12 ஜனவரி 2016

சுவிஸ்ஸர்லாந்துக்கு வாறியளா ? -பகுதி 2 நாடும் அதன் வளர்ச்சியும் !


சுவிஸ் நாட்டின் குறிக்கோள்  

ஒருவருக்கு எல்லோரும் எல்லோருக்கும் ஒருவர்

«Einer für alle, alle für einen» (ஜேர்மன்.)
«Un pour tous, tous pour un» (பிரான்ஸ்.)
«Uno per tutti, tutti per uno» ( இத்தாலி)
«In per tuts, tuts per in» (உரோமன்.)

சுவிஸ்ஸர்லாந் சுற்றிப்பார்க்க வாறிங்களா?  வில் சுவிஸ்ஸர் லாந்த் என்றால் சட்டென நினைவுக்கு வருவது வங்கியும் கறுப்புப்பணமும்,ஹனிமூன் ஜோடிகளும் தான் என எழுதி இருந்தேன்!

அதையும் தாண்டினால் மாட்டின் கழுத்தில் கட்டும் மணி, சாக்லேட், வாட்ச் என   நினைவில் வந்து மறையும்.எனவும்  முடித்திருந்தேன். அதற்கு தேன்மதுரத்தமிழ் கிரேஸ்  சீஸும் கூட நினைவுக்கு வருமே என்கின்றார். 

ஆமாம் பாலும் தேனும் ஓடும் தேனாடு சுவிஸ்ஸர் லாந்த் என்றால் மிகையில்லை!

சுவிஸ்ஸர் லாந்து என்றாலே உலகின் அத்தனை கோடிஸ்வரரும்  இருக்கும் தேசமோ எனும் படியாய் நாட்டின் பெயரே பலரை ஆச்சரியமூட்டும் கனவுத்தேசமாய் இருக்கின்றது.உலகின் ஒவ்வொரு கோடிஸ்வரரும் சுவிஸ்லாந்தின் தமக்கு சொந்தமாக ஒரு குடிசையாகினும் இருக்க வேண்டும் என நினைக்கும்படியாய் சுவிஸ்ஸர் லாந்த் என்றாலே இனிமை நினைவுகள் தொடர்கின்றன!சுவிஸர் லாந்த் ஒரு சொர்க்க தேசம் என்பதில் பல ஐரோப்பிய நாடுகளுக்கும் பயணம் செய்த அனுபவத்தில் நானும் சொல்வேன். 
சுவிஸ் நாட்டில் வாழும் வாய்ப்பினை பெற்ற நாங்கள் பாக்கிய சாலிகள் தான். 

நாட்டின் குறிக்கோளுக்கு ஏற்ப நிறபேதம், இனபேதம் அதிகமாய் இல்லாத நாடும் இதுவே! எல்லை நாடுகளிலிருக்கும் மக்களின்  குணவியல்பை தாங்கி   மிகக்குறைந்த வீதத்தில்  நிற பேதம் வெளிப்பட்டாலும், பாடசாலை,
மருத்துவம், காவல்துறை சார்ந்த விடயங்களில் இப்பேதங்கள் காட்டப்படுவது மிக மிக அரிதே. 

இயற்கை வளங்கள் எதுவும் இல்லாமலே  சுற்றிவர ஆல்ப்ஸ் மலை கற்பாறைகளும், பனிமலைச்சிகரங்களையும் அரணாக கொண்டிருக்கும் இத்தேசத்தின் வளர்ச்சி உலகின் அத்தனை வளங்களையும் வைத்துக்கொண்டு இன்னும் வளர்கின்றோம் எனும் நம்ம நாட்டோடு ஒப்பிட்டளவில் கூட கற்பனை செய்ய இயலாதது என்பேன்! 


எக்காலமும் கரையாமல் ஐஸால் முடப்பட்டிருக்கும் மலைத்தொடர்கள். 

