11 டிசம்பர் 2020

முதலீடு இல்லாமலே ஏற்படுத்த கூடிய சிறிய தொழில் முயற்சிகள்..!








🌺 சிறிய கைத்தொழில் முயற்சி மற்றவர்களை உங்களை நோக்கி திரும்பிப்பார்க்க வைக்கும்....! 

🌺 உற்பத்தியை ஊக்குவிப்பதால் வறுமையை மாற்ற முடியும்....! 

என்கின்றார்கள் இரண்டு இளம் தொழில் முனைவோர்களான குட்டிஸ்.இந்த குட்டிப்பையன்களை முன் நிறுத்தி வறுமையை வென்றெடுக்கும் செயல் முறை திட்டத்தில் வெற்றி  பெற்றிருக்கும்     Forehead Eye தரவுகளின் அடிப்படையில் இந்த பதிவை தொகுத்திருக்கின்றேன். 

முதலீடு இல்லாமலே ஏற்படுத்த கூடிய சிறிய தொழில் முயற்சிகள்

🌺 பனை சார்ந்த உற்பத்திகள் 

🌺.தெங்கு சார்ந்த உற்பத்திகள் 

🌺 பிரம்பு சார்ந்த உற்பத்திகள்

🌺 பன்புல் சார்ந்த உற்பத்திகள்

🌺 மூங்கில் சார்ந்த உற்பத்தி பொருட்கள்அதிக முதலீடு இல்லாத  வருமானங்களை தரக்கூடிய தொழில்கள் பல உள்ளன,

பிளாஸ்டிக் பொருட்களுக்கான மாற்றாக இவ்வாறான உற்பத்திகள் தேவை அதிகரித்து வருகின்றன.  

ஆற்றங்கரை ஓரங்கள் குளக்கரைகள் பிரம்புச்செடி பன்புல்,மூங்கில் வளர்க்க திட்டமிடலாம்.இதன் மூலம் உங்கள் ஊரின் குளங்கள் ஆறுகளை அழகாக்கி  தூய்மைப்படுத்தலாம்.

ஒரு சிறிய உதாரணம்

இலங்கையில் வாழும் ஒரு ஏழைக்குடும்பத்தின் அன்றாட வாழ்வாதாரத்துக்கான வரவு செலவு.......!

ஆறு பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவிற்கு  

இப்போதைய விலையில் / இலங்கை ரூபாய் 

அரிசி, மற்றும் மா, 480/- 

கறிச்செலவு 600/- 

தேனீர் செலவு 200/- 

நாளொன்றுக்கு 1280/- தேவைப்படும்.

விறகு  வெட்டி பிழைக்கும் ஒருவருக்கு  ஒருமாத வருமானம் ஆகக்குறைந்தது 39,000/- கிடைக்கின்றது என்றால்  அவருக்கான தேனீர் மற்றும் போக்குவரத்து செலவு ஒரு நாளைக்கு 300/- வீதம் மாதம் 9,000/- தேவைப்படும். 

அவர் நாளொன்றுக்கு ஆயிரம் ரூபா வீதம் ஒரு மாதம் 30,000/- வருமானத்தை பெறுகின்றார். மூன்று வேளை உணவு உண்ண  1280/- ரூபாய் செலவு செய்தால் தான் முடியும் என்ற நிலையில் அவரின் ஒரு நாள் வருமானம் ஆயிரம். தினமும்  280/- பற்றாக்குறை நிலவும். 

இதனிடையில் மது அருந்தும் அல்லது புகைத்தல் பழக்கமுடைய  ஒரு குடும்பத்தலைவன் எனில் 700/-அளவிலான பணம் மதுவிற்காக செலவிடப்படும். மிகுதி 300/- மட்டுமே குடும்ப செலவுக்கு கொடுப்பார்.

ஏற்கனவே காணப்பட்ட பற்றாக்குறை 280/-இதில் 700/- மதுவிற்காக சேரும் போது 980/-  ரூபாய்கள் தினமும் சாப்பாட்டுக்கே பற்றாக்குறை ஏற்படும். அந்தக்குடும்பம் கொடிய வறுமைக்குள் அகப்படும்.

▪️ பிள்ளைகள் தெருவில் கையேந்தி நிற்கும் நிலை ஏற்படும். 

▪️ சாதாரண ஏழைக்குடும்பங்கள் செலவை குறைப்பதெனில் ஒரு வேளை உணவையோ அல்லது  இரு வேளை உணவையோ, குறைக்க நேரிடும்.

▪️ தேவைகள் அதிகமாக இருக்கும் போது,வரவு குறைவாக இருக்குமானால்  எந்த தேவைகளும் முழுமைபெறாமல் வறுமையும் ஏழ்மையும் மன உளைச்சலும் ஏற்படும். 

