#வேடந்தாங்கல்_பறவைகள்_சரணாலயம்2
#save_vedanthangal_bird_sanctuary
வனத்துறை அதிகாரிகள் தங்கள் நடவடிக்கையை நியாயப்படுத்தும் ஊடக அறிக்கையை வெளியிடட பின் சரணாலயத்தை பாதுகாக்கும் முயற்சிகளுக்கான போராட்டம் தூரமாகவே இருக்கின்றது என்கின்றார் Deepak Nambiar. India ,JUN 11, 2020
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் இயற்கை பாதுகாப்பு அரசியலாக்கப்படுவதும்,
அப்பகுதிக்கான பாதுகாப்பை குறித்து மக்கள் கண்டு கொள்ளாமல் இருப்பதும் சரியானதா?
இந்தியாவின் வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் 1972 இன் படி ஜூலை 1998 பறவைகள்சரணாலயமாக அறிவிக்கப்பட்டது .சரணாலய எல்லையிலிருந்து 5 கி.மீ தூரத்தில் உள்ள பகுதி வனவிலங்கு சரணாலயத்தின் பாதுகாக்கப்படட பகுதியாக இது வரை இருந்து வருகிறது.
இந்தியா வனவிலங்கு பாதுகாப்பு சட்டடத்தின் படி வேடந்தாங்கல் சரணாலயம் அமைத்திருக்கும் 5 கி.மீ எந்த விரிவாக்கத் திட்டத்திற்கும் இடம் அளிக்க முடியாது. இப்பகுதி சரணாலயத்துக்கான முழு பாதுகாப்பையும் கொண்டுள்ளது.
வனவிலங்குகளை பாதுகாப்பது பற்றி அரசு எப்போதும். அக்கறை கொள்வதில்லை . கடந்த காலத்தில்
• 1980 களின் முற்பகுதியில், கிண்டி தேசிய பூங்கா கசாப்பு செய்யப்பட்டு, நிலத்தின் பெரும்பகுதி தனியார் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது.
• 1990 களின் பிற்பகுதியில், பள்ளிக்கரணை(பல்லிகாரனை)
சதுப்பு நிலம் ஐ.டி நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விடப்பட்டது,
இப்போது வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் நோக்கி கவனம் திருப்பி இருக்கின்றார்கள்
இந்த பகுதியில் என்ன நடக்கின்றது?
🔹 1. கடந்த ஜனவரி 23ஆம் தேதி தேசிய வனவுயிர் வாரியத்திடம் தமிழ்நாடு அரசு விண்ணப்பம் ஒன்றை சமர்ப்பித்தது.
🔹 2. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதியை 5 கிலோமீட்டர் சுற்றளவிலிருந்து 3 கிலோமீட்டர் சுற்றளவிற்கு குறைக்க வேண்டும் என்று அதில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
பறவைகள் சரணாலய பரப்பளவை சுருக்குவதற்கான காரணங்களாக ஜனவரி மாதம் மத்திய அரசுக்கு அளித்த விண்ணப்பத்தில் தமிழக அரசு சொல்லியவை:
🔴 இதன்மூலம் 5,467 ஹெக்டேர் நிலப்பகுதியில் கட்டுமானம் உள்ளிட்ட திட்டங்களை மேற்கொள்ள முடியும்.
🔴 அப்பகுதியில் கட்டுமானங்கள் எழுப்பும்போதும், நிலப்பயன்பாட்டை மாற்றும்போதும் கிராம மக்களுக்கும் வனத்துறையினருக்குமிடையே பிரச்னைகள் எழுகிறது. இதனைத் தடுக்கவே சரணாலய பரப்பை குறைப்பதாக தமிழ்நாடு வனத்துறை தெரிவித்திருந்தது.
🔴 2 கிலோமீட்டர் சுற்றளவு பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியில் இருந்து விலக்கும் பட்சத்தில் அப்பகுதி மக்கள் சிறிய அளவிலான தொழில் செய்வதற்கும் வீடுகளுக்காகவும் கட்டுமானங்கள் எழுப்ப முடியும். நிலப்பயன்பாட்டையும் மாற்றிக்கொள்ள முடியும்.
⚫️ ஜூன் 3, 2020. நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் Sun Pharma’s போன்ற நிறுவனங்கள் வணிக மற்றும் தொழில்துறை டெவலப் செய்யவே இந்த முடிவை வனத்துறை அதிகாரிகளும் அரசும் எடுத்திருந்ததாக வெளியிட்டிருந்தது.
