02 ஜூன் 2020

பாலைவன வெட்டுக்கிளிக் கூட்டத்தைக் ( Locust Swarm ) கட்டுப்படுத்தி , விரட்டி, பயிர்பச்சைகளைக் காக்கும் இயற்கை முறை :

பாலைவன வெட்டுக்கிளிகள் - 4

பாலைவன வெட்டுக்கிளிக்  கூட்டத்தைக் ( Locust  Swarm ) கட்டுப்படுத்தி , விரட்டி, பயிர்பச்சைகளைக்  காக்கும்  இயற்கை முறை  :

1. புங்க மரத்து  இலை     (பசுமையான  இலை )  ( புங்கன் ) :  ஒரு  கிலோ
2. வேப்பமரத்து  இலை ( வேப்பிலை ) : ஒரு கிலோ .
3. அகத்தி  இலை  : ஒரு கிலோ .
4. சுத்தமான  மஞ்சள்  தூள்  : 200 - 250  கிராம்

மேற்கண்ட  நான்கையும்  நன்றாக  மை  போல  அரைத்து ,
ஐம்பது  - அறுபது  ( 50  - 60  ) லிட்டர்  தண்ணீரில் , நன்றாகக்  கரைத்து , தெளிப்பான்  (  sprayer ) மூலமாக , பயிர்  செய்யப்பட்டிருக்கும்  வயலின்  ஓரப்  பகுதி ( outer  border )  களில்  வளர்ந்திருக்கும் மற்ற  மரஞ்செடிகொடிகளின்  மீது  தெளித்து  விடவேண்டும் . ஓரப்பகுதிகளில்  மற்ற  செடிகொடிகள் எதுவும்  இல்லாவிட்டால் , ஓரப்பகுதியில்  இருக்கும்  பயிர்ச்செடிகளின்  மீதே  தெளித்துவிடலாம் .

இந்த  கலவை , பாலைவன  வெட்டுக்கிளிக்  கூட்டத்தைக்  ( Locust Swarm ) கண்டிப்பாக  முழுமையாக  விரட்டிவிடும் .

மற்றபடி , இரசாயன மருந்துகளைப்  பயன்படுத்துவது ,  அல்லது , சிலவகை இலை தலைகளைக்  கொண்டு  புகைபோடுவது  ஆகிய  இரண்டும்  மிக  மோசமான  பக்கவிளைவுகளை  ஏற்படுத்துமே  தவிர , வெட்டுக்கிளிகளை  விரட்டாது .(நான்  பொறுப்பிலிருக்கும்  அமைப்பு  கண்டறிந்த முறை  )
Arul Kumar SP

#foodsecurity
#DesertLocus

1 கருத்து:

  1. இது நல்ல வழிமுறையாக, எதிர்வினை இல்லாத வழிமுறையாகத் தெரிகிறது.

    பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!