▪️ சில குடும்பங்கள் தேவைகளை நிறைவு செய்யும் வகையிலோ, அல்லது திட்டமிடப்படாத தொழில்முயற்சிகளில் ஈடுபடும் நிலையிலோ, கடன் பெற்று மீளச்செலுத்த இயலாத நிலையில் தற்கொலை வரை சென்றுள்ளதையும் காணமுடிகிறது.

ஒரு குடும்பத்தின் நிதி, நிருவாகம் உணவு, உடை, மருத்துவம், கல்வி, சுகாதாரம், மின்சாரம், எரிபொருள், போக்குவரத்துக்கு, பொழுதுபோக்கு, அலங்கார பொருட்கள்,பாதுகாப்பு, வழிபாடு,

மது மற்றும் புகைத்தல்,என மிக நீண்ட பட்டியல் இருக்கும்.வருமானம் உள்ள குடும்பம்,அல்லது வருமானம் குறைந்த அல்லது வருமானமற்ற குடும்பம் என்று இருக்காது  ஒவ்வொரு குடும்பத்திலும் தவிர்க்க இயலாத செலவினமாக இருக்கும்.

அப்படியாயின் இதிலிருந்து மீள்வது எப்படி?

நீங்கள் முன்னேற வேண்டுமாயின் உங்களின் குடும்ப நிர்வாக ஒழுங்கினை மேம்பத்திக்கொள்ள வேண்டும்.உங்கள் நாளாந்த வருமானத்தில் இருந்து செலவுகளை வரையறை செய்யுங்கள்.

1.சுகாதார பழக்கத்தை கடைப்பிடிப்ப தாலும் இயற்கை உணவுமுறை பழக்கத்தை ஏற்படுத்துவதாலும் மருத்துவ செலவுகளை  தவிர்க்க அல்லது இல்லாது செய்யலாம்.

2.மின்சார பாவனையை கட்டுப்படுத்தி பணத்தை மீதப்படுத்தலாம்.

3.மதுப்பழக்கம் புகைத்தல் என்பவற்றை தவிர்க்கலாம்.

4. பொழுபோக்கு சாதனங்களை தவிர்க்கலாம்.

5. அலங்கார பொருட்களை குறைக்கலாம்.

6. மேலே உள்ள செலவுகளில் கறிச்செலவு 600/- எனில் ஒரு சிறிய வீட்டுத்தோட்டம்  400/- செலவை மீதப்படுத்தும். 

7. வீண் விரயங்களை தவிர்க்க வேண்டும்

8. நீங்கள் நாளாந்த வரவு செலவு கணக்கு ஒன்றை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

ஆரம்பத்தில் பற்றாக்குறைய நிவர்த்திக்க உதவும் வீட்டுத்தோட்டம்.படிப்படியாக உங்களுக்கு சிறிய வருமானத்தையும் கொடுக்கும்.இது உங்களுக்கு புதிய உற்சாகத்தை தரும். உங்களை  தற்காத்துக்கொள்ள சிறிய நல்லதொரு முயற்சி இதுவாகும்.

சிறுவர்கள் சிறுவயதிலேயே வரவு செலவு கணக்குகளை பார்க்கவும் கற்றுக்கொடுக்க வேண்டும்.ஒவ்வொரு பிள்ளையும் தனது குடும்ப வறுமான நிலையை உணரும்போது

பொறுப்பான பிள்ளைகளாக மாற வாய்ப்பு ஏற்படும்.

குடும்ப  அங்கத்தவர்கள் இணைந்து அநாவசிய பொழுது போக்கினை தவிர்த்து உங்களுடைய நேரங்களை பெறுமதி மிக்கதாக மாற்றிக்கொள்லலாம்.

உங்கள் குடும்ப அங்கத்தவர்களோடு மனம் விட்டு பேசுங்கள் புதிய தொழில் முயற்சியிகள் பற்றி புதிய முதலீடு அற்ற தொழில் வாய்ப்புகள் பற்றி,வறுமையில் விடுபடும் வழிகள் பற்றி பேசுங்கள். முடிவெடுங்கள்.

 அன்றாடம் வருமானம் பெறக்கூடிய  சிறிய கைத்தொழில் முயற்சி ஒன்றை ஏற்படுத்த முயற்சியுங்கள்.நாம் வெற்றியடைய வேண்டுமெனில் நம்மில் நாம் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.நம்மிடையே அபிவிருத்திக்கான அத்திவாரம் இடவேண்டும்.









https://www.facebook.com/100000786292216/posts/3477645745604934/?d=n



09 டிசம்பர் 2020

தமிழர் சமூக மேம்பாடு -1




 ஒவ்வொரு பதிவும் புதிதாக பதிவிடும் போது நீங்கள் மட்டும் அல்ல நானும் எங்கள் சமூகத்தின் தேவைகள் என்ன ? தனி மனிதர் & சமூக மேம்பாடு குறித்த அக்கறை என்ன?  

