20 ஜூன் 2020

Depression : பகுதி 2

Depression : பகுதி 2 

மன அழுத்தம் (depression)  என்றால்  என்ன? 

வாழ்க்கையில் தோல்விகளை எதிர்கொள்ள தைரியம் இல்லாமல், காதல் தோல்வி , கடன் பிரச்சனை, தேர்வில் தோல்வி, அம்மா அப்பா அடித்தார், திட்டினார், எதிர்பார்த்தது நடக்க இல்லை எனும் காரணங்களால் உருவாகும் திடீர் கவலைகள் அதனால் சட்னு முடிவெடுத்து தற்கொலை செய்வது , பாலத்தில் குதிப்பது எல்லாம் Depression 
என புரிந்து கொண்டு இருக்கின்றார்கள் 

இந்த மாதிரி கவலைகள் வேறு...!  Depression வேறு..! கவலைகள் தற்காலிகமானது.  இவ்வாறான கவலைகளுக்கு மனதில் வைத்திருக்காமல் அந்த நிமிடம் யார் கூடவாவது பிரச்சனையை பகிர்ந்து கொண்டால்  ( பலருக்கு )மனம் அமைதியாகி விடும். சிலருக்கு அவர்கள் வளர்ந்த சூழல் தோல்விகளை அனுபவ பாடமாக கற்று கொடுக்கவில்லை என்றால் தற்கொலை உணர்வு தோன்றும். 

▪️ ஒருவருக்கு Depression நோய் பல காரணங்களால் உருவாகும். 
 

💚 நெகட்டிவ் திங்கிங் மட்டுமே ஆக்ரமித்து இனி நான் ஒண்ணுமே இல்லை, நான் ஒண்ணுக்கும் லாயக்கில்லை, ஒதுக்கப்பட்டேன் எனும் வெறுமை உணர்வு, இந்த உலகத்தில் எனக்குன்னு யாருமே இல்லை, யாருக்கும் நாம் தேவையில்லை தனித்து போனேன், எனக்கு மட்டும் தான் பிரச்சனை, வலி,வேதனை என்றுணர்ந்து அதை ஆழ்மனம் நம்ப ஆரம்பிக்கும். 

 💚 ஓய்வு இல்லாத அதிக வேலை, ஸ்ட்ரெஸ், ஒரே மாதிரியான வாழ்க்கைமுறை, மனம் விட்டு   பேச யாருமில்லாத நிலையில் , திறமைகளை வெளிக்காட்டிடமுடியாத விரக்தி மனநிலை..! 

💚 வயதானவர்களுக்கு யாருமில்லை எனும் தனிமை உணர்வு, நோய்களின் பக்க விளைவாகவும்  மன அழுத்தம் உருவாகும். 

💚 நாள் பட்ட நோய்கள் வலி நிவாரணிகளாகும் மருந்துகளும் மன அழுத்தத்தை உருவாக்கும்.

💚 பொதுவா பெண்களுக்கு மாதாந்திர பிரச்சனை நேரம், கர்ப்பகாலத்தில், பிரசவமான பின், குழந்தைகளுக்கு பால்கொடுக்கும் தாய் மார்கள், 
மெனோபாஸ் காலத்தில், என ஒவ்வொரு காலத்திலும் மனஅழுத்தம் உருவாகும். ஏதன் காரணத்தினால் உருவாகுமோ அதன் கவனம் மாறும் போது காணாமலும் போகும். சிலருக்குள் மறைந்து இருந்து ஆபத்தாக வெளிப்படும்.  

💚 தொடர்ந்து கர்ப்ப தடை மாத்திரைகள் பயன்படுத்துவோருக்குள் உருவாகும் ஹார்மோன்கள் மாற்றம் மற்றும் மனச்சோர்வு நாளடைவில் Depression  ஆக மாறும் வாய்ப்பும் உண்டு. 

💚 சிலருக்கு பரம்பரை, முன்னோர் சார்ந்தும்  தொடரும்..! 

▪️கேன்சர் வந்தால்  ஒன்று, இரண்டு, மூன்று , நான்கு கட்டம் போல் Depression க்கும் கட்டங்கள் உண்டு. இவர்களின் உணர்வு நிலை ஒரு கேன்சர் நோயாளியின் உடல் செல்களை ஊடுருவும் புற்றை போல் ஆபத்தானது. ஒருத்தருக்கு Depression பாதிப்பு இருக்கலாம் என்பதை இரண்டாம் கட்டத்தில் சில அறிகுறிகளை கொண்டு குடும்ப உறவுகள் புரிந்து கொள்ள முடியும். 

🔹 எதிலும் ஈடுபாடு ஆர்வமில்லாத ஏனோ தானோ  செயல் பாடுகள், தன்னில் தானே அக்கறை இல்லாத மேம்போக்கு தனம், தன்னிரக்கத்தில் உடலில் இல்லாத வலிகள் உருவாகும். 

