10 ஜூன் 2020

கொரோனா வைரஸ் - இது தான் யதார்த்தம்..!

தயவு செய்து 

நம்பிக்கை தருகின்றோம் என ஆதாரம் இல்லாத. நிரூபிக்கப்படாத  பார்வேட் செய்திகளை  சும்மா தகவலுக்கு என்றாலும் பகிர்ந்து மக்களை careless ஆக்காதீர்கள். 

கொரோனா வைரஸ் நோய் பரவல், பாதிப்புகள், மருத்துவ வசதிகள், உதவிகள் குறித்த  உங்கள் நாட்டில். மாநிலத்தில், மாவடடம், ஊரில் இன்னும் உண்மை நிலை என்னவோ அதை மட்டும் எழுதுங்கள் 

எந்த அதீத நம்பிக்கையும் வேண்டாம்..! 

உண்மை கசப்பாக இருந்தாலும் அது தான் உண்மை. யதார்த்தம் என மக்கள் உணர வேண்டும். 

அழும் குழந்தைக்கு கிலுகிலுப்பை, பூச்சாண்டி காட்டி ஏமாற்றுவது போல் தமிழ் மட்டுமே பேசவும் வாசிக்கவும் ( பலருக்கு அதுவும் தெரியாது ) தெரிந்த அப்பாவிகளை ஏமாற்றாதீர்கள். 

தேசத்தின் மீதான பக்தி எல்லோருக்கும் வேண்டும். அதற்காக  உலகின் சனத்தொகையில் இரண்டாம் இடம் பிடித்திருக்கும் நாட்டில் அன்றாடம் உழைத்து பிழைக்கும் ஏழை மக்களை பெருமளவில் கொண்ட தேசத்தில்  சமயோசிதம், வருமுன் காக்கும் திட்டமிடல் என்று எதுவும் இல்லாமல் பொறுப்பில்லாத  அரசாங்கத்தின் செயல் பாடுகளில் தொடரும் தவறுகளை  சுட்டி காடடாமல் தங்க கூண்டுக்குள் பத்திரமாக வாழ்ந்து கொண்டு கண் மூடித்தனமான ஆதரவு தருவது தவறானது.  உங்களின் அதீத நம்பிக்கை பல அப்பாவிகளின் உயிருக்கு விலை வைக்கின்றது என்பதை புரிந்து கொள்ளுங்கள் 

அரசு நல்லது செய்தால் பாராட்டுவோம், தன் கடமை தவறும் போது சுட்டிக்காட்டிடவும் தட்டி கேட்கவும் தேசத்து மக்களுக்கு உரிமை உண்டு. 

மக்கள் தமது நியாயமான  உரிமைக்காக போராடிக்கொண்டே இருக்கணும், மக்களை எப்போதும். பதட்டமாக  அலைய விடணும் என்று சின்ன சின்ன விடயங்களில் கூட கூரிய நோக்கம் இல்லாத அரச நிர்வாகத்தின் செயல் பாடுகளையும், புள்ளி விபரங்களின் ( 60 %அரசு சிறப்பாக செயல்படுவதாக ஆதரவு கருத்து )  அடிப்படையில் அரசு எல்லாம் சரியாக செயல் படுகின்றது என்னும் பிடிவாதத்துடன் தவறு உணர்த்தாமல்  கண்ணை மூடி கொண்டு கடப்பீர்கள் என்றால்   கொரோனா virus பரவலால் வரும்  விளைவுகளுக்கு நீங்களும் பலியாகுவீர்கள். 

இதுவரையான உங்கள் அரசியல், மத, இன பாதுகாப்புகள் கொரோனா வைரஸ் நோய் தொற்றிலிருந்த் எவரையும் தனித்து பிரித்து காப்பாற்ற போவதிலகை. உங்களால் எங்கும் ஓடி ஒளிய முடியாது, எந்த நீதி மன்றமும் உங்களை விடுவிக்காது. 