என்பது குறித்து அவதானிக்கின்றேன். உங்கள் கருத்துக்கள் மூலம் உங்கள் அடிப்படை நிலை அறிந்து கொள்கின்றேன். 

அதன் அடிப்படையில்.....! 

சகல விதங்களிலும் வீழ்ச்சியடைந்திருக்கும் மக்களை மேம்படுத்தும் ஆக்கபூர்வமான செயல் திட்டங்கள் ஒட்டுமொத்த  சமூகம் சார்ந்த பல் வேறு  கோணங்களில் அறிவார்ந்த சிந்தனைகளோடு செயல்படுத்த படுகின்றதா என்றால் .... ? 

இல்லை என்று 100 % மறுத்து  விடுவேன் . 

பெரும்பாலும் ஒவ்வொருவரும் தனித்தனியே அவரவர் தனித்துவத்தை வெளிப்படுத்தி பெயர் பெற விளம்பரம் செய்ய  எடுக்கும் முயற்சிகள் தற்காலிக தீர்வு  எனும் குறுகிய நோக்கத்தினுள்  இருக்கின்றது. நீண்டகாலம் முன்னோக்கிய திட்டங்கள் இதுவரை இல்லை. 

2009 க்கு பின் கல்வி மீட்சி , தற்சார்பு பொருளாதாரம்  சார்ந்த முனைப்புக்கள்   கடந்த பத்து  வருடங்களுக்கும் மேல் முன்னெடுக்கப்பட்டிருந்தாலும் அடிப்படை   புரிதல் தெளிவு மாற்றப்படாததால் எழுத படிக்க தெரிந்த சுய சிந்தனை தெளிவுகள் இல்லாத  துறைசார்  ரோபோக்கள்  உருவாக்கி  கொண்டிருக்கின்றோம் தவிர வளர்ந்து வரும் தொழில் நுட்பம், மாறி வரும்  உலகளாவிய சிந்தனை, அறிவு மாற்றங்களுக்கு நிகரான மாற்றங்கள் எங்களுக்குள் இல்லை. தொல்லியல், தொன்மைகள் என்று நான்கு தலைமுறை கசப்புகளை கடத்தி கொண்டிருக்கின்றோம் தவிர தற்கால எதிர்கால சூழலை புரிந்து மாற்றி கொள்ளும் முன்னெடுப்புகள் இல்லை. 

கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் அரசியல் ஆர்வலர்கள் உட்பட 

புலம்பெயர்ந்து  மூன்று தசாப்தங்கள் கடந்தும்,வெளிநாடுகளில் அரசியல், சமூகம் சார்ந்த கட்டமைப்பு குறித்த அறிந்திருந்தும், அவைகளை எங்கள் சமூகத்துக்குள் நகர்த்தும்  தெளிவான திட்டங்கள்இல்லை என்பதனால் இலங்கைக்குள் கொண்டு சேர்க்கப்படும் பல தன்னார்வல முயற்சிகள் விழலுக்கு இறைத்த நீராகி கொண்டுள்ளது. 

முக்கியமாக அரசியல் வாதிகளுக்கும், அரசு துறை அதிகாரிகளையும் குறித்து   தெளிவான புரிதல் இல்லாமல் 

சமூகத்தின் தேவைகள், உரிமைகள் குறித்த ஏமாற்றங்களை அரசு பணியாளர்கள் காரணம் என்று  குற்றம் சுமத்தி கொண்டிருக்கின்றீர்கள். அரசு பணியாளர்கள் மக்களுக்கன கடமைகளை  செய்வதற்கு தடையாக இருக்கும் அரசியல் வாதிகளின் தவறுகளை உணர்த்த தவறுகின் றீர்கள் 

மக்கள் சார்பாக மக்களால்  தேர்மத்தெடுக்கப்படட  அரசியல் வாதிகளின் அக்கறையில்லாத, மேம்போக்கான செயல் பாடுகளை கண்டிக்காமல், கேள்வி கேட்காமல் அரசு துறை பணியாளர்களை குற்றம் சுமத்தி அவர்கள் பணிகளுக்கு இடையூறும், செயல்பாடுகளை தடை செய்தும் விடுகின்றீர்கள்.

