09 ஜனவரி 2016

சுவிஸ்ஸர்லாந் சுற்றிப்பார்க்க வாறிங்களா?உலக வரை படத்தில் சுவிஸ்ஸர் லாந்த் 
படம் நன்றி  இணையம் 

பிறப்பால் இந்திய இலங்கை கலப்பிலும் வளர்ப்பால் முழு சுவிஸ் காரியாகவும்  கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக என்னுடைய வாழ்க்கையில் மூன்றில் இரண்டு பகுதியை சுவிஸ்லர்லாந்து தேசத்தில்  கழித்து  சுவிஸ் குடியுரிமையும் பெற்ற என்னிடம் உன் சொந்த நாடு எது என கேட்டால் தயக்கமில்லாமல் சொல்வேன்! என் நாடு சுவிஸ்லர்லாந்தென...!

எனக்குள் அத்தனை தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் தந்து புலம்பெயர்ந்தவர்களென ஒதுக்கி வைக்காமல் எங்கள் திறமைக்கும், அறிவுக்கும் இடம் கொடுத்து எம்மை ஊக்கப்படுத்தும் அன்பான, பண்பான மக்களை கொண்ட தேசம் இது. சொந்த நாட்டில் கிடைக்காத சுதந்திரமும், நிமிர்ந்த நேர் கொண்ட பார்வையும், பாரதி சொன்ன புதுமைபெண்ணாய், எதற்கும் அஞ்சாத தைரியமும் இந்த நாடு எனக்கு தந்த அளப்பரிய பரிசில்கள்.

உன்னால் முடியும், உன்னாலும்முடியும், உன்னால் தான் முடியும் என என்னை எனக்குள் இருப்பதை வெளிக்கொணர்ந்து என்னை வானம் தொட வைத்த அன்பான நட்புக்களை கொண்ட நாடு இது.

நிறைகள் போல் குறைகளும் இருந்தாலும்  நிறைவானது வரும் போது குறைவானது மறைந்தே போகும் படியாய்  நாட்டுப்பற்றுக்கொண்ட மக்களை கொண்ட நாடு இது! 

இயல்பிலேயே அன்பில் ஊறிய இம்மக்கள் வந்தாரை வாழவைக்கும் தர்மப்பிரபுக்கள் என்றாலும் மிகையில்லை.புலம்பெயர்ந்து அகதியாய் வரும் ஒருவருக்கு உலகில் எங்குமே கிடைக்காத வசதிகளையும், வாய்ப்பையும், பாதுகாப்பையும் தரும் அருமையான தேசம் இது,

இந்த நாட்டைக்குறித்தும் இதன் சிறப்புக்கள் குறித்தும் எனக்கு தெரிந்த வரை சிறு தொடராய் இங்கே பகிரலாம் என நினைக்கின்றேன்!

 நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் உறவுகளே!

இப்பதிவை படிப்பவர்கள் இந்த நாட்டை குறித்து அறியும் ஆர்வத்தோடு படித்து கருத்துக்களை இட்டால் மகிழ்வேன்.

 சுவிஸ்ஸர்லாந்த் 
Switzerland

சுவிட்சர்லாந்து (Switzerland) அல்லது சுவிஸ் கூட்டமைப்பு நிலப்பகுதிகளாலும் ஆல்ப்ஸ் மலையாலும் சூழப்பட்ட மத்திய ஐரோப்பிய நாடு.

சுவிஸ் நாட்டின் எல்லைகளாக வடக்கே ஜேர்மனி, மேற்கே பிரான்ஸ், தெற்கே இத்தாலி, கிழக்கே ஆஸ்திரியா மற்றும் லெய்செஸ்டீன் ஆகிய நாடுகள்உள்ளன.


                                   சுவிஸர் லாந்தை சுற்றி இருக்கும் தேசங்கள்... 
                                                       படம் நன்றி  இணையம் 
சுவிட்சர்லாந்து வரலாற்று நோக்கில் ஒரு கூட்டமைப்பு .ஆனால் 1848 முதல் ஒருங்கிணைந்த தனி நாடாக உள்ளது.

