர்கள் நிச்சியமாக  உங்கள் மனமுருகி நீங்கள் வைத்த கோரிக்கைகள்  அவன் அறிந்திருப்பான்  காத்திருங்கள்  காலம் கனியும்  இவனும் இரங்குவான்  இரக்கமுள்ளவன்  நல்லவர்களை  சோதிப்பான் கைவிட மாட்டான் கெட்டவர்களுககு நிறைய கொடுப்பான் கை விட்டு விடுவான்
    கொஞ்சம் காத்திருங்கள் உங்கள் வேதனை மாறி காலம் கனியும்
    உங்கள் உள்ளமும் குளிரும் பிராத்தித்தவனாக
    மாறா அன்புடன் நண்பன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அம்மாடியோவ்! எம்மாம் பெரிய பின்னூட்டம்!கண் கலங்க வைக்கும் பின்னூட்டம் தும்பியே! எனக்காக் உங்கள் நேரத்தினை ஒதுக்கி படித்து கருத்திட நான் கொடுத்து வைத்துள்ளேன்பா. ரெம்ப நன்றி. எனக்கென வேண்ட நீங்களிருக்க நான் ஏன் கவலைப்படணுமாம்?

      நீக்கு
    2. உங்கள் பின்னூட்டம் என் கவிதையை விட அதிகம் சிந்திக்க வைக்கின்றதுப்பா! அனைத்திலும் நிறைவாய் படைக்காமல் குறைகளோடு நடத்துவதனால் தான் நாம் இறைவனொருவன் இருக்கின்றான் என தேடுகின்றோம். நானும் கூடத்தான் அனைத்தும் நிறையாயிருந்தால் அவனை தேடுவேனோ என்னமோ?

      ஆனாலும் எனக்குள் நெருடலாய் தகிப்பு தரும் விடயம்.. நல்லது நினைக்கும் நம்மைசோதிக்கும் இறைவன் சுயனலமாய் தமக்கு தமக்கென வாழ்ந்து சேமித்து இரக்கம் காட்டாதோரை மிக மிக வசதிவாய்ப்பில் உயர்த்தி வைப்பது ஏன் என தெரியவே இல்லையேப்பா.

      நம்மால் உதவ முடியல்லயே எனும் கவலை மனதை அரிக்க.... இருப்பவர்களோ ஏன் உதவ வேண்டும் என நினைத்து வாழ்கின்றார்களேப்பா!

      நீக்கு
    3. எல்லாம் அவன் விளையாட்டு

      நீக்கு

  7. ஆழமான சிந்தனையில் உணர்ச்சிப் பிழம்பாய்
    விளைந்த கவிதை மிக மிக அற்புதம்

    மீண்டும் மீண்டும் படித்து இரசித்தேன்

    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா! ரெம்ப மகிழ்ச்சியும் நன்றியும் ஐயா! உங்கள் வருகையோடு ஊக்குவித்தல் தொடர்வதும் எனக்குள் நிறைவை தருகின்றது. நன்றி நன்றி!

      நீக்கு
  8. //புரியாமல் புரிந்திட, புரிந்ததை புரியாமல்
    புரிந்ததாய் புகழ் பாடி உனை நம்பிடும்
    வித்தையே உன் சொத்தும் பத்துமாய்
    நித்தமும் பித்தனாய் உனை தேடிட செய்திடும்
    பகதனை பைத்தியம் என்பதேன்
    என்றெனக்கும் புரியவும் இல்லைத்தான்! //

    அருமையான கவிதை.

    இதைத்தான் அன்றே கவிஞர் "பூஜ்யத்துக்குள்ளே ஒரு ராஜ்யத்தை ஆண்டுகொண்டு புரியாமலே இருப்பான் ஒருவன் புரிந்துகொண்டால் அவன்தான் இறைவன்" என்றார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடா! ஏற்கனவே சொல்லியாச்சா! பூஜ்ஜியம் ராஜ்ஜியம் ஆள்வது எனில் சும்மாவா? கருத்திடலுக்கு நன்றி சார்!

      நீக்கு
  9. அருமை! புரியாத புதிர்தான் அவன். கெட்டவரும் நன்றாக வாழ்கின்றனர்...நல்லவர்கள் இடரில் வாழ்கின்றனர்....ஆனாலும் அவன் மீதான நம்பிக்கைதான் நம்மை வழிநடத்திச் செல்லுவது...நம்பிக்கை அதுதான் வாழ்க்கை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வாங்க!நன்கு சொன்னீர்கள்.நன்றி!

      நீக்கு
  10. இறை - புரியாத புதிர்தான்! சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புரிந்திட முயற்சிக்கின்றேன். கருத்திடலுக்கு நன்றி ஐயா!

      நீக்கு
  11. வணக்கம்

    சிறப்பாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!