🛑 எந்த பிரச்சனை என்றாலும் அந்த பிரச்சனைக்குள் அவர்களும் பாதிக்கப்படுவார்கள் என்பதை உணரவும், உணர்த்தவும் தவறி அனைத்தையும் அரசியலுக்குள் புகுத்தி புரிந்துணர்வுக்கு

முயற்சி செய்யாமல் அவர்களும் உங்களுக்குள் ஒருவர் எனும்  உணர்வை  உருவாக்க தவறுகின்றிர்கள். அதனால் பிரச்சனைகளுக்கு வெளியில் நின்று யாரோ ஒருவருக்கு தானே..? நமக்கு என்ன என்ற  

அணுகுமுறை இன்றைய பல சிக்கல்களுக்கான காரணமாக இருக்கின்றது.  

நன்றாக சிந்தித்து பாருங்கள்...! 

உங்கள் பகுதி. பள்ளி ஆசிரியர்கள், அரசு துறை பணியாளர்களுக்கு நீங்கள் கொடுக்கும் முக்கியத்துவம் என்ன? அரசியல் வாதிகளுக்கு கொடுக்கும் அங்கீகாரம் என்ன?  தற்கால சுய லாபம், தனி நபர் விருப்பு வெறுப்பு, ஆதாயம் என பல காரணங்களுக்காக மக்கள் உரிமைகளை காலடியில் போட்டு மிதிக்கின்றீர்கள்.

⭕️ ஒரு நாட்டில் அரசாங்கம் என்பது என்ன? யார்? 

⭕️ அரசியல் வாதிகள் யார்?

⭕️ அரசியல் வாதிகள் யாருக்கானவர்கள்? 

⭕️அரசு பணியாளர்கள் யார் ? 

எல்லோரும் அந்த நாட்டின் குடிமக்கள்..!  

அரசியல் வாதிகள் மக்கள் பணியாளர்கள்,அரசு அதிகாரிகள் அரசு பணியில் மக்கள் சேவையாளர்கள். என்று புரிந்து கொள்ளும் அடிப்படை சிந்தனை தெளிவை உருவாக்கும் போது சமூகம் மேம்பாடு ஒரு அடி முன்னோக்கி செல்லும். 

 பல பிரச்சனைகளுக்கு அத்துறை சார்ந்த அதிகாரிகள், மருத்துவர்கள்  எனோ தானோ என்று அசட்டையாக நடந்து கொள்வதும் அவர்களும் இந்த சமூகத்தின் மக்களில் ஒருவர் எனும் புரிதலும், இன்றைய அவர்கள் செயல்பாடுகள் எதிர்காலத்தில் அவர்களுக்கும்  பாதிப்பை தரும் என்றும் உணர்வு பூர்வமாக உணர்த்த பட வேண்டும். அடி, தடி வன்முறை கலாச்சாரம் வளர்த்து, ஆதரித்து அதன் மூலம் எந்த சமூகமும் மேம்பட முடியாது.அவரவர் கடமை மீறல்கள்,தவறுகளை உணர்த்தி ஒன்றிணைந்து செயல் பட  எல்லோரும் முயற்சி செய்யுங்கள். 

வாசித்து எனக்கென்ன என்று கடந்து செல்லாமல் உங்கள் கருத்துகளை சொல்லுங்கள். அதன் மூலம் சமூகத்தை சிந்திக்க தூண்டுதல் தர முடியும்..! நானும் தொடர்ந்து என் கருத்தை பகிர முடியும்.🙏


இலங்கை ஏற்றுமதி நடைமுறை, சந்தை சந்தைப்படுத்தல் விவரங்கள் மற்றும் சுருக்கங்கள் Sri Lanka Export Development Board




ஏற்றுமதி நடைமுறை, சந்தை சந்தைப்படுத்தல் விவரங்கள் மற்றும் சுருக்கங்கள்

Sri Lanka Export Development Board 

இலங்கை ஏற்றுமதி மேம்பாட்டு வாரியம்  

❎ இலங்கையில் பல்வேறு வேளாண் காலநிலை பகுதிகளில் சுமார் எண்பது வெவ்வேறு வகையான பழங்கள் மற்றும் காய்கறிகள்ஏற்றுமதிக்காக விளைவிக்கப்படுகின்றன.

✳️ ஆண்டு தோறும் 900,000 மெட்ரிக் டன் புதிய மற்றும் பதப்படுத்த்க்கப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகளை உலகின் பல இடங்களுக்கு ஏற்றுமதிசெய்கின்றன

✳️ புதிய தயாரிப்புகளில் 65% மத்திய கிழக்கு மற்றும் மாலத்தீவு தீவு நாடுகளுக்கும் பதப்படுத்தப்பட்ட தயாரிப்புகளில் 98%  ஐரோப்பிய சந்தைக்கும் இலக்கு வைக்கப்பட்டுள்ளன. 