நாட்டின் அரசியலமைப்பு, பாடசாலை, பெண்கள் நிலை என ஒவ்வொன்றாக இந்த பதிவில் என்னால் இயன்ற வகை ஒரு முழுமையான பதிவொன்றினை தர இருப்பதனால்  சில நேரங்களில் பதிவு தாமதமாகலாம். மன்னித்து படித்து கருத்திட்டு என்னை ஊக்கப்படுத்துவீர்களாக!


நாட்டின் தேசியக்கொடி. 

சுவிஸர் லாந்து நாடு உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றாக இருப்பதோடு உலகில் நவீன அதே நேரம் நிலையான பொருளாதாரத்தோடு  மக்களுக்கான பாதுகாப்பான காப்புறுதியையும் வழங்கும்  நாடாகவும் இருக்கின்றது.

அத்தோடு உலகத்திலேயே உயர்ந்த வாழ்க்கைத்தரத்தினை கொண்ட நகரங்களாக சுவிஸர்லாந்திலிருக்கும் சூரிச்சும் ஜெனிவாவும் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

சுவிஸர்லாந்தில் செஞ்சிலுவைச்சங்கம், உலகவர்த்தக அமைப்பு,உட்பட ஐ, நாவின் ஒருஅலுவலகமும் அமைந்திருக்கின்றது. இதுவரை எந்த போர்களிலும் கலந்து கொள்ளாமல் நடு நிலை வாதியாக காட்டிக்கொண்டிருப்பதும் 1815ஆம் ஆணிடிலுருந்து எந்த போரிலும் சம்பந்தப்படாமல் இருப்பதும் கூட இந்த நாட்டின்  நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு காரணம் என்லாம். அதனோடு கறுப்புப்பணம் எனப்படும் உலக பணக்காரர்களின் வங்கி இருப்பும் அதன் இரகசியங்களும் எந்த சட்டத்துக்கும் ஆட்படாதவைகள். நம்பிக்கைக்கும் நாணயத்துக்கும் உத்தரவாதம் தருபவர்களாய் சுவிஸ் வங்கிகள் இருப்பதனாலும் கூட நாட்டின் வளர்ச்சி நிலை நீடிக்கின்றது. 

இன்றைக்கிருக்கும் சுவிஸ் நாட்டின் மத்திய பகுதியோடு மட்டுமே 1292 ஆகஸ்ட் முதலாம் திகதி விடுதலை பெற்று 1499 செப்டம்பர் 22 வரை அங்கீகாரமற்ற கட்டமைப்புடன் ஆட்சி செய்த போதிலும் 1648 அக்டோபர் 24 இல் தனி நாடாக அங்கீகரிக்கப்பட்டது.

மத்திய பகுதியோடு மட்டும்  ஆரம்பத்தில் உருவான  சுவிஸ் விடுதலை பெற்ற காலத்திலிருந்தே  நில அபகரிப்புகள் மூலம் தன் நிலப்பரப்பை விருத்தியாக்கியது. இறுதியில் 1848  ஆண்டில் எல்லைகள் வரையறுக்கப்பட்டு இன்றைய  நவீன சுவிஸ் லாந்து உருவானது.. 

விடுதலை பெற்ற நாளான ஆகஸ்ட் முதலாம் திகதி இந்த நாட்டுன் தேசிய தினம் என அறிவிக்கப்பட்டு வருடா வருடம் கோலாகலமாக கலாச்சார ஊர்வலங்கள், வானவேடிக்கைகள் என கொண்டாடப்படுகின்றது. 