🔹 எதுக்கெடுத்தாலும் பயம், தயக்கம், அதிக தூக்கம், தூக்கம் இன்மை,சட்னு கோபப்படுதல், எரிந்து விழுதல், நிதானம் இழத்தல், உணர்ச்சி வசப்படுதல், அழுதல், தன்னை பத்தி மற்றவர்கள் பேசுவதாக கற்பனை செய்தல் என பலவிதங்களில் வெளிப்படும் 

🔹 கொலை, தற்கொலை உணர்வுகள் இதனைச் செய் … அந்த பாலத்தில் குதி..,கத்தியால் குத்து.. இப்படி செய்…. எனும் உள்ளுணர்வு தூண்டப்படும். சிலர் தன்னையும் மற்றவர்களையும் காயப்படுத்திடவும் செய்வார்கள்.( இப்படியான சிக்கலான சிலரை நான் வீட்டில் பாதுகாத்துள்ளேன்) 

🔹 இவ்வாறான உணர்வுகள் தோன்றும் போது தன்னை தானே தனிமைப்படுத்தி தான் செத்து போனால் எல்லாம் சரியா கிரும், அது தான் சரியான முடிவு என ஆழ்மனம் சொல்லும் போது அவர்களின் இந்த மாற்றம் உணராத குடும்ப உறவுகள், நண்பர்கள் இவர்களின் இந்தமாற்றத்தைக் குறைகூறத் தொடங்குவார்கள். அது.பாதிக்கப்படடவரின் மன அழுத்தத்தை இன்னும்  
அதிகரிக்கும்.  அதனால் குடும்ப உறவுகள், நண்பர்களுடன் பேசுவதும் குறையும்.  

🔹 இதுவெல்லாம் ஒரே நாளில் மாறாது. உள்ளுக்குள் மறைந்து. ஒவ்வொரு பிரச்சனையின் போதும் படிப்படியாக வெளிப்படும். ஆனால் குறை அவர்களிடம் இல்லை எனும் உண்மை உணராத  குடும்ப உறவுகளும் சமூகமும் அவர்களுக்குள் உருவாகும் உளவியல்  போராட்டத்தை அசட்டை செய்து உயிரிழப்புக்கு தூண்டுகோலாய் மாறி விடுகின்றார்கள் 

🔹 மூன்றாம் கட்டத்தில் Depression  நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றார் என்பதை உறவுகள், நண்பர்கள் வெளிப்படையாக  உணர்ந்து கொள்ள முடியும். சிலர் கேலி கிண்டல், கௌரவம் என தங்களை ஒதுக்கி கொண்டாலும் அவர்களின் வழக்கத்துக்கு மாறான  செயல் பாடுகளில் இருக்கும் வித்தியாசம்  Depression நோய் குறித்த புரிதல்  கொண்டவர்களால்  உணர்ந்து கொள்ள முடியும். 

🌻  35  வயதுக்கு பின் பல பெண்களுக்கு வரும் இன்னதென உணராத வலிகளுக்கு பின் Depression  ஆரம்ப அறிகுறி இருக்கும். உடல் பாகங்களில் வலிகள் எதனால் என்று மருத்துவர் கண்டு பிடிக்கல்ல.. ஸ்கேன் , எக்ஸ்ரே, Cd ஸ்கேன். MR  எல்லாமே நார்மல்  என்றாலும் உடலில் தொடரும்.ஊமை வலிகள், சோர்வு, சோகம், அழுகை, பச்சாதாபம் என ஒதுங்கி இருத்தல், எதிலும் பற்றும், ஆர்வமும் இல்லாத அறிகுறிகள் வெளிப்படும் என்றால் கவுன்சிலிங போவது நல்லது..! 

வீட்டில் இருக்கும் பல பெண்களுக்கு இது கடுமையான பின் விளைவை தரும். அது வரை தன்னை சுற்றி சுழன்ற வீடெனும் உலகம் பிள்ளைகள் வளர்ந்து அவரவர் விருப்பில் வாழ அம்மா நீ சும்மா இரு.. உனக்கொன்றும் தெரியல்ல எனும் வார்த்தைகளில் இனி நான் இங்கே தேவையில்லை எனும் இயலாமை உணர்வில் உடல் வலிகள் உருவாகும். 

எப்பப்பாரு அங்கே வலி.. இங்கே வலி என்று தூங்கிட்டிருக்க என திடடாமல்  என்ன எதுன்னு  நிதானமா கவனிக்கணும். ஆதரவு கொடுக்கணும். சரியான கவனிப்பு புரிதல் இல்லாத போது தான்  நடுத்தர வயதில் பலர் வாழ்க்கை அன்பு ஆதரவு என தடுமாறுகின்றார்கள். குடும்ப வாழ்க்கை சிதறுகின்றன. அன்பும் ஆதரவும் கிடைக்குமிடம் தேடி வாழ்க்கையை சீரழித்து கொள்கின்றார்கள். சிலர் உயிரை மாய்த்து கொள்கின்றார்கள். எல்லாவற்றுக்கும் ( ஆணானாலும், பெண் ஆனாலும்)  இளைத்தவன் மேல் குற்றம் சொல்லும் சமூக கட்டுப்பாடும்,புரிதலும் தன் தவறை உணராது பாதிக்கப்படடவரையே குற்றவாளி ஆக்கி தப்பித்து கொள்கின்றது 

