2006  யூன் மாதம் என் மகளின் 5 th Birthday பார்ட்டி யில்  விதை ஊன்ற பட்டது . அதன் பின் 15 க்கும் மேற்படட வருடங்கள் சுவிஸுல் சகல பகுதிகளுக்கும், கேட்டரிங் ஈவண்ட்ஸ் பொறுப்பெடுத்து  2000, 1500 , 1000  க்கும் மேற்படடவர்கள் கலந்து கொண்ட திருமணம், பூப்புனித நீராட்டு   பிறந்த நாள் விழாக்களை நடத்திய அனுபவம் உண்டு.
100 விருந்தனர் கலந்து கொள்ளும் விழாக்கள் இதுவரை  500 க்கும் மேல் நடத்தி இருக்கின்றேன். ஒவ்வொரு விருந்தும், விழாவும் என் சொந்த  விருந்தென்னும் அக்கறையும் அர்ப்பணிப்பும் முழு மனத்தோடான செயல் பாடும் எங்கள் சார்பில் விடும் தவறுகளுக்கு சாக்கு போக்கு சொல்லாத மன்னிப்பும்  உணர்ந்து திருந்துவதும்  வியாபாரத்திலும் வாழ்க்கையிலும் கடைப்பிடிப்பதால்  வெற்றிகளை தக்க வைத்து கொண்டுள்ளேன்.
நான் எதிரிகளை உருவாக்குவது இல்லை, என்னை எதிரியாக நினைத்து கொள்வோரை குறித்து கவலை படுவதும் இல்லை  ( மதியாதார், புரியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம் 🌻) 
நிறுவன  கருத்தரங்குகள், சர்ச் கூட்டங்கள், சுற்றுலா பயணிகளுக்கான உணவு ஒப்பந்தம், சினிமா சூட்டிங் குரூப்புக்குரிய உணவு  என்று வெவ்வேறு பட்ட அனுபவங்களும் நிரம்ப கிடைத்து இருக்கின்றது. 
உள்ளுர் சுவிஸ் மக்கள், நிறுவனங்கள், சர்ச் கூட்ட்ங்களுக்கும். எங்கள் தமிழ் மக்களில் பலரையும் தொடர் வாடிக்கையாளராக பெற்றிருக்கின்றேன்.  பத்து, பதினைந்து வருடத்துக்கு முந்திய வாடிக்கையாளர்களும்  இன்று வரை தங்கள் வீட்டு விஷேசம் என்றால் எங்களிடம் தொடர்ந்து பொறுப்பை தரும் படி அவர்கள் நம்பிக்கையை காப்பாற்றி கொண்டிருக்கின்றேன்.
நிறுவனம் ஆரம்பித்த ஆரம்ப காலங்களில் போதிய  அனுபவமின்மை மற்றும் மனிதர்களின் சூது புரிந்து கொள்ளாமையினால் சில சறுக்கல்கள், தவறுகள் விட்டிருந்தாலும்  அதை அனுபவ பாடங்களாகவே உணர்ந்து மீண்டும் அந்த தவறு ஏற்படாத படி திருத்தி கொண்டுள்ளேன் .
ஒருவர், பத்துபேர், ஆயிரம் பேர் என்றாலும் உணவின் சுவையும் பொருள்களின் தரமும் மக்களின் ஆரோக்கியம் குறித்த தனிப்படட அக்கறையும்,அன்றன்று உடனே சமைத்து என் நேரடி கண்காணிப்பில் ஒவ்வொன்றையும் செய்வதும் அன்றிலிருந்து இன்று வரை மாற்றாமல் இருக்கின்றேன். இல்லை என்று சொல்லாமல் கலந்து கொள்வோர் எல்லோருக்கும் உணவு கொடுக்கணும், இது எங்கள் சிறப்பு தகுதி.
அதிக வருவாய்க்கு ஆசைப்பட்டு எங்கள் உழைப்புக்கு அதிக ஓர்டர்களை பொறுப்பு எடுப்பது இல்லை. நம்பி தந்த ஓடர்களை ஏனோதானோ என நடத்தியதும் இல்லை.
(இதை என் Facebook  நண்பர்களாக இணைந்திருக்கும் வாடிக்கையாளர்கள் நன்கு அறிவார்கள்😍.)
🔻 ஊரவர், உறவினர் என  போட்டி
பொறாமைகள், முன் சிரித்து பின் 
முதுகில் குத்துவோர்,  
🔻 ஒரு பக்கம் காது கேட்பதில் இருக்கும் குறைபாடுகளினால் எதிர்கொள்ளும் தொலைபேசி தொடர்பாடல் சங்கடங்கள், கேலிகளும், சீண்டல்களும், 
🔻 பெண் தானே இவளால் என்ன செய்ய முடியும் எனும் இளக்காரங்கள் கடந்தும் 
என்னை நம்பி தங்கள் வீட்டு விஷேசங்களை ஒப்படைத்து ஆயிரக்கணக்கில் அட்வான்சும் கொடுத்து நல்லுள்ளங்கள் தொடர்ந்து என்னை உற்சாகப்படுத்தி கொண்டே வந்தன, இன்று வரை என்னை  எதிர் நீச்சல் போட வைக்கும் அன்பு வாடிக்கையாளர்கள், நண்பர்கள் என்னுடன் இணைந்து பயணிப்பதனால் என் உடல் குறைகள் எனக்கு பெரிதாக தோன்றியது இல்லை. 