150,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மனிதர்கள் இங்கே வாழ்ந்ததாகவும் மிகப்பழமையான விவசாய நிலங்கள் இருந்ததாகவும்  ஆய்வுகளில் கண்டு பிடித்திருக்கின்றனர். பழமையை போற்றிப்பாதுகாக்கும் மக்களாக இம்மக்கள் இருப்பதனால் நாட்டின் பெரு நகரங்களிலும் நூறாண்டுகள் தொன்மையான கட்டிடத்தொடர்கள், காலத்துக்கேற மாறுதல்கள் இன்றி பராமரிக்கப்ட்டு வருவதும் அந்தந்த இடங்களில்  வரலாற்று நிகழ்வுகள் பாதுகாக்கப்பட்டு உல்லாசப்பயணிகளின் பார்வைக்கு விடப்பட்டு வருமானம் ஈட்டப்படுவதும் இந்த நாட்டின் சிறப்பியல்பாகும். 

உலகம் எத்தனை தொழில் நுட்பத்தில் வளர்ந்தாலும் அவைகள் எங்கள் வளர்ச்சிக்கு மட்டுமே தவிர அவைகளுக்கு நாங்கள் அடிமைகள் அல்ல எனும் மிகத்திடமாக முடிவெடுத்து  இக்கால பேஸ்புக், வாட்ஸப், போன்ற நவீன தொழில் நுட்ப தொடர்பாடல்களை கூட தூர நிறுத்துவோராய் இம்மக்களில் பலர்  இருக்கின்றார்கள்.

கிறிஸ்தவர்கள் இந்த நாட்டில் பெருமளவில் இருந்தாலும் அதிகார பூர்வமாய் இந்த நாடு எந்த மதத்துக்குள் உட்பட்டதாய் இல்லை என்பதனால் தனிமனித மத சுதந்திரம் பொதுமக்களுக்கு இடையூறாய் இராதவரை மதிக்கப்படுகின்றது. இஸ்லாமியர்களின் மசூதிகளும், இந்துக்களின் கோயில்களும் , புத்தமத ஆராதனைகளும் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு யாரையும் வற்புறுத்தாமல் துன்புறுத்தாமல் அமைக்கப்பட்டு தம் மதத்தினை கைக்கொள்வதிலும் பரப்புவதிலும்  தடைகள் இல்லை.

சுவிஸில் பெண்களுக்காகவும் அவர்கள் வாக்குரிமை பெறவும் கூட எதிர்ப்புக்கள் இருந்தது. எதிர்ப்புக்களின் இடையே பெண்களுக்காக அரசியல் வாக்குரிமை 1971ல் வழங்கப்பட்டது- அதிலும் மிகப்பழமை போற்றும் அப்பன்சில் இண்டர்ஹோடன் மானிலத்தில் 1990 இல் இறுதியில் தான் பெண்களுக்கான வாக்குரிமை வழங்கப்பட்டது. எனினும் பெண்கள் தமக்கான உரிமை கிடைத்தபின் அரசியலில்முக்கியத்துவம் பெறும்படியாய் மிக வேகமாக தம்மை நிலை நாட்டினர்.  அதனை குறித்த விரிவான விபரம் இன்னொரு பதிவில் காண்போம். 

நம்ம நாட்டில் தான் பெண் சுதந்திரம் விடுதலை என பேசினோம் என்றால் அரைகுறை ஆடையோடு பவனி வரும் வெள்ளைத்தோல் பெண்களுக்கும் இந்த நிலையா என  யோசிக்க தோன்றுகின்றதா? 
மண்ணின் மைந்தர்களாம் மக்களின் 
மிக எளிமையான தோற்றம் இதுவே!

