அனைவருக்கும் பொங்கல் நல் வாழ்த்துகள்!
சோதனைகள் நேரம் சோர்ந்திடாதீர்கள்
வாதைகள் கண்டு பயந்திடாதீர்கள்!
தோல்விகள் கண்டு துவண்டு விடாதீர்கள்!
வாதைகள் கண்டு பயந்திடாதீர்கள்!
தோல்விகள் கண்டு துவண்டு விடாதீர்கள்!
சாதனைகளே தொடந்து வந்திட்டால்
வாழ்க்கை என்றுமே வரமாகாது!
வாழ்க்கைப்பாதையில் பயணம் செய்திட
துள்ளும் மனமதை அடக்கி வெல்லணும்
எள்ளல் வார்த்தையை எரிக்க தெரியணும்
எள்ளல் வார்த்தையை எரிக்க தெரியணும்
வல்லவனே நீ செல்லுமிடமறிந்திடாவிட்டால்
வாழ்க்கை என்பதுன் வரமாகாதே!
வெற்றி எனும் ஏணிப்படியில்
தோல்வி என்பது வேகத்தடை தானே!
சோதனை நேரம் கலங்கி நின்றிட்டால்
சோதனை நேரம் கலங்கி நின்றிட்டால்
சாதனை உன்னை கிட்டிச்சேராதே!
வாழ்க்கை என்பதுன் வரமாகாதே!
சோதனை நேரம் ஒடுங்கி இருக்காமல்
வேதனைகளை தாண்டி சென்றிட்டால்
வாழ்க்கை என்பதும் வரமாகுமே!
மனமார வாழ்த்துகின்றேன் , மனம் போல் வாழுங்கள்!
சோதனை நேரம் ஒடுங்கி இருக்காமல்
வேதனைகளை தாண்டி சென்றிட்டால்
வாழ்க்கை என்பதும் வரமாகுமே!
மனமார வாழ்த்துகின்றேன் , மனம் போல் வாழுங்கள்!
ஆரம்பமே அட்வைஸாக இருக்கின்றதே என என்னை திட்டாமல் பதிவை முழுமையாக படியுங்கள், பதிவின் இறுதி பகுதியில் இதற்கான பதில் உங்களுக்கு கிடைக்கும்,
அன்பானவர்களே! பிரச்சனைகளை கண்டு ஓடி ஒளியாதீர்கள், எனக்கு மட்டும் தானே என உங்கள் நிலையில் மட்டும் பிரச்சனைகளின் சவால்கள் நேரம் சிந்திக்காமல் உங்களை காட்டிலும் கோடானும் கோடி மக்கள் உங்களுக்கு கிடைத்த வரம் இன்றி தவிக்கின்றார்கள் என உணர்ந்திடுங்கள். நமக்குக்கீழே உள்ளவர் கோடி என நினைத்து பார்த்து நிம்மதி தேடுங்கள்!
உங்களிடமிருப்பதை உணராமல் இல்லாததை தேடி ஓடாதீர்கள். கடவுள் நம்மிடமிருந்து ஒன்றை எடுத்தால் இன்னும் பலதை நமக்குள் மறைத்து வைத்திருப்பான் என புரிந்து மறைவாயிருப்பதை தேடி வெளிக்கொண்டு வந்து உங்களை நிலை நிறுத்துங்கள்.
நம் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு சவால் உண்டு. நமக்கெனும் இலக்கு உண்டு, பிறந்தோம்,வளர்ந்தோம், மறைந்தோம் என்றில்லாமல் நாம் வாழ்ந்தோம் என்பதற்கு சாட்சியாய் எதை விட்டு செல்ல போகின்றோம் என யோசிப்போம்.
நிர்வாணியாய் வந்தோம், அதே நிர்வாணியாய் போவோம் எனும் நிலையில் கொண்டு வந்ததும் இல்லை , எடுத்து செல்லப்போவதுமில்லை என்பதை உணர்ந்து இப்பூமியின் பொக்கிஷ்ங்களும், வீடுவாசல்களும், நகை நட்டுக்களும், கற்கும் கல்விகளும் கூட நம்முடன் வராது எனும் போது நம்மிடம் இல்லாததை குறித்து ஏன் கவலைப்பட வேண்டும்.