✳️ ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதிஅரேபியா, மாலத்தீவு, இந்தியா, இங்கிலாந்து, குவைத், இந்தியா, ஜெர்மனி, கத்தார், பாகிஸ்தான் ஆகியவை இலங்கையில் இருந்து முக்கிய பழங்கள், மற்றும் காய்கறி இறக்குமதி செய்யும் நாடுகளாக பட்டியலிடப்பட்டுள்ளன.

🛑 புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் நாடுகளுக்கான ஏற்றுமதி குறித்து  தரவுகள் இல்லை. காரணம் ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டும். 

✅  சுகாதார உணர்வு கொண்ட நுகர்வோர் தளத்துடன், இலங்கை உற்பத்திக்கான உலகளாவிய தேவை அதிகரித்து வருகிறது.

✅ இலங்கை அரசாங்கம் புதிய மற்றும் பதப்படுத்தப்பட்ட  உற்பத்தி  குறித்த மேம்பட்ட நுட்பங்கள் குறிப்பாக polytunnels, (optimum input applications ) உள்ளீட்டு பயன்பாடுகள், பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு, அறுவடைக்கு பிந்தைய மேலாண்மை, தரமான பேக்கேஜிங் மற்றும் மேம்பட்ட போக்குவரத்து முறைகள் ஆகியவற்றின் கீழ் சிறந்த தரத்தை உறுதிப்படுத்துகின்றன. மேலும் விரிவாக்க வணிகத் தொழிலில் தனியார் துறை ஈடுபடுவதையும் SLEDB  நிர்வாகத்தின் கீழ் ஊக்குவிக்கிறது.

மேலும் விரிவன தகவல்களுக்கு பதிவின் இறுதி வரை தொடர்ந்து வாசியுங்கள் ..! 

ஒருவர் திருகோணமலையில்  கற்றாழை உற்பத்தி செய்து சந்தைப்பபிடுத்தல் வாய்ப்பு இன்றி வீணாகுது...! ஏதும் ஏற்பாடு செய்ய முடியுமா என்று கேட்டிருக்கார்..! அவருக்கும் இனி விவசாயம் துறைக்குள் நுழையும்  அனைவருக்கும் நான் எப்போதும் குறிப்பிடுவதைப் போலவே...! 

” எந்தவொரு வேளாண் அடிப்படையிலான வணிகத்தையும் தொடங்குவதற்கு முன் உங்கள் தயாரிப்பின் தேவை குறித்து சரியான சந்தைப்படுத்தும் வாய்ப்புக்கள் குறித்து ஆராய்ந்து அறிந்து  கொள்ள வேண்டும் “ 

நீங்கள் விவசாய வணிகத் திட்டத்திற்குச் செல்வதற்கு முன் அதை குறித்து திட்டமிட்ட வேண்டும். தற்கால உள்ளூர் தேவைகள், நீண்டகால தேவைகள் குறித்து அறிந்து கொள்வதோடு உற்பத்திகளை பதப்படுத்தும் தொழில் முனைவுகள் குறித்தும் அறிந்து கொள்ள வேண்டும். 

கற்றாழை பயிர்ச்செய்கை பதிவில் தெளிவாக எழுதி இருந்தேன். அதன் ஜெல் குறிப்பிட்ட சில மணி நேரத்துக்குள் பதப்படுத்தப்பட்ட வேண்டும்.  தயவு செய்து பதிவுகளை தெளிவாக  வாசித்து  அந்த பதிவில் உங்கள் கேள்விகளை கேளுங்கள். 

இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை  ஏற்றுமதியை மேம்படுத்துவதற்கும் பொறுப்பான உச்ச மாநில அமைப்பு உண்டென்பது உங்களுக்கு தெரியுமா?  

Sri Lanka Export Development Board 

இலங்கை ஏற்றுமதி மேம்பாட்டு வாரியம்  

இலங்கை ஏற்றுமதி மேம்பாட்டு வாரியம் (SLEDB) பொதுவாக EDB என அழைக்கப்படுகிறது, நாட்டின் ஏற்றுமதியின் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக ஏற்றுமதி சமூகத்திற்கான சேவைக்காக SLEDB அங்கீகரிக்கப்பட்டு இருக்கின்றது. 

உள்ளூர் ஏற்றுமதியாளர்களுக்கு SLEDB எவ்வாறு உதவுகிறது?பார்ப்போமா? 

🌺🌺🌺

இலங்கை ஏற்றுமதி மேம்பாட்டு வாரியம் என்பது ஏற்றுமதியை மேம்படுத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும் பொறுப்பான மாநில அமைப்பாகும்.

🔹 Sri Lanka Export Development Board 

உள்ளூர் ஏற்றுமதியாளர்களுக்கு SLEDB எவ்வாறு உதவுகிறது?