சுவிஸ்லாந்து நாட்டுமக்களும் அதன் மொழிகளும் நமது தமிழைப்போல் மிக தொனமையானவை!எம்முடைய கலாச்சாரம் போல் கட்டுக்
கோப்பானவைகள்
பிரிசெக்ஸ், கட்டுப்பாடற்ற கலாச்சாரம், மதுபானங்கள், போதைவஸ்துக்கள் என ஐரோப்பிய நாடுகள் குறித்து நம் பார்வைக்கோணம் சுவிஸ் நாட்டின் கலாச்சாரத்தோடு ஒப்பிடும் போது மாறுபடுகின்றது. இந்த நாட்டின் மண்ணின் மைந்தர்கள் மூதாதையர்கள் வழித்தோன்றலில் வழியே இன்னும் ஒருத்தனுக்கு ஒருத்தி எனுக் கட்டுக்கோப்பான வாழ்க்கை வாழ்பவர்களாக, தொழில் நுட்ப வளர்ச்சிகளுக்கு தம்மை அடிமைப்படுத்தாமல் விவசாயம் செய்பவர்களாக, ஆடுமாடுகளை மேய்த்து பண்ணை விடுகளை பராமரித்து நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான பால், சாக்லேட்,காய்கறிகள் , உருளைக்கிழங்கு போன்றவற்றினை விளைவிக்கும் மண்ணை நேசிப்போராகவே இருக்கின்றார்கள்.அரசும் இப்படிப்பட்டவர்களுக்கு தகுந்த வசதிகளை செய்து கொடுத்திருக்கின்றது.

சிறுவர்களோடு ஊர்வலம். 
இளவேனில் காலங்களில் ஆடு, மாடுகளுக்கு அலங்காரமும் ஊர்வமுமாய் தெருவே அமர்க்களப்படும். மணிக்கணக்கில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு விவயாயக்குடும்பங்கள் குழந்தைகுட்டிகளோடு  நாட்டின் கலாசார ஆடையணிகளோடுஊர்வலம் செலவது கண் கொள்ளா காட்சி!
 மாடுகளுக்கு அலங்காரம் 

அன்பு செய்வதிலும் வந்தாரை வாழவைப்பதிலும் இந்த மண்ணின் மைந்தர்களுக்கு நிகர் இவர்கள் தான்.. ஆனாலும் இந்த அன்பும், இரக்கமும், அரவணைப்பும்  கொஞ்சம் கொஞ்சமாய் அகல்கின்றது. புலம்பெயர்ந்து அகதிகளாக தம்மை இங்கே பதிவு செய்து  தாம்வந்த பாதை மறந்து குற்றச்செயல்களில்  ஈடுபடுவதோடு, வரி ஏய்ப்பு செய்வதும், வேலைகளுக்கு செல்லாமல் அரச உதவியில் வாழ்வதும், நாட்டின் சட்டதிட்டங்களுக்கு கீழ்ப்படியாமல் அஜாராகப்போக்கில் நடப்பதுமான  பலராலும், வேலையில்லா திண்டாட்டங்கள் அதிகரிப்பதும்  கடந்த  தேர்தலில் வெளி நாட்ட்வவர்களுக்கு புகலிடம் தருவதை  தவிர்க்க அல்லது குறைக்க நினைக்கும் மிகத்தீவிரமான   வெளி நாட்டவர் எதிர்ப்பு கொள்கை கொண்ட கட்சிக்கு வாக்களித்து தம் வெறுப்பினை கொஞ்சமாய் வெளிக்காட்டி இருக்கின்றார்கள்.
 நாட்டின் கலாசார ஆடைகளோடு இளம் பெண்கள் 
இதனால் மக்கள் மனதில் வெளி நாட்டவர்களுக்கான வினை விதைக்கப்படுகின்றது. நம்மவர்களும் அதீத ஆடம்பரங்கள், வங்கியில் கடன் வாங்கியேனும் கொண்டாட்டங்கள், உல்லாசப்பயணங்கள் என  வீண் ஜம்பம் காட்டுவதும்  தங்களில் ஒருவராய் எம்மை பார்த்த இம்மக்கள் தங்கள் எதிரிகளென  புலம்பெயர்தோரை பார்க்கும் காலம் வருமோ எனும் அச்சமும் எழாமல் இல்லை
சுவிஸ் நாட்டில் மிக உயர்ந்த மலைச்சிகரம் 
ஐரோப்பாவின்   உல்லாசப்பயணிகளுக்கான ரொப் ஏரியாவும் இதுவே. 
அளவீடுகள் குறிக்கப்பட்டிகின்றது. 