41,285 சதுர கிமீ பரப்பளவில் தோராயமாக 8,014,000 மக்கள் தொகை (2012) கொண்ட நாடு.1,853,400 மொத்த மக்கள் தொகையில் (23 %) வெளி நாட்டவர்களை கொண்ட நாடு!

சுவிஸ் நாடு 26 மாநிலங்களைக் கொண்ட கூட்டாட்சி குடியரசு ஆகும்.

கூட்டமைப்பின் அதிகாரத் தலைமையிடமாக பெர்ன் நகரமும் நாட்டின் பொருளாதார மையங்களாக இரண்டு உலகளாவிய நகரங்களான ஜெனீவாவும் சூரிச்சும் திகழ்கின்றன!

ஆட்சி மொழிகளாக ஜேர்மன், பிரெஞ்ச், இத்தாலி, உரோமன் போன்ற மொழிகள் உள்ளன!

சுவிஸ் நாடு அதன் மொழிகளுக்கு ஏற்பவே ஆழைக்கப்படுகின்றது.

Schweiz..ஜேர்மன் 
Suisse.. பிரெஞ்சு
Svizzera.. இத்தாலி 
Svizra.. உரோமன்
Switzerland.. ஆங்கிலம் 

ரோமன் கத்தோலிக்க, புரொடஸ்டான் கிறிஸ்த்தவர்களை அதிகம் கொண்ட நாடு இது!எனினும் மதவிடயத்தில் அவரவருக்காக தனிப்பட்ட சுய நிர்ணய உரிமைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாடும் இதுவே!

கிறிஸ்தவ நாடென சொன்னாலும் கிறிஸ்தவர்கள் என்பதனால் சட்டங்கள் இளகுவதுமில்லை அன்னிய மதத்தார் என்பதனால் இறுக்குவதும் இல்லை.!

தனி மனித சுதந்திரம் பொது நன்மைக்கும் சட்டத்துக்கும் உறுத்தலாய் ஆகாத வரை மதங்களை மதிக்கும் மக்களை கொண்ட தேசமும் இதுவே!

சுவிஸ்ஸர் லாந்த் என்றால் சட்டென நினைவுக்கு வருவது வங்கியும் கறுப்புப்பணமும்,ஹனிமூன்  ஜோடிகளும் தான்!

அதையும் தாண்டினால் மாட்டின் கழுத்தில் கட்டும் மணி, சாக்லேட், வாட்ச் என   நினைவில் வந்து மறையும்.

தொடர்வேன்!

46 கருத்துகள்:

 1. தொடர்ந்து எழுதுங்கள் சுவிஸ் பற்றி அறியும் ஆவலில்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முதல் வருகைக்கு நன்றி!தொடர்ந்து வாருங்கள்!

   நீக்கு
 2. பார்க்கவேண்டும் என்று விரும்பும் நாடு சுவிஸ். சீஸ் மற்றும் சாக்லட், பசு, பசுமை என்று அழகு கொஞ்சும் நாடு. எழுதுங்கள், தொடர ஆவலாக இருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக வருக,தங்கள் வரவு நல் வரவரவாகட்டும்! சீஸும் பாலும் ஒடும் நாடு தான் இது!

   நீக்கு
 3. ஆவலுடன் தொடர்கிறேன் சகோதரியாரே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி ஐயா! தொடர்ந்து வாருங்கள்!

   நீக்கு
 4. தொடருங்கள் தொடர்வேன்!

  பதிலளிநீக்கு
 5. விசாவையும் தயார் செய்து தாருங்கள் குடும்பத்தூடன் வருகிறேன் அக்கா :-) அருமையான பதிவு தொடருங்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விசா தானே? அதுக்கென்ன ? அனுப்பிட்டால் போச்சு! வாங்க!

