09 நவம்பர் 2015

ஆல்ப்ஸ் மலைத் தென்றலாய் வருகிறேன்.

வணக்கம் நண்பர்களே! 

ஆல்ப்ஸ்மலைத்தென்றல் எனும் வலைப்பூ மூலம் இன்று முதல் உங்களுடன் உறவாட வந்திருக்கும் தென்றலாய் நான்! ஆல்ப்ஸ் அடிவாரத்தில் வளர்ந்ததும்,வளர்வதுமாய்..!

தமிழை கற்றதனால் அல்ல.. என்னை தமிழ் தொட்டதனால் தொட்டும் தொடாமலும் தொடரும் என் தமிழுறவு...!

அகிலனின் குறிஞ்சிப்பாட்டின் நாயகியை போல் கண்டதையும் கற்று பண்டிதனாக முயற்சிக்கும் என்னுள் இருப்பது அணுவளவே! பதினாறு வயதிலிருந்து அன்னிய நாட்டில் அன்னிய மொழி பேசும் நிர்பந்தத்துடன் தமிழை என் மூச்சாக கொண்டதனால் தமிழும் தமிழ் உறவுகளும் என்னுள் உயிர்ப்பை தந்து கொண்டே இருக்கின்றார்கள். 


முத்தமிழ் மன்றமெனும் முத்தில் கற்றவைகளும் பெற்றவைகளும் அனேகமே!

எனக்கேதெரியாமல்என்னுள்இருப்பதைவிளையச்செய்பவர்களில்.சேனைத்தமிழ்உலாநட்புக்கள்...நண்பன்,சம்ஸ்,ஹாசிம்முப்படையணியும்..சிறகை விரிக்கும் சிந்தனைவாசியான மனசு குமாரும் முக்கிய பங்காற்றுகின்றார்கள். 

வலைப்பூ வேண்டும் அக்கா என ஆர்வத்தினை ஏற்படுத்த்தி எனக்கென வலைப்பூவை திறந்து கொடுத்த குமார்... நிஷாக்கா உங்க வலைப்பூ இப்படில்லாம் அழகா இருக்கணும் என சண்டை போட்டு தன் நண்பனுடன் பேசி அழகாய் லோகோ வடிவமைத்த முஸம்மில் .. நண்பனுக்காக அல்லாது இந்த தோழிக்காகவும் தானாய் முன்வந்து அழகான வடிவமைப்பை உருவாக்கிட முயற்சிக்கும் சம்ஸ்.... இன்னும் இன்னும்... கடந்த காலத்தில் என்னுடன் இணைந்தோர்... இருந்தோர். இருப்போர்...இனிவரும்காலத்தில் என்னுடன்பிறப்பாய் ஆக போகின்றவர்கள் 
அனைவருக்கும் நன்றி நன்றி.


நண்பா உனக்குள் நட்பாயிருப்பேன்!

தப்பாயிருந்தால் திட்டித்தீர்ப்பேன்! 
அப்பா உனக்கு துப்பாய் நானிருப்பேன்!
வெண்பா தெரியா பெண்பாவை நானப்பா.!


ஆல்ப்ஸ் தென்றலாய் 
உங்கள் நிஷா

18 கருத்துகள்:

  1. இனிய வாழ்த்துகள் நிஷா.. தென்றலோ புயலோ... எண்ணங்கள் எதுவானாலும் தொடர்ந்து எழுதுங்கள்... வாசிக்கக் காத்திருக்கிறோம்.. என் வார்த்தைகள் வலைப்பூ துவங்கும் உத்வேகத்தை உங்களுள் எழுப்பியமைக்காக மிகவும் மகிழ்கிறேன். நன்றி நிஷா.

    பதிலளிநீக்கு
  2. அன்பின் அக்காவுக்கு...

    தீபஓளித் திருநாளில் ஆல்ப்ஸ் தென்றலாய் பின்னூட்டக் கருத்துப் புயல் வலைப்பூ பாதம் பாதிக்கிறது....
    ஆரம்பமே அசத்தல்...
    வாழ்த்துக்கள் அக்கா...
    தொடரட்டும்... உங்கள் வலைப்பூ வாசம்....
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாம் உங்கள் ஊக்கத்தினால் தான் குமார், இயன்றவரை முயற்சிக்கின்றேன்பா!

