12 நவம்பர் 2020

இலங்கை பாதுகாக்கப்பட்ட காடுகள்:

 #காணி

இது  உங்களுக்கு முன் இருக்கும் இறுதி வாய்ப்பாக கூட இருக்கலாம். 

இலங்கை பாதுகாக்கப்பட்ட காடுகள்: 

வரை படம்  கவனித்து பின் இத்திட்டத்தின்  முக்கியத்துவம், பின் விளைவுகள் உணரவும். 

 பிரதேச செயலக அதிகாரிகள் 

அரசியல் செல்வாக்குமிக்க அதிகாரிகள் உங்கள் அதிகாரத்தின் அனைத்து சக்திகளையயும். ஒன்று சேர்த்து  எங்கள்  மக்களுக்கு இந்த காணிகளை பெற்றுக்கொடுக்க முயற்சி  செய்யுங்கள். 




Map of Protected Areas in Sri Lanka

Protected காடுகள்

Proposet Protection Gaps 

Forest

Definition:

• All lands at the disposal of the state;

• National Heritage Wilderness Area • Conservation Forests

• Reserved Forests

• Other state Forests

• Village Forests


இலங்கை பாதுகாக்கப்பட்ட காடுகள்: 

உண்மையில் நீங்கள் எங்களுக்கு உதவனும் என்று நினைக்கின்றிர்களா..?

 அக்கா...!  

உண்மையில் நீங்கள் எங்களுக்கு உதவனும் என்று நினைக்கின்றிர்களா..? 

அக்கா உண்மையில்  எனக்கு இது தெரியல்ல..! 

அக்கா எனக்கு உதவி செய்யுங்கோ..? 

எப்படி இந்த Form நிரப்பனும்..? 

கேள்விகள்... கேள்விகள்.. கேள்விகள் ( அறிந்து வேண்டுமென்று  செய்கின்றார்கள் என்று சிலர்  சொல்ல கூடும். அவர்களுக்கு தெரிந்தது அவ்வளவே )

என்னை போல் இன்னும் சிலர் இப்படி கேள்விகளை எதிர்கொண்டார்கள். 

கேள்விகளுக்கு பின் அறியாமை நிறைந்த குரல்கள்..

என் பிள்ளையை அந்த பிள்ளை இடத்தில வைத்து   பார்க்கின்றேன். 

நான் வளர்ந்த காலத்தை நினைத்து பார்க்கின்றேன்.  

இந்த பிள்ளைகள் எதையும் அறிந்து உணர்ந்து செய்யவில்லை.. 

அது தான் சரி... அப்படித்தான் என்று  பலியாடுகள் போல் வளர்க்கப்பட்டு  இருக்கின்றார்கள்.

இறைவா ..! இந்த  பிள்ளைகளுக்கு ஒரு நல்ல    எதிர்காலத்தை, எவரிடமும் கை ஏந்தி வாழாத சுயமான வாழ்க்கையை உருவாக்கி கொடுக்கும்  வழிகாட்டலை உணர்த்த எனக்கு உடல் மன பக்குவத்தை கொடு என்று வேண்டுகின்றேன். 

உங்களிடமும் ...🙏

நான் பொதுவாக அறிமுகம் இல்லாத புதியவர்கள் யாருடனும் பேச முயற்சிப்பது இல்லை, என் செவிக்குறைபாடு  காரணம் என்றாலும் ஒரேயடியாக பேச முடியாது எனும் நிலை இல்லை. 

பேசலாம்.. ஆனால் ஆர்வம் இல்லை. என்னோடு பேசுபவர்களுக்கு புரியும். 

ஆனால் #காணி பதிவுக்கு நேற்றும் இன்றும் வரும்  கேள்வி களுக்கு  பதில். Type பண்ண முடியாமல் ( கைவலிக்குது, விரல் நோகுது). 

நேற்றும் இன்றும் பலருடன் பேசி   போன் மூலம் விபரம் சொல்லி கொண்டிருக்கேன். 

எவரோ ஓரிருவர் செய்யும் தவறுகள் ( சொல்லுகேளாமை, மரியாதை  குறைவு, மிரட்டல் ) ஒட்டுமொத்த எங்கள்  பிள்ளைகளின் மேலும் சுமத்தி குற்றமும் குறையும் சொல்லி ஒதுக்கி போவது சரியானதா..? 

இன்றைய அவர்களின் அவல நிலைக்கும், அறியாமைக்கும், கட்டுப்பாடின்மைக்கும் யார் காரணம்..? 

நாங்கள் எங்கள் கடமைகளை உணராமல் அவர்களை தவறு சொல்லி கொண்டே இருக்கின்றோம்.!   

யோசித்து பாருங்கள். 