   நீக்கு
 6. ஆல்ப்ஸ் மலையின் சிகரத்தில் ,ரெயின் நதி ஒரத்தில் என்று சிவந்த மண் பார்த்த சுவிஸ் நாட்டு அழகு கண்ணில் தெரிகிறது !
  மனிதநேய நாடு சுவிஸ் அரசும் ,மக்களும் பெருமதிப்புக்கு உரியவர்கள் !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம்ல! நீங்களும் சுவிஸ் வந்திருக்கிங்களா?

   நீக்கு
  2. நீங்க அழைத்தால் வரலாம்னு இருக்கேன் :)

   நீக்கு
  3. சுவிஸுல் அதுவும் சூப்பர் ரூரிஸ்ட் பிளேஸில் ஹோட்டல் வைத்திட்டிருக்கின்ற நான் வரவேண்டாம் என சொன்வேனா? வருபவரெல்லாம் வருக!வருக.!

   நீக்கு
 7. வாழ்த்துக்கள்! தொடர்கின்றேன்.

  பதிலளிநீக்கு
 8. எழுதுங்க அக்கா.. தொடர்ந்து படிக்கிறோம்... தெரிந்து கொள்கிறோம்...

  பதிலளிநீக்கு
 9. அருமையான விவரங்களுடனான கட்டுரையை தொடங்கியமைக்கு வாழ்த்துகள் நானும் அங்கு வந்து இருக்கின்றேன் அங்குள்ள பெண்கள் உதவும் மனப்பான்மை உள்ளவர்கள் என்பதை நான் அனுபவப்பூர்வமாக உணர்ந்தேன் ஸ்விஸ் வாட்ச் இன்றுவரை முதல் நிலையிலேயே இருக்கின்றது தொடர்ந்து பல விடயங்களை எதிர் பார்க்கிறேன்
  தமிழ் மணம் இணைக்க முடியவில்லையே ஏன் ?
  தலைப்புகான் எனக்கு தலையை சுற்றுகிறது விசா அனுப்பினால் பதிவர்கள் அனைவரும் வருவோமே....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பெரும்பாலான பேருக்கு இந்த தமிழ்மணப் பிரச்சினை இருக்கு... துளசிதரன் சாரின் தளத்திலும் இன்னும் சிலரின் தளத்திலும் பார்த்தேன்... இது தமிழ்மணப் பிரச்சினை போலும்...

   நீக்கு
  2. நன்றி கில்லர்ஜி சார்! ஆமாம் ஒட்டுப்பட்டை இணைக்க முடியவில்லை. என்ன செய்வது என எல்லாம் தெரிந்த நீங்கள் தானே எனக்கு சொல்லி வழி காட்ட வேண்டும்!

   இங்கே இருக்கும் பெண்கள் தான் கண்ணில் பட்டார்களா? ஆண்கள் யாரும் உதவி செய்யவில்லையா?

   சுவிஸ் வாட்ச் விளம்பரமே ரோட்டில்விழுந்து அதன் மேல் கார் ஏறி இறங்கினாலும் உடையாதாம்!

   நீக்கு
  3. நன்றி குமார்! உங்கள் உதவி,வழி காட்டலில் தான் தொடர்கின்றேன்பா!

   நீக்கு
 10. சுவிஸ் பற்றிய
  சுவாரஸ்யமான குறிப்புகள்..பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றிம்மா! தொடர்ந்து வாருங்கள்.

   நீக்கு
 11. நல்லதொரு முயற்சி .தொடர்ந்து எழுதவும் .நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி கரிகாலன் அவர்களே! தொடர்ந்து வாருங்கள்.

   நீக்கு
 12. எனக்கு அறுபதாம் திருமணம் நடக்கட்டும். தேனிலவுக்கு நானும் மாமாவும் வரோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அறுபதாம் கல்யாணத்துக்கு உங்கதோழியாய் நான் வரேன் ராஜிப்பாட்டி. இருந்தாலும் குசும்பு உங்க கூட பிறந்திருக்கும் போலவே! நல்லா இருக்கட்டும்.