      நீக்கு
  3. உங்களை வலைப்பதிவாளர் வலயத்தள உரிமையாளர் எனும் வட்டத்தினுள் காலடியெடுத்து வைக்கும் அக்காவை பெரு மகிழ்வுடன் வரவேற்கிறோம் எங்கிருந்தாலும் மின்னும் தாரகை நீங்கள் உங்கள் படைப்புகள் ஆக்கங்கள் தேடல்கள் அத்தனையும் அபாரம் தனக்கென ஒரு தளமிட்டு தனித்துவமான பாதை ஒன்றை அமைத்து உறவுகளின் கருத்துகளோடு சங்கமித்து பெருமிதம் கொள்ளப் போகிறீர்கள் வளர்க வாழ்க பல்லாண்டு என வாழ்த்துகிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாசிம் வாழ்த்துக்கும் வார்த்தைக்கும் நன்றி!

      நீக்கு
  4. பிரமாண்டமான ஒரு முயற்சி சாதாரணமாக இருக்க முடியாதவர்களால் இந்தப் பாதையில் பயணிக்க முடியாது இங்கு ஆயிரம் பேர் வந்து போவார்கள் அவர்கள் கருத்திடுவார்கள் சிலர் நம்மைப் போற்றுவார்கள் சிலர் நம்மைத் தூற்றுவார்கள் அனைத்தையும் தாங்கும் இதயம் உள்ளவர்களால் மட்டுமே இந்தப் பயணத்தை தொடர முடியும்

    உங்கள் ஆரம்பம் பிரமாதம் உங்கள் பயணம் சிறக்க எனது வாழ்த்துக்கள் உங்கள் கருத்துக்களுக்கு கிடைக்கும் பின்னூட்டங்களுக்கும் உங்கள் நன்றிகளைத் தெரிவித்து தொடர்ந்து உங்கள் ஆக்கங்கள் கட்டுரைகள் மனதின் பக்கங்களை ஆல்ப்ஸ் தென்றல் வழியாகவும் அறிய முற்படுகிறோம்

    என்றும் மாறா அன்புடன் முஸம்மில்
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமையான ஆலோசனைக்கும் உற்சாகமூட்டும் வார்த்தைக்கும் நன்றிப்பா!

      நீக்கு
  5. ஆல்ப்ஸ் மலைக்கு நானும் வந்துட்டேன் நிஷா ....

    பதிலளிநீக்கு
  6. இன்றுதான் என் தளத்தில் நீங்கள் இட்ட கருத்துமூலம் உங்கள் தளத்தை அறிந்தேன்.. ராஜி, சசி, மைதிலி கிரேஸ், அருணா செல்வம், உஷா போல மேலும் ஒரு ஆள் நான் வம்பு இழுக்க கிடைச்சிருக்காங்க ஹைய்யா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா!
      இதுவல்லவோ அருமையான வரவேற்பு! தலைப்பில் உண்மைகளை வைத்திருப்பதால் உண்மைதான் சொல்கின்றீர்கள் என எடுத்து கொண்டேன்.

      ஆலாதியான் வரவேற்புக்கு நன்றிங்க! அப்படியே உங்கள் ஆதரவையும் தொடருங்கள்.

      நீக்கு
  7. ஆகா! நீங்களும் வலைப்பூவுக்குள் அடியெடுத்து வைச்சாச்சா! இன்று தான் அறிந்தேன் நிஷா! அதனால் தான் தாமதம். தமிழ்மன்றத்தில் கபிலரின் நூறு பூக்கள் தொடர் நீங்கள் எழுதியது தானே? ஆரம்பமே அருமையாயிருக்கிறது நிஷா! தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வந்தாச்சு அக்கா! நன்றி அக்கா!

      அதே நிஷா தான் அக்கா!

      நீக்கு
  8. வலைப்பூ தொடங்கியதற்கு வாழுதுகள். தொடரட்டும் உங்கள் தமிழ்பணி.

    பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!