03 மார்ச் 2020

கோரோனோ வைரசும் இத்தாலியும்..

# Coronavirus_in_Europa...! 

கோரோனோ வைரசும் இத்தாலியும்..

இத்தாலியின் லொம்பார்டியா பகுதியில் கொடோனோ நகரில் சென்ற வெள்ளிக்கிழமை முதலாவது கோரோனா வைரஸ் தாக்க இழப்பு ஏற்படும் வரை ஐரோப்பியர்களில் பலரும் இந்த அபாயம் குறித்து பெரிதும் அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் அரசுகள் ஒரளவு முன்னெச்சிக்கை நடடிக்கைகளை மேற்கொண்டே இருந்தன.விமான நிலையங்களில் நீலக் கதிர் பரிசோதனையை ஏற்கனவே இத்தாலி ஆரம்பிதிருந்தது. ஆனாலும் அது எவ்வாறு இத்தாலிக்குள் பரவியது என்பது குறித்த தெளிவு இல்லை. அதனைக் கண்டறியும் சாத்தியமும் இல்லை.

கொரோனா வைரஸ் வடக்கு இத்தாலி முழுவதும் பரவத் தொடங்கும் வரை இது ஒரு ஆசியப் பிரச்சனையாகவே பொதுவில் பார்க்கபட்டது. லோம்பார்டியா மற்றும் வெனெட்டோ பிராந்தியங்களில் இறப்பு எண்ணிக்கை அதிகரித்த போதிலேயே இது தொடர்பில் எல்லோரும் பரபரக்கத் தொடங்கினர்.

இத்தாலியில் இது வேகமாகப் பரவத் தொடங்க, இத்தாலிய அரசும் மருத்துவத்துறையும் விரைந்து செய்ற்பட்டன. பாதிப்புக்குள்ளான பிரதேசங்களில் உள்ள பதினொரு நகரங்கள் முடக்கபட்டதும், பாடசாலைகளை மூடியது, பொது இடங்களில் மக்கள் கூடுவதைத் தவிர்த்துக் கொள்ள எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும், இந்த வைரஸ் தாக்கத்தின் பரவு வேகத்தைக் கட்டுப்படுத்தியது. ஆயினும், இத்தாலியின் பெரு மக்கள் பரம்பலில் இது அவ்வளவு சாத்தியமானதல்ல என்பதை வைரஸ் தொற்றின் பரவு பரம்பலும், வேகமும் உணர்த்தியது..

இது இவ்வாறிருக்க; இத்தாலியின் அண்டைநாடுகளுக்கும் இத்தாலியிலிருந்து இந்த வைரஸ் தொற்றுப் பரவத் தொடங்க, ஐரோப்பிய நாடுகள் அனைத்துதம் விழிப்படைந்தன. இத்தாலியிலியிருந்து சுவிஸ், ஆஸ்திரியா, ஸ்பானியா, ஆகிய நாடுகளுக்கும் இந்த வைரஸ் தற்போது பரவியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆஸ்திரியா இத்தாலியுடனாக புகையிரதப் போக்குவரத்தினை இடைநிறுத்தியுள்ளதைத் தொடர்ந்து, னைய நாடுகளிலும் அதனைச் செய்ய வேண்டும், இத்தாலியின் எல்லைகளை மூட வேண்டும் என்ற யோசனைகள் முன் வைக்கப்பட்டன.

ஆனால் அது அவ்வளவு சாத்தியமான விடயம் அல்ல. உதாரணமாக, சுவிற்சர்லாந்தின் வலதுசாரி அரசியல்வாதிகள், சுவிஸின் இத்தாலிய எல்லையை மூட வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர். ஆனால் அந்த நடவடிக்கையின் பின்னாலுள்ள சிரமங்களை அவர்கள் புரியாதுள்ளனர் என்ற எதிர்வாதங்கள் எழுந்தன.

அதன் முக்கிய காரணம், இத்தாலியில் இருந்து, எல்லை தாண்டிய தொழிலாளர்களாக, தினசரி சுமார் தினசரி 70,000 பேர் வரையில் வந்து செல்கிறார்கள். தென் மாநிலமான திச்சினோவின் வணிக நிலையங்கள், தொழிற்சாலைகள், அலுவலகங்கள் என பல இடங்களிலும் இப் பணியாளர்கள் தொழில் புரிகின்றனர்.