ஊர் கூடி சமூகமாக உணர்ந்து இணைந்து செயல் பட்டால் தான் நீங்களும் நீங்கள் நேசிப்போரும் பாதுகாப்பாக வாழ முடியும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். 

கொரோனா வைரஸ்  நோய் குறித்து எடுத்து கொண்டால் ....! 

Positive  thinking, பயம் பரபரப்பு,வதந்தி தவிர்ப்பதாக கூறி உண்மையை மறைத்து போலியான தகவல்களை வெளியிட்டு  நோய் கட்டுப்பாட்டில் இருக்கின்றது, போதுமான வசதிகள் உண்டு , கொரோனா வைரஸ் எல்லோரும் பயப்படுத்தும்படி  நோய் இல்லை என்றும், முகமூடி அணியுங்கள்  நோய் தொற்றாது  எனும் தீவிர பிரச்சாரமும் அப்பாவி மக்களுக்குள் ஒரு வித அசட்டு தனத்தை உருவாக்கி இருக்கின்றது.

அரசு lockdown  அறிவிக்க  காட்டிய வேகம் விவேகத்தை அதன் பின்னரான மக்கள் பாதுகாப்பு, அவர்கள் வாழ்வாதார பிரச்சனைக்கான தீர்வு, திடீர் ஊரடங்கில் தம் தொழில் மற்றும் பல காரணங்களால் இடம் பெயர்ந்தோருக்கு சொந்த இடங்களுக்கு திரும்பி செல்லும் போக்குவரத்து வசதிகள் குறித்து எந்த நம்பிக்கை, உத்தரவாதமும் தரவே இல்லை. 

ஐரோப்பாவில் Lock  down  காலத்தில் 
• கொரோனா வைரஸ் என்றால் என்ன? 
• அதன் பாதகங்கள் என்ன? 
• கொரோனா வைரஸ் தொற்றினால் எப்படிஅதிலிருந்து மீண்டு வர முடியும்? 

• நோய் மேலும் பரவாமல்  நாம் கடைப்பிடிக்க வேண்டியது என்ன ? 

• நோய்ப்பரவலை கட்டுப்படுத்த ஒவ்வொரு தனி நபரும் உணர வேண்டியது என்ன? 

சமுகப்பரவல் நோய் பரவலாக்கம் குறித்து பல விழிப்புணர்வு கருத்துகளுடன் பொருளாதார இழப்பினால்  நாடும் நாட்டு மக்களும் எதிர்கொள்ள போகும் சிரமங்கள், அரசின் கடமை, பொறுப்பு , மக்கள் உணர வேண்டிய உண்மை நிலை என அனைத்துமே பொது வெளியில் பிரச்சாரம் செய்யப்பட்ட்து .

இத்தாலி, ஜேர்மன், பிரான்ஸ், போன்ற பெரிய தேசங்களும் சுவிஸ் போன்ற சின்ன நாடுகளுடன். இலங்கை கூட பல விவசாய மானியம், மக்கள் தற்சார்பு என பல 
திட்டங்களினுடாக மக்களை நெறிப்படுத்தியது 

இது தான் யதார்த்தம்..! 
அரசின் நிர்வாகத்தால் இவ்வளவு தான் முடியும்..! 

மக்களே புரிந்து ஒத்துழைப்பு கொடுங்கள் என்று நாட்டின் பிரதமர் அமைச்சர்கள் அறிவித்து கொண்டே இருந்தார்கள்.

🔺முகமூடி அணிந்தால் நோய் தொற்றாது என்பது இல்லை, நோய் பரவல் கொஞ்சமே கொஞ்சம் மட்டுப்படும் என்பதோடு 

🔺இது வரை மருந்து கண்டுபிடிக்கல்ல என்றாலும் கண்டு பிடித்தாலும் அது அனைத்துலக மக்களுக்கும் பாவனைக்குவர  குறைந்தது ஒரு இரு வருடம் தேவை 

🔺 நாட்டின் பொருளாதார இழப்பினுடே உயிர் பாதுகாப்புக்கென lockdown தொடர முடியாது

🔺 ஆனால் மக்கள் ஒவ்வொருவரும் சமூக இடைவெளிகளையும் தற்பாதுகாப்பு எச்சரிக்கைகளையும் தொடர்ந்தும் கடைப்பிடிக்கணும் என்று இன்று வரை  நாட்டு மக்கள் பேசும் மொழிகளில் அறிவித்து கொண்டே இருக்கின்றார்கள். 

