24 ஜனவரி 2016

இறைவா! எனக்காய் நீ வர வேண்டும்!


என் நிம்மதியின் பிறப்பிடமே! என் நம்பிக்கையே! என் நிறையே! நின் குரல் கேட்டே நான் நிலைகுலைந்தேனே! நான் நிற்கும் போதும் நடக்கும் போதும் நிழலாய் வருபவரே! நினைவலைகள் தொடர்ந்திட வேண்டும், நித்தமும் என்னை நடத்திட வேண்டும். நின் மகளாய் என்றும் ஏற்றிட வேண்டும். மன்னித்து வழி நடத்திடவேண்டும். மலைகள் எல்லாம் அசைந்து விட்டாலும், காக்கும் கரமாய் நீ வரவேண்டும், வழியில் தடைகள் பல வந்தாலும் வாழ்ந்து காட்டும் வரம் தரவேண்டும். சோர்வுகள் என்னை சோதிக்கும் போது சோலையாக மாற்றிட வேண்டும் . வேதனை என்னை அமிழ்த்திடும் போது நிமிர்ந்து ஜெயிக்க பெலன்தர வேண்டும். வாடி நிற்கும் நிலை வரும் போது வண்ண மலராய் வாழ்த்திட வேண்டும். வறுமையிலே தவித்திடும் போது செழித்து வாழ வளம் தர வேண்டும். இளமை என்னை தாண்டிடும் போது இனிய நினைவாய் நீ வர வேண்டும். முதுமையிலே மூழ்கிடும் போது முடங்கி விடாது காத்திட வேண்டும். வார்த்தை தேள்கள் கொட்டிடும் போது ஆறுதல் மொழிகள் நீ தர வேண்டும் நானிருக்குமிடமெல்லாம் நீயாயிருந்து இறைவா! எனக்காய் நீ வர வேண்டும்!


 

நான் சோந்திருக்கும் நேரம் என்னை தாலாட்டும் பாடல். நீங்களும் கேட்டுப்பாருங்கள். 


நீயே நிரந்தரம். நீயே நிரந்தரம்.....இயேசுவே..... என் வாழ்வில்... நீயே நிரந்தரம்.. அம்மையப்பன் உந்தன் அன்பே நிரந்தரம்.... மாறும் உலகில் மாறா உன் உறவே நிரந்தரம்... இம்மை வாழ்வில் மறுமை இருப்பது நிரந்தரம்....(2) நான் மாண்ட பின்பும் உன்னில் உயிர்ப்பது நிரந்தரம்.... நிரந்தரம்...நிரந்தரம்...நீயே நிரந்தரம்.. நீயே நிரந்தரம்..... நிரந்தரம்...நிரந்தரம்...நீயே..நிரந்தரம்... ஆ...ஆ.. தாயின் அன்பு சேய்க்கு இங்கே நிரந்தரம்..... தாயும் தந்தையும் எமக்கு நீயே நிரந்தரம்.... தேயும் வாழ்வில் நம்பிக்கை நீயே நிரந்தரம்..... நான் சாயும் போது காப்பது நீயே நிரந்தரம்.....(2) நிரந்தரம்...நிரந்தரம்...நீயே நிரந்தரம்.. நீயே நிரந்தரம்.... நிரந்தரம்...நிரந்தரம்...நீயே..நிரந்தரம்......! செல்வங்கள் கொணரும் இன்பத்தில் இல்லை நிரந்தரம்... பதவியும் புகழும் தருவது இல்லை நிரந்தரம்.... நிலை வாழ்வு என்னும் நிஜமான நீயே நிரந்தரம்.. அதன் விலையாக எனை நீ உன்னில் இணைப்பாய் நிரந்தரம்.....(2) நிரந்தரம்...நிரந்தரம்...நீயே நிரந்தரம்.. நீயே நிரந்தரம்.. நிரந்தரம்...நிரந்தரம்...நீயே..நிரந்தரம்.....!

12 கருத்துகள்:

 1. நல்லதோர் கவிதை.

  எப்போதும் நல்லதே நடக்கட்டும்....

  பதிலளிநீக்கு
 2. வாழ்க வளமுடன்! ஆண்டவர் உம்மோடு இருப்பாராக!

  பதிலளிநீக்கு
 3. அக்கா நீங்கள் அடிகக்டி பாடும் இந்தப் பாடல் என் நினைவுக்கு வந்தது சூப்பர் நல்ல உள்ளங்களில் என்றும் இறைவன் முன்னும் பின்னும் இடதும் வலதுமாய் இருப்பான்
  இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
  நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே
  பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான் - அவன்
  கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்

  பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான் - அவன்
  கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்

  பதிலளிநீக்கு
 4. எங்களுக்கும்.....
  வாழ்த்துக்களுடன்...

  பதிலளிநீக்கு
 5. அடடே...அழகாய் இருக்கிறது...
  எத்தனை உயிருள்ள வேண்டுதல்கள்...
  கடவுள் மீது அப்படியொன்றும் அதீதநம்பிக்கை இல்லையென்றாலும் உங்கள் வேண்டுதல் பலிக்க விழைகிறேன்...
  கவலைப்படாதீர்கள்..
  பதிவிற்கு என் வாழ்த்துக்கள்..,

  பதிலளிநீக்கு
 6. நலம் பெற வேண்டுகிறேன் கவிதை அருமை வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 7. அழகான அர்த்தமுள்ள வேண்டுதல்கள் அக்கா....
  கவிதையும் பாடலும் அருமை.

  பதிலளிநீக்கு
 8. சோதனைகளே வேண்டாம் என்று வேண்டுவதை விட, சோதனைகளைத் தரும் நேரம் அதைத் தாங்கு திறனும் தர வேண்டும் இறைவா என்று வேண்டுவது சரிதான்.

  பதிலளிநீக்கு
 9. ஆஹா! என்ன ஒரு அழகான வேண்டுதல் கவிதை! தங்கள் வேண்டுதல்கள் எல்லாம் நிறைவேறிடட்டும்! அந்தப் பாடலும் அருமை!

  பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!