தொடக்கத்தில் இருந்தே இலங்கை ஏற்றுமதி மேம்பாட்டு வாரியம் (SLEDB) இலங்கையின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை உலக சந்தையில் ஏற்றுமதி செய்வதை ஊக்குவிக்கும் பொறுப்பைக் கொண்டுள்ளது. 

இலங்கை ஏற்றுமதியாளர்கள் மற்றும் நிறுவனங்களுக்கான கொள்கை ஆலோசகர், மானிட்டர், விளம்பரதாரர் என்று பலவேறு செயல்பாடுகள் மூலம் 

இலகுவாக்கி ஆலோசனை தந்து உலகளாவிய சந்தைகளை அடையவும் காண உங்களுக்கு உதவுகிறது.

🔹 உள்ளூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் சப்ளையர்களுக்கு SLEDB  வழங்க கூடிய சேவைகள் பின்வருமாறு;

🌳 சந்தைப்படுத்தல் மற்றும் சாத்தியக்கூறு குறித்த ஆய்வுகள் 

🌳 உலகளாவிய சந்தைப்படுத்தல் மற்றும் பொருத்துதலுக்கான விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் உத்திகள்

🌳 சார்க் பிராந்தியத்தில் விற்பனை மற்றும் விநியோக பணிக்கான அமைப்பு.

🌳 சந்தைப்படுத்துதலுக்கான இலக்கு தரவுத்தளத்தின் வளர்ச்சி.

🌳 வெளிநாட்டு சந்தைகளைத் பெறுவதற்கு  உதவி வழங்குதல்.

🌳 வரவு செலவு திட்டங்களுக்கு ஏற்றபடி வாங்குபவர்களுக்கு உகந்த தாக்கத்தை ஏற்படுத்தும் சந்தைப்படுத்தல் தகவல் தொடர்புத் திட்டத்தைத் தீர்மானித்தல்.

🌳 சிறந்த முடிவுகளைத் தரும் விற்பனை கட்டமைப்புகளின் வளர்ச்சி.

🌳 இலங்கையிலிருந்து உள்ளூர் நிறுவனங்கள் மற்றும் தயாரிப்புகள் குறித்த வெளிநாட்டு வாங்குபவரின் தற்போதைய கருத்துக்களை பகுப்பாய்வு செய்தல்.

 🔹 வணிக செயல்முறைகள் மற்றும் தொழில்நுட்பத்தில் செயல்திறன் மற்றும் செயல்திறனைப் பேணுதல். உற்பத்தித்திறனை மேம்படுத்த உதவிகள். 

🌳 “ புதுமையான தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கான முக்கிய ஏற்றுமதி மையமாக இலங்கையை நிலைநிறுத்துங்கள்."

🌳 Quality : ISO தர மேலாண்மை அமைப்பில் (QMS)  பிரச்சனைகள் மற்றும் வாய்ப்புகளை நிர்வகிக்கவும், தொடர்ந்து அதன் செயல்திறனை மேம்படுத்தவும்.

🌳 சட்ட, பங்குதாரர்கள் மற்றும் ஐஎஸ்ஓ 9001: 2015 கியூஎம்எஸ் தேவைகளைப் பின்பற்றுங்கள்.

🔹 முக்கிய தயாரிப்புகள் மற்றும் சேவைகள்

✅ இலங்கை தேயிலை 

✅ ரப்பர் மற்றும் ரப்பர் அடிப்படையிலான தயாரிப்புகள்

✅ தேங்காய் மற்றும் தேங்காய் சார்ந்த பொருட்கள்

✅ ஆடை மற்றும் ஜவுளி

✅ மசாலா, அத்தியாவசிய எண்ணெய்கள்  

✅ உணவு, தீவனம் மற்றும் பானங்கள்

✅ வைரங்கள், கற்கள் மற்றும் நகைகள்

✅ படகு மற்றும் கப்பல் கட்டிடம்

🌺 இலங்கை ஏற்றுமதியாளர்களை உலகளாவிய சந்தைகளுக்கு ஊக்குவிப்பதற்கும்,உள்ளூர் சப்ளையர்கள் மற்றும் சேவை வழங்குநர்களுக்கு உலகின் புதிய சந்தை மற்றும் தொழில் போக்குகளைப் பற்றியும் கற்பிப்பதற்காக ஏற்றுமதி சந்தைகளுக்கு சேவை செய்யும் தொழில் மற்றும் சேவைக்கும் பொறுப்பான நிறுவனங்களுடன் SLEDB இணைந்து செயல்படுகின்றது 

🌺 இலங்கை ஏற்றுமதியாளர்கள் மற்றும் உலகளாவிய வாங்குபவர்களுக்கு அரசு வழங்கும் தளங்கள் மூலம் ஆரோக்கியமான கலப்பு சூழலை உருவாக்குவதற்கு SLEDB சர்வதேச வர்த்தக அமைப்புகளுடன் கைகோர்த்து செயல்படுகிறது, உலகளாவிய சந்தைகளை அடைய உள்ளூர் SME களுக்கு அதிகாரம் அளிக்கிறது.

