பால்கொழுக்கடடை
அரிசிமா
தேங்காய்ப்பால்
பயறு
சீனி
சேர்த்து செய்யும் கிராமத்து உணவுகள் பலவகைப்படும்
அதில் எங்களூரில் பால் கொழுக்கட்டை க்கு தனி இடம் இருக்கு.
( இதை சில்லுக்கொழுக்கட்டை
என்று யாழ்ப்பாணத்தில் சொல்வார்களாம் )
இன்று இரவு சாப்பாடு என்ன செய்யலாம் என்று ஒரே குழப்பம்
ஒரு கிழமையா கடைகளுக்கு போகல😂 பிரிட்ஜ் லையும் ஒன்னும் இல்லை.
யோசிச்சிட்டு Face book பக்கம் வந்தேன்.
Kanna Rathika தன்வீட்டில் செய்யும் ஆலங்காய் புட்டு live வீடியோ பார்த்தும் வறுத்து வைத்த பயறு நினைவுக்கு வந்தது.
உடனே மாவை இடியாப்ப பதத்துக்கு பிசைந்து சின்னதாய் உருட்டி சில்லுகள் பிடித்து ஆவியில் அவிய விட்டு, தேங்காய்ப்பால் கொதிக்க, சீனியும் போட்டு பயறும் கொட்டி ஒரு மணி நேரத்தில் பால் கொழுக்கடடை செய்து இரவு சாப்பாடும் சாப்பிடடாச்சு. ❣️
இந்த மாதிரி சாப்பாடு எல்லாம் உடனே செய்து சாப்பிடுவதை விட முதல் நாள் செய்து மறு நாள் சாப்பிடடா இன்னும் சுவை எகிறும் எண்டதால் நாளை காலை சாப்பாடும் இது தான்.
பொதுவா வீட்டில் இனிப்பு சாப்பாடு செய்வது இல்லை. தேனீர், கோப்பிக்கும் சீனி சேர்ப்பது இல்லை
எப்பவாச்சும் ஒருக்கா என்பதால் சாப்பிடலாம். சாப்பாட்டு படம் போடாதேள் என்று சொல்வது என் என்று நான் நிரூபித்து இருக்கேன் அல்லோ?
சாப்பாட்டு படம் பார்த்தோன வாய் நநநமக்கும். நாக்கு ஊறும், திருடியாச்சும் தின்ன சொல்லும்
இல்ல எண்டு சொல்லுவிங்களோ?
மாவை இடியாப்ப பதத்துக்கு பிசைந்து சின்னதாய் உருட்டி
சில்லுகள் பிடித்து
ஆவியில் அவிய விட்டு,
வறுத்து வைத்த பயறு
தேங்காய்ப்பால் கொதிக்க
ஆவியில் அவிய விட்ட சில்லுகள்,
சீனியும் போட்டு பயறும் கொட்டி
படங்களே ஆசையை தூண்டுகிறது.
பதிலளிநீக்குபார்க்க நன்றாகவே இருக்கிறது உங்கள் செய்முறையில் செய்த பால் கொழுக்கட்டை.
பதிலளிநீக்குஅழகாக செய்துள்ளீர்கள்...
பதிலளிநீக்குhttps://www.youtube.com/channel/UCu7dpeKUcinhPVJ1mg3nAJQ
பதிலளிநீக்குநிறைய இலங்கை ரெசிபிகள் இருக்கு நேரம் இருக்கும் போது
பாருங்கள்