🟢 நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸுக்கு பதிலளித்த Sun Pharma’s ஜூன் 8 அன்று "வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்குள் உற்பத்தி நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கான திட்டங்கள் எதுவும் இல்லை" என்று ட்வீட் செய்ததோடு "நிறுவனம் ஆலைக்கு அருகில் அல்லது சரணாலயத்திற்குள் எந்த கூடுதல் நிலத்தையும் வாங்கவில்லை. வேதாந்தங்கல் பறவைகள் சரணாலயத்தின் பல்லுயிர் மற்றும் இயற்கை சூழலைப் பாதுகாக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். ”என்றும் அறிக்கை செய்கின்றது ( படம் இணைப்பு)
தமிழக அரசின் இந்த முடிவு தொடர்பாக கடுமையான எதிர்ப்பு எழுந்த நிலையில் தற்போது சரணாலயத்தின் எல்லையை குறைக்கும் எண்ணம் இல்லை என்றும் ஏரியைச் சுற்றியுள்ள
🔺 முதல் 1 கிலோமீட்டர் சுற்றளவை core zone ஆகவும், அடுத்த 2 கிலோமீட்டர் சுற்றளவு பகுதியை buffer zone ஆகவும், அடுத்த 2 கிலோமீட்டர் சுற்றளவு பகுதியை eco sensitive zone ஆகவும் வகைப்பாடு செய்யப்போவதால் மொத்தமுள்ள 5 கிலோமீட்டர் சுற்றளவு பகுதியையும் பாதுகாக்க முடியும் எனவும் சரணாலய பகுதியை தனியார் நிறுவனத்திற்கோ, தொழிற்சாலை அமைக்கவோ, வர்த்த்க நிறுவனம் அமைக்க அரசு உதவுவதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என்று வனத்துறை தெரிவித்துள்ளது.
⁉️ எமக்குள் எழும் சாதாரண கேள்விகள்?
வனச்சரணாலயப் பகுதியை சாதாரணப் பகுதியாக மாற்ற வேண்டும் என்று தேசிய வனவிலங்குகள் நலவாரியத்திடம் விண்ணப்பித்து விட்டு, அதை தமிழக மக்களிடம் மறைப்பது ஏன்?
⁉️ 5 கிலோமீட்டர் சுற்றளவு பகுதியை குறைக்கும் எண்ணமில்லை என்று கூறியிருந்தாலும் கடந்த ஜனவரி மாதம் தமிழக அரசு மத்திய அரசிடம் சரணாலயத்தின் பரப்பளவை குறைப்பதற்கான அனுமதிகோரி சமர்ப்பித்த விண்ணப்பமானது தற்போது வரை திரும்பப்பெறவில்லை. ஏன்?
⁉️ Sun Pharma’s மருந்து நிறுவனத்தின் ஆலை ஏற்கனவே வேடந்தாங்கல் சரணாலயப் பகுதிக்குள் தான் உள்ளது. ஆனாலும் அந்த ஆலை வேடந்தாங்கல் சரணாலயமாக அறிவிக்கப்பட்ட 1998-ஆம் ஆண்டுக்கு முன்பாகவே அமைக்கப்பட்டது என்பதால் தொடர்ந்து இயங்க அனுமதிக்கப்பட்டது. ஆனால், அந்த ஆலையை விரிவாக்கம் செய்ய எந்த அனுமதியும் வழங்க முடியாது எனும் நிலையில் ........!
⁉️ Sun Pharma’s மருந்து உற்பத்தி நிறுவனம் தனது உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்காக மே 30ஆம் தேதி தேசிய வனவுயிர் வாரியத்திடம் அளித்த விண்ணப்பத்தில் தனது விரிவாக்கமானது சரணாலயத்தின் எல்லையிலிருந்து 0.72 கிலோமீட்டர் தொலைவிலும், ஏரியின் எல்லையிலிருந்து 3.72 கிலோமீட்டர் தொலைவிலும் இருப்பதாக தெரிவிதிருக்கின்றதெனில் இது
எப்படி சாத்தியப்படும்?
⁉️ இந்த பகுதியில் எந்த விரிவாக்கத் திட்டத்திற்கும் இடம் அளிக்க முடியாது. இந்த சூழலை மாற்றி Sun Pharma’s நிறுவன ஆலை விரிவாக்கத்திற்கு அனுமதி அளிப்பதற்காகத் தான் சரணாலயப் பகுதியின் கடைசி இரு கிலோ மீட்டர் சுற்றளவை சாதாரணப் பகுதியாக மாற்ற வனத்துறை முயல்கிறது என்ற குற்றச்சாட்டு உண்மையா?
அத்தனையும் இதை வாசிக்கும் உங்கள் சிந்தனைக்கே விடுகின்றேன்.