இத்தொடரில் அதன் வரலாறுகளை தொகுக்கும் போது தொடர்ந்து ஆண்டுகள் வாரியாக தொகுத்தால் படிக்கும் உங்களுக்கு போரடித்து போய் விடும் என்பதனால் இயன்றவரை இம்மக்களை குறித்தும் நாட்டைக்குறித்தும் என் அனுபவங்களை இடையிடையே பகிர முயற்சிக்கின்றேன். 

படங்கள் அனைத்தும் இணையத்திலிருந்தே எடுக்கப்பட்டது!

தொடர்வேன்!

34 கருத்துகள்:

  1. நன்றாகத் தொகுத்து வழங்கி வருகிறீர்கள். தொடர்கிறேன். 'வானம் வெளித்த பின்னும்' ஹேமா கூட சுவிஸ்ஸில்தான் இருக்கிறார். அவரை உங்களுக்குத் தெரியுமா தெரியவில்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தெரியவில்லையே சார். தங்கள் வருகைக்கும் கருத்துக்கு நன்றி சார்!

      நீக்கு
  2. கனவுதேசம் பற்றிய தொடர் அருமை . தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. பழைமை மாறாதது, எதற்கும் அடிமையாகாமல் விவசாயம் தொடர்வது...

    சுவிஸ் செல்ல வேண்டும் என்று ஆசையே வந்து விட்டது...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் சார். வரவேற்கின்றோம்.

      நீக்கு
  4. மாடுகளுக்கு அலங்காரம் சூப்பர்.. இன்னும் நிறைய எழுதுங்க அக்கா.

    பதிலளிநீக்கு
  5. இன்று காலையில் முதன் முதலில் படித்ததும் சுற்றிப்பார்த்ததும் சுவிஸ் பற்றித்தான் சுவார்சியமாய் இருந்தது மகிழ்ச்சியாகவும் இருந்தது அதிலும் இலங்கையில் இருந்து அதிகளவான அகதிகளாக மக்கள் அங்கு சென்று தனக்கென்று ஒரு தொழில் வசதி பெற்று கல்வியிலும் இன்னும் அந்த நாட்டு அரசாங்கத்திலும் அங்கம் வகிக்கிறார்கள் என்பது இன்னும் மகிழ்ச்சியாக உள்ளது வேற ஒரு பதில் படித்தேன் இலங்கைப் பெண் சுவிஸ் நாட்டின் அரசியல் களத்திலும் உள்ளார் என்று”

    நமது மக்கள் எங்கு சென்றாலும் அவர்கள் குரங்கின் புத்தியைக் காட்டி விடுவார்கள் கடைசியில் அவர்களுக்கு அதுவே ஆப்பாகவும் வந்து முடியும் அந்த வகையில் நீங்கள் குறிப்பிட்டீர்கள் அதைப் படிக்கும் போது கவலையாக இருந்தது

    அன்பு செய்வதிலும் வந்தாரை வாழவைப்பதிலும் இந்த மண்ணின் மைந்தர்களுக்கு நிகர் இவர்கள் தான்.. ஆனாலும் இந்த அன்பும், இரக்கமும், அரவணைப்பும் கொஞ்சம் கொஞ்சமாய் அகல்கின்றது. புலம்பெயர்ந்து அகதிகளாக தம்மை இங்கே பதிவு செய்து தாம்வந்த பாதை மறந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவதோடு, வரி ஏய்ப்பு செய்வதும், வேலைகளுக்கு செல்லாமல் அரச உதவியில் வாழ்வதும், நாட்டின் சட்டதிட்டங்களுக்கு கீழ்ப்படியாமல் அஜாராகப்போக்கில் நடப்பதுமான பலராலும், வேலையில்லா திண்டாட்டங்கள் அதிகரிப்பதும் கடந்த தேர்தலில் வெளி நாட்ட்வவர்களுக்கு புகலிடம் தருவதை தவிர்க்க அல்லது குறைக்க நினைக்கும் மிகத்தீவிரமான வெளி நாட்டவர் எதிர்ப்பு கொள்கை கொண்ட கட்சிக்கு வாக்களித்து தம் வெறுப்பினை கொஞ்சமாய் வெளிக்காட்டி இருக்கின்றார்கள்.