🔹 தயாரிப்பு வேறுபாடுகள் மற்றும் சப்ளையர்கள்

வெப்பமண்டல காலநிலை மற்றும் பலவகையான விவசாய பயிர்களுக்கு ஏற்ற புவியியல் ஆகியவற்றால் ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு நாடு என்ற வகையில், இலங்கை பலவிதமான வெப்பமண்டல பழங்கள், நட்டு மற்றும் காய்கறிகளை உலகிற்கு வழங்கி வருகிறது.

நாட்டின் மாறுபட்ட காலநிலை பகுதிகள் காரணமாக, இலங்கை பல்வேறு வகையான பழங்கள், கொட்டைகள் மற்றும் காய்கறிகளை உற்பத்தி செய்கிறது. 

ஆண்டுதோறும் 9000 டன்களுக்கும் அதிகமான உற்பத்தியை ஏற்றுமதி செய்வது பழங்கள், கொட்டைகள் மற்றும் காய்கறிகளின் முக்கிய ஏற்றுமதியாளராக இலங்கையை உறுதிப்படுத்துகிறது.

இலங்கையின் காலநிலை அனுகூலத்துடன்  வளமான மண்ணும், விவசாயம் குறித்த பாரம்பரிய  ஞானமும் தலைமுறையிலிருந்து தலைமுறைக்குக் கடந்து வந்திருக்கின்றன, நிறுவப்பட்ட விவசாய வசதிகள், நீர்ப்பாசன முறைகள் மற்றும் விநியோகிக்கப்பட்ட மழை முறைகள் இத்தகைய பயிர்களை வளர்ப்பதற்கு மிகவும் உகந்தவை.

🌺 கேரட், லீக், முட்டைக்கோஸ், காலிஃபிளவர், சாலட் இலைகள், பீட், பீன், பெல் மிளகு மற்றும் சாலட் வெள்ளரிகள் போன்ற மிதமான பயிர்களுக்கு மத்திய மலைப் பகுதிகளின் குளிரான தட்பவெப்பநிலைகள் சிறந்தவை. 

🌺 வெப்பமண்டல பழங்கள் மற்றும் காய்கறிகளான பச்சை மிளகாய், சிவப்பு வெங்காயம், பூசணி, கசப்பு, முலாம்பழம், இனிப்பு மற்றும் புளிப்பு வாழை வகைகள், ராணி அன்னாசி, பப்பாளி, மா, எலுமிச்சை மற்றும் பல.

🌺 அன்னாசிப்பழம், மாங்கோஸ்டீன், பழுத்த பலா, வெண்ணெய், ரம்புட்டான், நட்சத்திர பழம், பேஷன் பழம், மற்றும் அனோடா போன்ற சதைப்பற்றுள்ள வெப்பமண்டல பழங்களையும் இலங்கை உற்பத்தி செய்கிறது. அவை ஏராளமான ஊட்டச்சத்துக்களை கொண்டிருப்பதாகவும், குறிப்பிடத்தக்க ஆரோக்கிய நன்மைகளைப் பெறுவதாகவும் அறியப்படுகிறது. 

🍎 பழங்கள் மற்றும் காய்கறிகளைத் தவிர, இலங்கை பல்வேறு எண்டோஜெனஸ் யாம்கள் (Lecranthus and Xanthasoma sagittifolium), நீருக்கடியில் தண்டுகள் (Lasia spinosa and Nymphea lotus) மற்றும் ரொட்டி பழம், இளம் பலாப்பழம் மற்றும் முருங்கை (drumstick) போன்ற வற்றாத பயிர்களின் பழங்கள் மற்றும் காய்களையும் ஏற்றுமதி செய்கிறது.

🌳 பழங்கள் மற்றும் காய்கறிகள் ஏற்றுமதி முதன்மையாக அரை வணிகமயமாக்கப்பட்ட சிறு விவசாயிகளின் முயற்சியின் விளைவாகும், அதன் தனிப்பட்ட நிலப்பரப்பு ஒரு ஹெக்டேருக்கு மேல் இல்லை. 