எங்களுக்கு தேவை ..  பொறுமை, நிதானம், புரிந்துணர்வுடன்  அணுகுமுறை..!  

முடியுமா ....!  முடியனும்😻

 #காணி பதிவில் நான் உணர்ந்தேன்

#ஆல்ப்ஸ்தென்றல்நிஷா

12.11.2020

உண்மையில் நீங்கள் எங்களுக்கு உதவனும் என்று நினைக்கின்றிர்களா..? 

எங்கள் நம்பிக்கை

 எங்கள் அடையாளத்திகை நாங்கள் இழந்து விட்டதாக  புள்ளிவிபரங்கள் சொல்கின்றதா..?  

பூஜ்ஜியத்திலிருந்து ராஜ்யம் ஆண்ட கதைகளையும் சொல்லும். 

ஒட்டுமொத்த நம்பிக்கை இழப்புக்கு அவசியம் இல்லை.

ஸ்பெயின், பார்சலோனாவுக்கும் வரலாறு உண்டு. கியூபா, இஸ்ரேல் யூதர்களுக்கும் வரலாறு என்று ஒன்று உண்டு.

முயற்சியே  செய்யாமல் பூஜ்ஜியத்தில் நின்று புலம்பி கொண்டிருந்தால் எங்களுக்கு முன்னால் ( 01 ) ஒருவன் வரத்தான் செய்வான். அதுவே நாம் ஓரடி முன்னோக்கி வைத்தால் பூஜ்ஜியம் 10 ஆகும். இன்னொரு அடி  110 என்பதும்  சின்ன லாஜிக் தானேங்க..? 

 அறிவும், ஆற்றலும், எங்கள் நம்பிக்கையும், முயற்சியும் தொடரும் வரை எதுவும் அடையாளத்தை இழந்து போகாது.  எங்கள் அடையாளம் இன்னும் இருக்கு. அதை இழக்காமல் இருக்கணும்னால் நாங்கள் ஆக்கப்பூர்வமாக முயற்சிக்கணும்.  

கல்வி, பொருளாதார உயர்வு வேண்டும். அதுவரை எங்கள் மண் முழுதாக பறிபோகாமல் தக்க வைக்கணும்.

#காணி

YFacebook 

இலங்கை நண்பர்களுக்கு ஒரு கேள்வி

 நட்பில் இருக்கும் இலங்கை  நண்பர்களுக்கு  ஒரு கேள்வி 

உண்மையில்  உங்களுக்குள் எங்கள் தமிழ் மண், ஈழத்து நிலம், சமூகம்  மீட்சி பெறணும் என்ற அக்கறை இருக்கா..? 

இலங்கை  நண்பர்களுக்கு  இலங்கை அரசாங்கத்தின் ஒரு இலட்சம்  காணிகள்,  தொழில் முனைவோர் எனும் அறிவிப்பு..!  இதற்கு பின் இருக்கும் விளைவுகள் என்ன என்று யோசித்தீர்களா..?  . 

இந்த அரசு  நிலங்களில் பெரும்பான்மை எங்கே இருக்கு....? 


இலங்கை காடுகளின் வரைபடம் போனவருடதரவு பாருங்கள். இது வடகிழக்கை மொத்தமாக  ஆக்கிரமிக்கும் முயற்சி என்று  இனி என்றாலும் கொஞ்சம் சுதாகரித்து கவனம் எடுங்கோ..

மண்  மீட்பதும்  காப்பதும் ஆயுதம் ஏந்தி போராட்டத்தினால் சத்யமாவது இல்லை. விவேகம் வேண்டும். 

நான் இடும் #காணி சார்ந்த பதிவுகளில் உங்கள் ரியாக்சன்  கவனிக்கின்றேன். பரிதாபப்பட்டு இரக்கத்தின்  ஐந்தும் பத்தும்  கொடுத்து எப்போதும் இறைஞ்சி வாழும்

சமூகத்தை வளர்த்து விடும் பலருக்கு ஆக்கப்பூர்வமாக காரியங்களுக்கு ஆதரவு தர மனம் இல்லையா..?  

சோத்து   தட்டுக்கு கொடுக்கும் முக்கியம் எங்கள் சொத்து  காக்கவும்  கொடுங்கள்.

சமூகம் சுயமாக வாழும் படி நிமிர்ந்தால் போதும். 

ஒவ்வொருவரும்  தனித்தனியே  ஒவ்வொரு பக்கமாய் செயல்  படாமல்  இனி என்றாலும் கொஞ்சம் உணர்ந்து  ஒத்துழைப்பு  கொடுங்கோ 😍

Facebooks 

#ஆல்ப்ஸ்தென்றல்நிஷா

12.11.2020