அரசும், தனி மனிதர்களும்  தங்கள் சமூகக்கடமை உணர்ந்து செயல் படுகின்றார்கள். நம்பிக்கை தருகின்றோம் என்று இல்லாததை இருக்கின்றதெனும் மாயவலை பிம்பம் உருவாக்கி மக்களை ஏய்க்கவில்லை, ஏமாற்றவும் இல்லை 

உலக அதிகாரங்களும், வல்லுநர்கள் ஆய்வாளர்களும்  இந்த ஒரு ( 2 ) 
வருடத்தினுள் கொரோனா வைரஸ் எவ்வகை உயிர்இழப்பை உருவாக்கும் என்று அறிந்தே இருக்கின்றார்கள்.

கொரோனா வைரஸ் நோய்க்கு தொற்றாமல் தடுக்க தனி நபர் சுய கட்டுப்பாடு பாதுகாப்பு இருந்தாலும் நம்மை சார்ந்தோரும் சமூகமும் அதே கட்டுப்பாடு ஒழுங்கு முறை கடைப்பிடிக்க வில்லை என்றால் மொத்த சமூகமும் பாதிப்படையும். 

⚫️ நோய் தடுக்கும் மருந்தோ, வந்த பின் காக்கும் மருந்தோ மாத்திரையோ மருத்துவமனைகளில் இல்லை. சாதாரண காய்ச்சல் வலி  மாத்திரை கூட எல்லோருக்கும் ரேஷன் செய்து பார்மசிகளில் கட்டுப்படுத்தி விற்றார்கள். ஆரம்பத்தில் ஃப்ளு க்குரிய அண்டிபயாடிக் கொடுத்து  நோயாளிகளுக்கு வேறு பல புதிய பிரச்சனைகள் உருவானதால் எந்த ஆண்டிபயாடிக் மருந்தும் எடுக்க வேண்டாம் என்று அறிவித்தார்கள். 

⚫️ முடிவுகள் மாறி கொண்டே இருந்தன. Who  வழி காட்டல்  என்பது ஆரம்ப நிலையில் தான் இங்கே இருந்தது. ஓவ்வொரு நாடும் தங்கள் நாடு எதிர்கொண்ட  வைரஸ் பிறழ்வுக்கேற்ற வகையில் பாதிக்கபடும் நோயாளிகளுக்கு தோன்றும் அறிகுறிகளை அவதானித்து ஆராய்ந்து தமக்கு என தனி  வழி முறையை பின் பற்றி கொண்டது 

⚫️ போதுமான மருத்துவ உபகரணம் இல்லை. Corona virus தீவிரமாகி நுரையீரல் அழற்சி , மூச்சு திணறும்  சுவாசம் தடை படும் போது செயற்கை முறையில் சுவாசிக்க உதவும் கருவி வென்றிலேற்றார் என்பார்கள், இந்த இயந்திரம் ஒன்றின் விலை இந்திய மதிப்பில்   ஐந்து இலட்சம் என்கின்றார்கள். மே மாத கணக்கெடுப்பின் படி முழு இந்தியாவுக்கும் 60000  ( அறுபது ஆயிரம் மட்டுமே ) இந்த இயந்திரம் இருந்தது. ( தமிழ் நாட்டில் எத்தனை வென்றிலேற்றார் உண்டு என்பதை குறித்த விபரம் என்னிடம் இல்லை ) 