வணிக உற்பத்தியில் தனியார் துறை ஈடுபாடு இலங்கை அரசாங்கத்தால் 'ஒப்பந்த வளரும்' விவசாயிகளின் ஆதரவோடு ஊக்குவிக்கப்பட்டுள்ளது, மேலும் உற்பத்தியை  மேம்படுத்த முன்னணி நிறுவனங்களால் ஏற்கனவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் இருந்து பழங்கள், கொட்டைகள் மற்றும் காய்கறி ஏற்றுமதிக்கான அதிகரித்துவரும் தேவைக்கு ஏற்றவாறு, ஏற்றுமதியாளர்கள் ஒவ்வொரு ஆண்டும் உலகுக்கு சிறந்த தரமான பழங்கள், கொட்டைகள் மற்றும் காய்கறிகளை வழங்குவதற்காக தொழில்துறையில் தொடர்ச்சியான புதுமை மற்றும் வளர்ச்சியுடன் நட்சத்திர தரமான ISO சர்வதேச தரங்களை தொடர்ந்து பராமரிக்கின்றனர்.

🔹 விநியோக தளம்

🌳 சிறிய பண்ணை மற்றும் வீட்டுத் தோட்டம்

🌳 நிறுவனங்கள்  / வணிக பண்ணைகள்

🌳 வேளாண் மண்டல திட்டங்கள் மற்றும் 

🌳ஒருங்கிணைந்த விவசாய திட்டங்கள்

🌳 கிராமம் / மத்திய சேகரிப்பு மையங்கள்

🌳 மாகாண மொத்த சந்தைகள்

உங்கள் கேள்விகள், தேவைகளை தெளிவான ஆங்கிலத்தில்  இங்கே எழுதி அனுப்புங்கள். என்ன பதில் வருகின்றது என்று எனக்கு சொல்லுங்கள். அடுத்த கட்ட நகர்வுகளை நோக்கி செல்ல முயற்சிப்போம்.    

https://www.srilankabusiness.com/edb/inquiry-and-feedback.html

SRI LANKA EXPORTERS DIRECTORY

https://www.srilankabusiness.com/exporters-directory/

WELCOME TO THE  EXPORTERS’ DIRECTORY, A GATEWAY TO SRI LANKAN TRADE & INDUSTRY.

Ex: 

FRUITS, NUTS AND VEGETABLES

https://www.srilankabusiness.com/exporters-directory/fruits-nuts-vegetables-exporters-in-sri-lanka/

🌺

Ex: 

EXPORTS COMPANY 

EXPORTS COMPANY

Ex: 

C R EXPORTS PVT LTD

No. 131/16, Oruthota Road , Mudungoda, Sri Lanka.

Telephone

(94) 33-2224961 (94) 77-7681727

Fax

(94) 33-2226863

EXPORTS COMPANY

ஒரு கம்பெனி விபரம் இது. 

லிங்கில்  தேடுங்கள்..! 

உங்கள் திட்டங்கள் சார்ந்த துறைகளுக்கு என்று தனி  பிரிவுகள் உண்டு. அதனுடாக உங்கள் தொடர்புகளை மேம்படுத்தி கொண்ட பின் களமாடுங்கள்


மேலும் முழுமையான விபரங்களுக்கு 

helpdesk@edb.gov.lk

srilankabusiness.com


Contact Us

Sri Lanka Export Development Board 

இலங்கை ஏற்றுமதி மேம்பாட்டு வாரியம்

No. 42 Nawam Mawatha,

Colombo-02,

Sri Lanka.

+94-11-230-0705 / 11

+94-11-230-0715

edb@edb.gov.lk

Customer Help Desk

வாடிக்கையாளர் உதவி மையம்

+94-11-230-0710 (Hotline)

+94-71-440-6119 (Director TFTI)

edb@edb.gov.lk

அடுத்த பதிவு  விவசாயத்துறையில் மேற்கொள்ள வேண்டிய ஐம்பது  முக்கிய வணிகத்திட்டங்கள் குறித்து பகிர்கின்றேன். 

அறிவுக்கு இடம் கொடுத்து ஆழ்கடலில் முத்தெடுப்போம்..!  

நான்  ரெடி..! நீங்கள் ரெடியா..? 

தெரியாது, முடியாது, சாத்தியம் இல்லை எனும்  தொல்லைகளை ஒதுக்கி, விரிசல்கள், பிரிவினைகள், கசப்புக்களை எங்கள் முயற்சிகளால் வென்றெடுப்போம்..!

https://www.facebook.com/100000786292216/posts/3473290512707124/?d=n

28 நவம்பர் 2020



 வெற்று சிரட்டைகள் வெற்றி பெறுகின்றன..? 

வெறுங்கைகள் முழம் போடுகின்றன..!

வெற்றிடங்கள் வெற்றி  கோட்டை தொடுகின்றன..!