    இதனால் மக்கள் மனதில் வெளி நாட்டவர்களுக்கான வினை விதைக்கப்படுகின்றது. நம்மவர்களும் அதீத ஆடம்பரங்கள், வங்கியில் கடன் வாங்கியேனும் கொண்டாட்டங்கள், உல்லாசப்பயணங்கள் என வீண் ஜம்பம் காட்டுவதும் தங்களில் ஒருவராய் எம்மை பார்த்த இம்மக்கள் தங்கள் எதிரிகளென புலம்பெயர்தோரை பார்க்கும் காலம் வருமோ எனும் அச்சமும் எழாமல் இல்லை!!

    மகிழ்ச்சியிலும் ஒரு கவலை
    இன்னும் தொடருங்கள் அக்கா
    நாங்களும் தொடர்கிறோம்
    நன்றியுடன் நண்பன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வாங்க, உங்கள் நீண்ட கருத்துக்கு நன்றிப்பா!

      நீக்கு
    2. வாங்க வாங்க, உங்கள் நீண்ட கருத்துக்கு நன்றிப்பா!

      நீக்கு
  6. ஆடு மாடுகளின் அலங்காரமும் அந்த நாட்டு கலாச்சார ஆடைகளும் எனக்குப் பிடித்திருக்கிறது எங்க அக்கா மகள் ஹெப்சியின் தோழிகள் சுவிஸ் குட்டிகளின் ஆடைகள் நல்ல நமது கலாச்சாரத்திற்கும் ஒப்பானது மகிழ்ச்சியாக உள்ளது நன்றி அக்கா இன்னும் அறிய ஆவலாய் உள்ளேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் பா, நன்றிப்பா

      நீக்கு
    2. ஆமாம் பா, நன்றிப்பா

      நீக்கு
    3. ஆமாம் அழகாக இருக்கின்றதுப்பா!ன்ன் நன்றிப்பா

      நீக்கு
  7. பழைமை பேணும் பண்புபோற்றுதற்குரியது.

    பதிலளிநீக்கு
  8. 150,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மனிதர்கள் இங்கே வாழ்ந்ததாகவும் மிகப்பழமையான விவசாய நிலங்கள் இருந்ததாகவும் ஆய்வுகளில் கண்டு பிடித்திருக்கின்றனர்//

    பிரமாண்டமான தகவலாக இருக்கின்றதே அருமையாக கொண்டு செல்கின்றீர்கள் தொடர்கிறேன்

    பதிலளிநீக்கு
  9. வணக்கம்
    ஆகா...ஆகா..தகவல் நன்று படித்த போது வியந்து விட்டேன்.தேடலுக்கு எனது பாராட்டுக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  10. வெளிநாட்டில் போய் குடியிருக்கும்போது நாம் நெறைய கற்கிறோம். எந்த நாட்டுக்கு நம்ம Loyalty? பொறந்த நாட்டுக்காக இல்லை புகுந்த நாட்டுக்கா? என்று வரும்போது பலரால் தெளிவாக சிந்திக்க முடிவதில்லை என்பதை கவனிக்கிறேன்...

    தொடர் நல்லாயிருக்கு. ஸ்விஸுக்கு இத்தனை பெரிய "கமெர்ஷியல்" கொடுத்த முதல் ஆள் நீங்கதான், நிஷா! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மற்றவர்கள் பற்றி எனக்கு தெரியாது! ஆனால் என்னளவில் தாய் நாடு எனில் இது தான் எனும் அக உணர்வு தான் ஆழமாய் ஊறி உள்ளது. அவ்வுணர்வுக்கு உரம் ஊற்றுபவர்களாய் என் சுவிஸ் நட்புக்கல் இருந்ததும் இருப்பதும் கூட காரணங்களாக இருக்கலாம்.பட் ஐ லவ் சுவிஸ்! நான் நல்லதை நினைத்தால் நமக்கு நடப்பதும் நல்லதாகி நாம் சொல்வதும் நல்லதாய் தானே இருக்கும்!

