03 மார்ச் 2020

கொரோனா வைரஸ் (Coronavirus_in_Swiss )

#Coronavirus_in_Swiss

கொரோனா வைரஸ் காய்ச்சல் மிகவும் தீவிரமானது மற்றும் ஆபத்தானது என்று  பொதுமக்களுக்கு சுகாதார அமைச்சின் அவசர அறிவிப்பு!

தற்பாதுகாப்பு முறை 
••••••••••••••••••••••••
• தொண்டை எப்போதும் ஈரப்பதமாக இருக்கும் படி  கவனமாக இருங்கள்.
• தொண்டை வறண்டு போக விடாதீர்கள்।
தொண்டை வறண்டு இருப்பதாக உணர்ந்தால், உடனே  நீர் பருகுங்கள். நிரம்ப நீர் குடியுங்கள்
குடிநீர் எப்போதும் உடன் வைத்திருங்கள்.

• வயதுக்கு ஏற்ப  பெரியவர்கள் 50-80 சிசி
குழந்தைககள் 30-50 சிசி   வெதுவெதுப்பான நீரையம் தினமும்  குடிக்கவும்.

❌ எண்ணெயில் வறுத்த,பொறித்த அல்லது காரமான உணவைத் தவிர்த்து கொள்ளுங்கள்.
வைட்டமின் சி  கொண்ட பழங்கள் காய்கறிகளை அதிகம் உணவில் சேருங்கள்.

❌ மார்ச் 2020 இறுதி வரை, நெரிசலான இடங்களுக்குச் செல்ல வேண்டாம்.

 ❤️ குழந்தைகள் கவனம் ❤️
உடலில் நோய் எதிர்ப்பு திறன் குறைந்த  குழந்தைகள், வயதானவர்கள் இலகுவாக
பாதிக்கப்படுகின்றனர.

அனைவரும்....!
💚 ரயில் அல்லது பொதுப்போக்குவரத்தில் தேவைக்கேற்ப முகமூடி அணிந்து கொள்ளுங்கள்( பயணங்களை தவிர்க்கலாம்)

 🔴 அறிகுறிகள் 🔴
காய்ச்சல், இருமல், மூச்சுப் பிரச்சினைகளுக்கான அறிகுறி தென்பட்டாலோ உடனடியாக மருத்துவரை நாடவும்.

🚫  இந்த அறிகுறிகள் இருந்தால் வெளியில் செல்வதை கடடாயம்
தவிர்த்துக்கொள்ளுங்கள்.
வீட்டினுள் இருந்து வைத்தியரை தொடர்பு கொள்ளுங்கள். ( வைத்திய சோதனை உங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும், எப்போதும் வந்து போகும் வைரஸாக இருந்தால் தகுந்த ஆண்டிபயாடிக் மருந்துகளை டாக்டர் பரிந்துரைப்பார், அது
 நல்லது. இதனால் வருடம் தோறும் வரும் வைரஸ் உடன் Coronavirus இணைந்து கொள்வதை தடுக்க முடியும் )

🖤 முக்கிய அறிவுறுத்தல் 🖤
• கை குலுக்குவதை தவிர்த்துக்கொள்ளவும். ( 🙏 வணக்கம் சொல்வோம்)
• அடிக்கடி கைகளை சோப் போட்டு கழுவிக் கொள்ளவும்.
•  வெளியில்  சென்று வீட்டுக்குள் சென்ற உடன் கைகளை கழுவி  desinfektion handgel ( கிருமி நாசினி ) தடவி
சுத்தமாக்கி கொள்ளவும்.
• தும்மும் போதும் இருமும் போதும்
 ஒரு தடவை மட்டும் உபயோகிக்க கூடிய Tembo பேப்பர் கைக்குட்டைகளை உபயோகித்த பின்உடனே குப்பையில் சேர்க்கவும்.
• பேப்பர்கைக்குட்டை இல்லாதவிடத்து கைகளால் பொத்தி தும்மவும்,

😍 பயந்து விடாதீர்கள் 😍

மருந்து, மாத்திரை கண்டு பிடிக்க பட இல்லையே தவிர குணமாக்க முடியாத நோயாக இது இல்லை.

வேகமாக பரவுகின்றது, உடலில் நோய் எதிர்ப்பு திறன் குறைந்தோரை தாக்குகின்றது என்றாலும் சீனாவில் இந்த வைரசால் பாதிக்க படட 18  பேரில் 10  பேருக்கு நோய் குணமாகி வீட்டுக்கும் அனுப்பி இருக்கின்றார்கள் 🌻

போதுமான நோய் எதிர்ப்பு சக்தியை சேமித்து வைத்து கொண்டோரால் இந்த வைரஸை  வெல்ல முடியும் ❤️

எமது  முன் எச்சரிக்கை முயற்சிகள் வைரஸ் பரவும் வேகத்தை மட்டுப்படுத்தும்!

பயம், பதற்றம் வேண்டாம்!

குழந்தைகளை வெளிய விட வேண்டாம்.
கூடடமாக விளையாட வேண்டாம்.

காய்ச்சல் இருமல் இருந்தால் வீட்டில் இருந்து பயந்து மறைத்து ஒளியாமல் உங்கள் குடும்ப மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள்.

அடுத்து வரும் பத்து நாட்களுக்கான உணவுப்பொருட்களை வாங்கி வைத்து கொள்வது  நல்லது.
மாதகடைசி  என்பதால் அநேகமானோருக்கு சம்பளம் வந்திருக்கும்.

மொத்தமாக பில் கட்டி முடிக்காமல் இந்த மாதம் பிந்தி கட்டுவதா சொல்லி விடடேனும் அத்தியாவசிய உணவு பொருட்க்களை வாங்கி வையுங்கள்.

இதுவும் கடந்து போகும்.

Coronavirus மேலதிக விபரங்களை
 நான்கு மொழிகளில்  ( English, German, Italy, French ) உடனுக்குடன் அறிய சுவிஸ் அரசின் அதிகார பூர்வ தகவல் அப்டேட் ஆகும் பக்க லிங்க் First Comment ல் இணைக்கின்றேன்.
 🙏ஆல்ப்ஸ் தென்றல் Nisha

கொரோனா வைரஸ் ( Coronavirus_in_Swiss)

https://www.bag.admin.ch

1 கருத்து:

  1. மேலதிகத் தகவல்கள் சிறப்பு. இங்கேயும் தகவல்களைத் தருவதற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!