இவற்றுள் அத்தியாவசிய சேவைப் பணியாளர்கள் பலரும் உள்ளார்கள். குறிப்பாக சுகாதாரத் துறையில் சுமார் 4000 க்கும் அதிகமானவர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களில் குறைந்தது 120 மருத்துவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான மருத்துவத் தாதிகளும் அடங்குவர். எல்லையை மூடுவதால் இவர்கள் சேவை இழக்க நேரிடும்.

ஆனால் வௌிநாட்டவர்களது வருகையை மட்டுப்படுத்த வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்திவரும் வலதுசாரிக்கட்சிகள் இச் சந்தர்ப்பத்தில் தங்கள் குரலை மேலும் உயர்த்துகின்றன. அரசியல் நோக்கம் கொண்ட இந்த வாதம், மக்களின் சுதந்திர இயங்குதலுக்கு எதிரான செயல் என எதிர் தரப்பு வாதங்கள் வைக்கப்படுகின்றன.

ஐரோப்பாவில் கோரோனா வைரஸ் தாக்கத்தின் பரவல் அதிகரித்து வரும் நிலையில், இந்நாடுகள் பலவற்றிலும், நடைபெறவிருந்த பல்வேறு நிகழ்வுகள் கண்ணகாட்சிகள் அனைத்தும் ரத்துச் செய்யப்பட்டு வருகின்றன.

நிறைவாக கோரோனா வைரஸ் தாக்கம் அச்சங் கொள்ள வேண்டியதுதானா ? என்றால் இல்லையென்றே சொல்ல வேண்டும். ஆனால் நாம் அனைவரும் அவதானமாக இருக்கக் கடமைப்பட்டுள்ளோம். உரிய தற்காப்பு முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டியவர்களாக உள்ளோம். குறிப்பாக வயதானவர்கள், மற்றும் நோயாளிகள் குறித்த அக்கறையும் பரிவும், கவனிப்பும் அவசியமானவை.

இந்த வைரஸ் தாக்கம் தொடங்கிய சீனாவின் யுகான் நகரிலிலேயே, வைரஸ் தாக்கதிலிருந்து விடுபட்டு வீடுதிரும்பியவர்கள் பலர் இருக்கின்றார்கள். சமூக வலைத்தளங்களில் வைரஸ் தாக்கம் குறித்துப் பரப்பப்படும் போலியான, ஊர்ஜிதமற்ற தகவல்களை , மீளவும் பகிராதிருக்க வேண்டும். ஒவ்வொரு நாடுகளினதும், சுகாதாரத்துறையின் அறிவிப்புக்களை மட்டுமே கருத்திற் கொள்ள வேண்டும்.

மட்டுப்படுத்தப்பட்ட போக்குவரத்தினால், பொருட்களுக்கான பரிமாற்றங்களிலும் சிரமங்கள் எழுந்துள்ளன. பல இடங்களிலும் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சத்தில் மக்கள் பெருமளவிலான பொருட்களை சேகரித்து வைப்பதனாலும் இந்தச் சிரமங்கள் ஏற்படுகின்றன. இது தவிர  தொழிலகங்கள், உணவகங்கள், போக்குவரத்து என்பவற்றில் ஏற்படும் முடக்கங்கள், பெரும் பொருளாதார வீழ்ச்சியினை, இத்தாலிக்கு மட்டுமல்லாது, எதிர்வரும் நாட்களில் அனைத்து நாடுகளுக்கும் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்டுகிறது.

Thank you
Copyiert

Face book copy



1 கருத்து:

  1. இத்தாலியிலிருந்து இந்தியாவிற்கு சுற்றுலா வந்திருக்கும் நபர்களுக்கும் பரவியிருப்பதால் இங்கே அவர்கள் தனிமைப்படுத்தப் பட்டு இருக்கிறார்கள்.

    நலமே விளையட்டும்.

    பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!