நாம் சாதிக்கப்பிறந்தவர்கள் அன்பானவர்களே! சோதனைகள் தொடர்வதில்லை என உணர்ந்து சாதனையாளர்களாகுங்கள்.தயக்கங்கள் தடைகளை சுட்டுப்பொசுக்கி தைரியமாய் தன்னம்பிக்கையோடு வெளி வாருங்கள்.! உங்களால் முடியும்!
இன்னாளில் கவலைகள் மறையட்டும், கண்ணீர்கள் நீங்கட்டும், அன்பும் ஆரோக்கியமும் உங்களுக்குள் பொங்கட்டும்!
ஏற்கனவே ஐந்தாறு வயதில் கோயில் குளத்தில் குளிக்கும் போது பின்னந்தலை அடி பட விழுந்திருக்கின்றேன். அதன் பின் மீண்டும் பதிமூன்றாம் வயதிலும் விழுந்ததனால் மரணித்து போயிருக்க வேண்டிய என்னை மரணத்தின் பிடியிலிருந்து காத்து. என்னை சாதனையாளராக்கிய இறைவனுக்கும் நற்பழக்கவழக்கங்களை கற்பித்து அன்பு செய்யவும் அரவணக்கவும் கற்பித்த என் பெற்றாருக்கும், அறிவில்சிறந்து விளங்க காரணமான ஆசிரியர்களுக்கும், உன்னால் முடியும் என சொல்லி என்னை ஊக்குவிக்கும் என் அன்பு கணவருக்கும், சோர்ந்து விழும் போதெல்லாம் தனக்கேற்ற படி.. என்னம்மா ஆச்சு கவலைப்படாதேம்மா ஜீசஸ் கிட்ட எல்லாம் சொல்லம்மா! அவர் எல்லாமே தீர்த்து வைப்பார் என சொல்லும் என் அன்பு செல்வங்கள் கப்ரியேல், எப்சிக்கும்.......
எனக்கே எனக்குள் மறைந்திருந்த திறமைகளை வெளிகொணர செய்துஎன்னை ஈவன்ஸ் மனேஜ்மெண்டில் ஈடுபடுத்தி பின்னாலிருந்து வழி நடத்திய முத்தமிழ் மன்ற சுதாகர் அண்ணாவுக்கும். தொடர்ந்து வழி நடத்தி வரும் அன்பு சுரேஷ் எனப்படும் பரஞ்சோதி அண்ணாவுக்கும்.. இற்றளவில் எனக்கொண்றென்றால் பதறித்துடித்து அன்னையாய் அரவணைக்கும்அன்பு செல்லத்தும்பி கட்டாரில்’இருக்கும் முஸம்மிலுக்கும் என் பதிவுகள் மூலம் நன்றி செலுத்துகின்றேன்.
இந்த வலைப்பூவை நான் தொடங்க என் இன்னொரு பரிமாணத்தினை வெளிப்படுத்த ஊக்க சக்தியாய் இருந்த மனசு குமாருக்கும், வலைப்பூ வடிவமைத்து தந்த அன்பு நண்பன் சேனைத்தமிழ் உலா சம்ஸுக்கும் என் நன்றிகள்!
இன்றில்லாவிடில் என்றேனும் நன்றி சொல்ல வாய்ப்புக்கிடைக்குமா எனும் நிலையில்லாத வாழ்க்கையை நாம் வாழ்வதனால் இப்பதிவில் நன்றி சொல்லி விட மனம் விளைகின்றது.
விபத்தின் தொடர்ச்சியாய் விளைவுகள் வினையாய் என்னை சுழட்டி அடித்தாலும் வாழ்ந்து தான் பார்க்கலாம் எனும் வைராக்கியத்தோடு இற்றை வரை என் தன்னம்பிக்கையை தளர விடாது காத்துவர முடிவது இறைவன் அருளே!
மனமார வாழ்த்துகின்றேன் , மனம் போல் வாழுங்கள்!
அனைவருக்கும் பொங்கல் நல் வாழ்த்துகள்!