 13  வயதில் ( 1987 ) 2 மாடி உயரத்திலிருந்து விழுந்து வலிகள்நிறைந்து கண், காது, தலை என பல உபாதைகளோடு  1990 சுவிஸ் அரசிடம் மருத்துவ உதவி கோரிக்கையோடு வந்தேன். சுவிஸ் அரசின் மாற்று திறனாளிகளுக்கான உதவிகளை பெற்று உழைக்காமல் வாழும் வாய்ப்பு எனது மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டு, பத்து வருடங்கள் முன் உதவி தொகைக்கு 
ஒப்புதல் கிடைத்த  போதும்  எனக்கு  உடலில் தான்  குறைபாடே தவிர சிந்தனையில் இல்லை என்று அரசின் உதவிகளை மறுத்து, மற்றவர் இரக்கம், பரிதாபத்துக்கு இடம் கொடுக்காமல் சுயமாக உழைத்து பிழைக்கின்றேன். இது வரை என் இயலாமை கூறி ஒரு சதமும் அரசின் உதவி கேட்டது இல்லை . 
வாழ்க்கையில், வியாபாரத்தில் போட்டி இருக்கலாம், பொறாமை இருக்க கூடாது 
என் மனதில் என்றும் எவர் மேலும் பொறாமையோ போட்டி உணர்வோ தோன்றியதில்லை. 
எந்த குறையுமில்லாதவர்கள்  அடுத்தவர் கையேந்தி வாழ,  தினம் வலிகளோடு போராடி பலரை வாழவைக்கும் என்னை விட எனக்கு யாரும் ரோல் மாடல்கள் இல்லை 
யாராவது என்னிடம் சாதனை பெண் யார் என்று கேட் டால்  நிஷாவாகிய நானே 
என்று சொல்வேன் 😇
நான் நான் தான்...,! ❤️ எனக்கென கிடைக்கணும் என கடவுள் நிச்சயித்தது  அதன் காலத்தில் எனக்கு கிடைக்கும்.
அதுக்கு மேல் எந்த எதிர்பார்ப்பும் இல்லை ❣️❣️ இலட்சங்களில் சம்பாதித்தாலும்  என் இலட்சியம் தடையானது இல்லை ..! என்றும் எளிமையான நிம்மதியான வாழ்க்கையை விரும்புகின்றேன் 🙇♀️
எனக்குள் இருக்கும் உரமும், உண்மையும்
நேர்மையும் , தன்னம்பிக்கையும்  என் அம்மா, அப்பா வளர்ப்பில் கிடைத்தது என்றாலும் அதை மெருகூட்டியவர்கள் எனக்கு கிடைத்த Swiss மேலதிகாரிகள் , நண்பர்கள் 🙏
எனது மேலதிகாரிகள் தோழிகளானது எனக்கான வரம் 🙏 நான் அந்நிய மொழியில் புரிந்து கொள்ள, கற்றுக்கொள்ள 
சிரமப்படும் போதெல்லாம் வலிகளில் முலையில் முடங்கி விடாமல்  உன்னால் முடியும் என்றே ஏற்றி வைத்து தினம் ஒவ்வொரு புதிய ஜெர்மன் மொழி சொல் கற்பித்து, ஜெர்மன்  பத்திரிகைகள், காமிக்ஸ் புத்தகம் வாசிக்க ஊக்கப்படுத்தி வேலையோடு தொழிற்கல்வி. கற்றுக் கொள்ளும் வாய்ப்பையும் பெற்று தந்து வேலை வீட்டு ஈவண்ட்ஸ் நிறுவனம் ஆரம்பிக்க முன்பே தங்கள் நண்பர்கள் மூலம் விருந்துகள் பரிந்துரைத்து மேலே செல் நிஷாந்தி என்று என்னை மெருகூட்டினார்கள். 
தமிழ் மக்களை மட்டும் அல்ல சுவிஸ் வாடிக்கையாளர்களை நான் நிறுவனம் தொடங்கும் முன்பே பெற்றிருந்தேன் இன்று வரை அவர்களின் ஆதரவு தொடர்கின்றது என்பதுடன் எனக்கான வெற்றி பாதையின்  பயணத்தில் முன் ஒளியாகவும்  இருக்கின்றார்கள். 
என்னை உற்சாகப்படுத்தி வாழ வைக்கும் அனைவருக்கும் கோடானு கோடி நன்றிகள் 
தொடர்ந்தும் அனைவர் ஆதரவும் வேண்டி நிற்கின்றேன் 🙏 
❤️ உங்கள் வீட்டு விஷேசம் எப்போதும் நம்ம வீட்டு விசேஷமுங்க ..❤️
கடந்த காலங்களில் நாங்கள் செய்த பார்ட்டிகளின் புகைப்படங்கள் பகிர்கின்றேன் 🌻
Nisha : 
WhatsApp,  Messenger 
00 41787230259
Praba ;
Call: 0041 79  916 87 17 
Gmail: :
 

























அனைத்தும் மேலும் சிறப்பாக அமைய வாழ்த்துகள்...
பதிலளிநீக்குவாழ்த்துகளும் பாராட்டுகளும். தொடரட்டும் உங்களது வெற்றிப் பயணம்.
பதிலளிநீக்கு