இவ்வாறான இன்னும் சில அடுத்த பதிவில் ......✍️✍️
பதிவின் தேடலில் நன்றி 🙏
News 18:
DTNEXT :
Science Thewire:
•
மனிதர்களின் அத்துமீறல் பேராசைகளால் இயற்கை வளங்கள் அழிக்கப்படுவதும் வனங்கள் பற்றி எரிவதும், வன வாழ் ஜீவராசிகள் அழிவதும் உலகளாவிய ரீதியில் கடும் பாதிப்பை தந்து கொண்டிருப்பதையும் இயற்கையை பாதுகாக்கும் விடயத்தில் நாங்கள் தும்பை விட்டு வாலை பிடிப்பதும் எல்லாம் கைமீறி போன பின் அழுது புலம்புவதும் எங்கள் வழக்கமாகி கொண்டிருக்கின்றன
காட்டின் மரங்களை அழித்து, அதன் அமைதியை சீர் குலைத்து தம் வாழ்விடங்களை விட்டு மக்கள்
குடியிருப்புகள் நோக்கி வரும் மிருகங்கள், அழிந்து வரும் பறவையினம், பூச்சிகள் குறித்து மில்லியன் கணக்கில் இயற்கைக்கு மாறான இனப்பெருக்கங்கள், வெட்டுக்கிளிகள் இடம்பெயர்ந்து அழியும் விவசாய நிலங்கள் நம் கண் முன் காட்சிக்ளாக விரிந்திருந்தும்சில நேரங்களில் எங்கள் சிந்திக்கும் திறன் மழுங்கி தான் போகின்றது.
எப்போதும் போல் இந்த இயற்கை பாதுகாப்பு செயல் பாட்டிலும் அரசியல் தலையீடும் அறிக்கைகளுக்கும் பின்னணியில் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் குறித்து வரும் செய்திகளில் காணப்படும் முரண்களை ஆராய்ந்து அறிந்து புரிந்து கொள்ளாமல் வனத்துறை அதிகாரிகள் தரும் விளக்கத்தை அப்படியே நம்பி ஏற்று கொள்வதால் வேடந்தாங்கல் சரணாலயத்தில் பாதுகாப்பு தூரமாகி கொண்டே இருக்கின்றது 🖤
திட்ட மிடட அரசியல் தலையீடுகள் மக்களிடமிருந்து இந்த வனப்பாதுகாப்பு குறித்த அக்கறையை சந்தேகத்துள்ளாக்கும் நோக்கத்தில் இருக்குமோ எனும் ஐயமும் எழுகின்றது. இயற்கையை பாதுகாக்க வேண்டும். அதன் ஜீவராசிகள் ஒவ்வொன்றும் அதனதன் போக்கில் தன்னை உயிர்ப்பிக்கும் போது தான் இவ்வுலகில் மனிதர் வாழ்க்கை சமப்படும். இயற்கை அழியும் போது மனிதர்கள் வாழ்வாதாரம் கடும் நெருக்கடியை சந்திக்கும். ,
"ஒட்டுண்ணிகள் மற்றும் பூச்சி படையெடுப்புகளிலிருந்து விடுபட்டு ஆரோக்கியமான வாழ்க்கையை உறுதிப்படுத்த நம்மைச் சுற்றியுள்ள பறவைகள் தேவை "
#save_vedanthangal_bird_sanctuary
#பறவைகளின்_சரணாலயம்
#வேடந்தாங்கல் பாதுகாக்கப்பட வேண்டும்.
பறவைகள் சரணாலயத்தை 40 சதவீதத்திற்கு மேல் சுருக்கிவிடும் மாநிலத்தின் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டாம் ...!
தேசிய வனவிலங்கு வாரியத்தில் சமர்ப்பிக்கப்பட்ட திட்டத்தை திரும்பப் பெறுமாறு மேலுள்ள தளத்தில் வாக்கிடுவதன் மூலம் உங்கள் எதிர்ப்பை தெரிவித்து இயற்கையை பாதுகாக்கும் உலகத்தாரின் ஆதரவை பெற்றுக்கொடுக்கும் வாய்ப்பை உறுதி படுத்துகின்றிர்கள்.
Nisha
13.06.2020
Save Nature Save Future
Face book :
வணக்கம்
பதிலளிநீக்குநிறைய விடயங்களளை அறிந்தேன் வாழ்த்துக்கள்.
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: மனங்களில் நிறைந்தவனே.: எண்ணக்கவியோடு ஏழைகளின் மனதோடு நின்று உறவாடும் செந்தமிழ் புலவரே சொந்த தமிழில் செந்தமிழ் பாடி அகிலம் வாழும் தமிழர் மனங்களில் நிறைந...