⚫️ ICU வில் தீவிர சிகிச்சை என்றால் அந்த இயந்திரத்தின் குழாயை  சுவாசிக்க சிரமப்படும் நோயாளியின் வாய்க்குள் விட்டு தொண்டை குழிக்குள்ளால் ஊடறுத்து நுரையீரலை செயற்கையாக இயங்கும் படி பொருத்தி விட்டால்  அந்த நோயாளி உயிர் பிழைக்கும் அல்லது உயிர் இழக்கும்  நாள் வரை 24  மணி நேர கண்காணிப்பு சிறப்பு பணியாளர் ( கடினமான பணி) மெஷினின் இயங்கு நிலை மற்றும் நோயாளிக்குரிய ஏனைய கவனிப்பு படுக்கை பராமரிப்பு ( லிங்க் பாருங்கள் )  என்று ஒவ்வொருவருக்கும்  தனி கவனிப்பு தேவை. 

🖤 ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோருக்கு  நோய் தீவிரமாகுமானால்  ஒரே வென்றிலேட்டர்  மூலம் எல்லோருக்கும் சுவாசத்தை கொடுக்க முடியாது. ஏழு தொடக்கம் பத்து நாளும் ஒருவருக்கு ஒரு வென்றிலேற்றார் இயங்கும். அவ்வாறாயின் போதுமான வென்றிலேற்றார் அதை இயக்கும் பணியாளர்கள் தேவை. ஆனால் இல்லை . வளர்ந்த செல்வந்த நாடுகளிடம்  போதுமான வென்றிலேற்றார் இல்லை. வென்றிலேற்றார் இயக்கும் பணியாளர்களும் போதுமாக இல்லை. 

அவ்வாறான நேரத்தில் யாருக்கு உயிர் வாழும் உரிமையை கொடுக்கணும் எனும் தீர்மானத்துக்கு மருத்துவமனை மருத்துவர் குழு முடிவெடுக்கும் இக்கடடான நிலை இங்கே உருவானது. இத்தாலி, சுவிஸ், பிரான்ஸ் உட்பட பல நாடுகளில் முதியோருக்கு சிகிச்சை கைவிடப்பட்டு, இளையோருக்கு முதன்மை எனும் முடிவை மருத்துவமனை ( சுகாதார துறை அனுமதியுடன் ) எடுத்திருந்தது.

அடுத்து முக்கிய கவனிப்பு 

🔴 சீனாவில் உருவான Covid 19  எனும் கொரோனா வைரஸ் தான் பரவி செல்லும் இடத்தின் சூழலுக்கு ஏற்றபடிபிறழ்வடைகின்றது. 

இயற்கை, கால நிலை, வெயில் குளிர் உணவு எனும் நம்பிக்கைகளை எல்லாம் தகர்த்து கொண்டு மாறிக்கொண்டே இருக்கின்றது. இந்த மாற்றத்தால் இதற்கான தடுப்பு மருந்து ( வாக்சின்) கண்டு பிடித்தாலும் அது அந்த நேரத்து பிறழ்வடைந்த வைரஸை தடை செய்யுமா?  கட்டுப்படுத்துமா?  என்பதே இன்றைய ஆய்வாளர்களின் பெறும் குழப்பமாக இருக்கின்றது.  

இந்தியாவில் வெப்ப நிலை, பாரம்பரிய உணவு, இயற்கையாக  தூசிகளினுடான புழக்கத்தில் உருவாக்கி இருக்கும் நோயெதிர்ப்பு சக்திக்கு ஏற்ற மாதிரி வைரஸ் பிறழ்வடைந்தால் என்ன நடக்கும் என்பதை கற்பனை செய்ய சொல்லவில்லை. 

எங்களுக்கு ஒன்றும் நடக்காது .வைரஸ் ஒன்றுமே இல்லை என்று அசட்டை தனம் வேண்டாம்.சமூக விலகல் , மாஸ்க் , கைகளை சோப்பு போட்டு கழுவுதல், அதிகம் வெளியில் அலையாமல் பொது போக்குவரத்தை தவிர்த்து ஆரோக்கியமான உணவுகளை  முக்கியமாக விடடமின் சி & டி சேமித்து கொள்ளுங்கள். 

உங்கள் தைரியம் தலை காக்கும்💚

Facebook link 

1 கருத்து:

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!