      நீக்கு
  11. தொன்மையும் பாரம்பரியமும் கலாச்சார முக்கியத்துவமும் கொண்டதொரு நாட்டினைப் பற்றிய தகவல்கள் பலவும் வியக்கவைக்கின்றன. முயற்சி தொடரட்டும். முடியும்போதெல்லாம் எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அக்க! தொடர்ந்து வாருங்கள்.

      நீக்கு
  12. அக்கா...
    மிக அருமையானதொரு கட்டுரையை ஆரம்பித்திருக்கிறீர்கள்.
    உங்களின் தேடல் என்பது எப்படிப்பட்டது என்பதை நான் அறிவேன்..
    அந்தத் தேடல்தான் இந்தப் பதிப்பின் சிறப்பு...
    மிக அழகாக எழுதுகிறீர்கள்... விவரணைகளுடன்...

    இதை புத்தகமாகவோ அல்லது மின்னூலகவோ ஆக்க வேண்டும்....
    விரிவாய் சிறப்பாய் எழுதுங்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிரம்ப நன்றிப்பா, உங்கள் ஊக்கமூட்டும் வார்த்தைகளுக்காக நன்றி!

      நீக்கு
  13. அழகு....
    ஆனாலும் தோழி..
    தாய்மண் என்னும் போது
    ஒரு ஏக்கம் வந்துவிடுகிறது இல்லையா?

    வானம் விட்டு கீழிறங்கி..
    அந்த தூசுநிறைந்த காற்றையும்..சுற்றம் பார்த்து சிரித்து...சிறுபிள்ளை ஒன்று சிணுங்க சிணுங்க முத்தம் தந்து....
    போங்கள்....அதுதானே பரவசம்..
    அனுபவித்து திரும்பி வாருங்கள்....

    பொங்கல் வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாய் மண் நினைவிலிருந்து நம் நினைவிருக்கும் வரை போகாது தான். ஆனாலும் ஏனோ எனக்குள் நாடு வரவேண்டும் எனும் ஆர்வம் இல்லையே!அப்படி வந்த மூன்று வார பயணங்களிலும் எப்போதடா திரும்புவோம் எனும் உணர்வும் எங்க ஊர் ரயில்வேஸ்ரேசனை கண்டதும் அடைந்த பரசமும் வீட்டுக்குள் நுழைந்து குழாயில் நீரை குடித்த போது கிடைத்த திருப்தியும் என் மண் எனக்கு தரவில்லையே! என்ன செய்யட்டும் தோழரே!

      நீக்கு
    2. உங்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.

      நீக்கு
  14. விரிவான கட்டுரை! சுவாரஸ்யமான தகவல்களுடன் சிறப்பாய் அமைந்திருக்கிறது! தொடர்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஐயா! தொடர்ந்து வாருங்கள்.

      நீக்கு
  15. அழகான தொடர் ஸ்விசைப் போல!! அங்கு விவசாயம் மாடுபண்ணை எல்லாம் நல்ல வளம் பொருந்தியவைதான் ஸிவ்ஸ் மாடுகள் மிகவும் பெயர் போனவை. பால் பொருட்கள்.

    நல்லதொரு நாடு! இப்போது மாறுவது குறித்து அறியும் போது மனம் கொஞ்சம் வேதனைப்படுகின்றது. தொடர்கின்றோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துளசி சார் நலமா? கீதாமா பிரியாகி விட்டார்கள் போலவே உங்களுக்கும் பொங்கல் நல் வாழ்த்துகளோடு வருகைக்கும் நன்றி!

      நீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!