   நீக்கு
 13. அருமை வாழ்த்துக்கள்! தொடர்கின்றேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சுவிஸர்லாந்த் எனும் தலைப்பு பல புதியவர்களை என் வலைக்குள் கொண்டு வந்துள்ளது. ம்ம்ம்ம் சூப்பர் தொடர்ந்து வாருங்கள்.

   நீக்கு
 14. சுவிட்சர்லாந்து பற்றி ஆரம்பம் நல்லாயிருக்கு... விரிவாய் எழுதுங்கள்.

  இன்னும் படங்களுடன் எழுதுங்கள்.
  எங்களுக்கும் சுற்றிப் பார்த்த மகிழ்ச்சி கிடைக்கட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படியா? தொடர்ந்திட்டால் போச்சு!
   நன்றிப்பா!

   நீக்கு
 15. பார்க்கவேண்டும் என நினைத்த நாடுகளில் சுவிஸ்ம்அடங்கும் தொடருங்கள் மகிழ்கிறேன்.

  பதிலளிநீக்கு
 16. சுவிஸ்ஸர் லாந்த் என்றால் சட்டென நினைவுக்கு வருவது வங்கியும் கறுப்புப்பணமும்,ஹனிமூன் ஜோடிகளும் தான்!
  என்றாலும் எனக்கு மிகவும் பிடித்த நாடுகளில் சுவிஸ் லாந்தும் ஒன்று அமைதியான சூழல் எங்கும் அமைதி எதிலும் அமைதி இரவு நேரங்களிலும் அதிகாலை நேரங்களிலும் விமானம் ஏற்றவும் இறக்கவும் தடை விதித்துள்ளது என்றால் பாருங்களேன்

  சுவிஸ் பற்றி இன்னும் அறிய ஆவலாய் உள்ளோம் சுவிஸ் நாட்டு வருமானம் என்னவாக இருக்கும் அதையும் பகிருங்கள்
  நன்றியுடன் நண்பன்

  பதிலளிநீக்கு
 17. சுவிஸ் பற்றிய அறிய ஆவல்...
  தொடர்ந்து எழுதிட வேண்டுகிறேன்...

  பதிலளிநீக்கு
 18. சிறப்பான ஆரம்பம். அங்கு வர ஆசை இருந்தாலும், என் தற்போதைய சூழலில் அங்கு வருவது சாத்தியமில்லை. உங்கள் பதிவுகள் மூலம் நானும் ஸ்விஸ்-ஐ வலம் வரக் காத்திருக்கிறேன்.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வரும் போது எங்களிடமும் வாருங்கள். உங்கள் வருகையை ஆல்ப்ஸில் தொடர்ந்து தாருங்கள்.

   நீக்கு
 19. உங்கள் அழைப்பை ஏற்று பதிவு எழுதியாச்சு அக்கா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பின்னூட்டமும் போட்டாச்சுப்பா.

   நீக்கு
 20. மிக அழகான துவக்கம். நாம் வாழும் நாட்டின்... நம்மை வாழவைக்கும் நாட்டின் சிறப்புகளைப் பிறர் அறியத் தரும் உங்கள் முயற்சி பெரிதும் வரவேற்கத்தக்கது. பாராட்டுகள் நிஷா..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி கீதமக்கா! தொடர்ந்து வாருங்கள்.

   நீக்கு
 21. மிக அழகான ஊர் என்பது தெரியும். ஸ்விஸ் என்றாலே ஆல்ப்ஸ் மலையும் பனிச்சறுக்கு விளையாட்டுகளும், சாக்கலேட்டுகளும் நினைவுக்கு வந்துவிடும். இன்னும் நிறைய இருக்கின்றது.. நல்ல நாடு. ஊழல்கள் அவ்வளவாக இல்லாத நாடு. ரஷியாவிலிருந்து ஸ்விஸ் வரும் ட்ரான்ஸ் ரயிலும் நினைவுக்கு வரும். அதில் ஒரு முறையேனும் செல்ல ஆசை உண்டு எனக்கும் என் மகனுக்கும்!! தொடர்கின்றோம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படியா? நிரம்ப நன்றி துளசி சார்.

   நீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!