என்ன காரணத்தினால் அல்லது எதனால் குறிப்பிடட நபருக்கு Depression வந்திருக்கின்றது என அந்த நபரின் ஆழ்மனதிலிருந்து வெளி கொண்டு வந்து அதற்கு காரணமானவர்கள், காரணமான பிரச்சனைகளை இனம் கண்டு அவைகளை விலக்கி அதுவெல்லாம் ஒன்றுமில்லை, உன்னால் முடியும் எனும் நம்பிக்கையை உருவாக்கி நாங்கல்லாம் உன் கூட இருக்கோம், நீ தனியே இல்லை என உணர்த்தி மீட்டு எடுக்கும் முயற்சிக்கு மருத்துவர்,  கவுன்சிலிங் தருபவர்,குடும்ப  உறுப்பினர் , நண்பர்கள், வேலை செய்யுமிடம் என ஒரு மெகா டீம் work தேவைப்படும் . 

▪️ Posatpartum depression : 
நான்காம் நிலை ... . தற்கொலை உணர்வு தூண்டப்படுவதால் மிகவும் ஆபத்தானது.  
தன்னை அழிக்க சொல்லும்  ( தற்கொலை ) ஆழ்மன உணர்வோடு போராடி மீண்டு வருவது என்பது கிட்ட தடட எமனுடனான போராட்டம் போன்ற  மிகவும் பொறுமையும் அர்ப்பணிப்பும் தேவைப்படும்.
தற்கொலைகளில் பாதி மன அழுத்த நோயாளிகளால் செய்யப்படுகிறது என்பதால் அவர்கள் உயிர் பாதுகாப்புக்காக  மருத்துவமனையில் தங்க வைத்து சிகிச்சையளிக்க வேண்டியும் இருக்கும்.

Depression மனோதத்துவ மருத்துவர் உடல் ரிதியாக எதிர்கொள்ளும் பிரச்சனைகள், வெளிக்காயங்கள் உளவியல் ரீதியான ஆழ் நிலை ஆற்றுகை படுத்தல்கள மருந்து மாத்திரைகள் பரிந்துரைப்பார்.  .. !

கவுன்சிலிங் செய்பவர் பாதிக்கப்படுபவரின்  பிரச்சனையின் பின்புலம் ஆராய்ந்து உணரும் திறனுடையவராக  தோழமை உணர்வை உருவாக்கி மனதில் அழுத்தும் தரும் அனைத்தையும் வெளிக்கொண்டு வருவார்.  கவுன்சிலிங் எவ்வளவு காலம் எடுக்கும் என்றெல்லாம் வரையறை இருக்காது. அவங்க   ஆழ்மனதோடு பேசி தற்கொலை எண்ணம் வராத வரை அனைத்தையும் எதிர்கொள்ளும்  நிதானத்தோடு மீண்டும்  மீண்டும் சந்திப்பு தேவைப்படும். 

 தாங்கள் என்ன செய்கின்றோம் என்பதை அறியாமல் அவர்கள் செயல் பாடுகள் தொடரும் போது எம்மவர்கள் பைத்தியம், லூசு என்று கிண்டல் செய்கின்றார்கள். 
அவ்வாறில்லாமல் அவர்கள் உணர்வுகளை புரிந்து தகுந்த மருத்துவ ஆலோசனை கொடுக்கும் போது 80% விதமானோர்  பல மாத சிகிச்சை & கவுன்சிலிங்குக்கு பிறகு மீண்டும் அன்றாட வாழ்க்கையை தொடரும் படி குணமடைகின்றார்கள். 

🌻 நான்காவது  கடுமையான கட்டம் வரை பாதிக்கப்பட்டவர்களில் ஒன்றரை முதல் ஐந்து ஆண்டுகள் இடைவெளியில் மீண்டும் அதே Depression  நிலை உருவாகலாம் என்பதால்  தொடர்ந்தும் ஆதரவும் அன்பும் தேவைப்படும் நபராக இருப்பார். குடும்ப உறவுகள் இவர்களை கண்ணாடி பாத்திரம் போல் கையாள வேண்டும் . அன்புக்குரியவர்  எனும் உணர்வை கொடுத்து உயிர்ப்பித்து கொண்டே இருக்க வேண்டும். குணமாகி விட்டார் தானே என்று அசட்டையாக விட்டால் மீண்டும் முன்னரை விட மோசமான மன அழுத்தத்துக்குள் செல்லும் ஆபத்தும் உண்டு. 

Depression  ஆழ்மன அழுத்தத்துக்கு நல்ல தூக்கம் தேவை.மாத்திரை பரிந்துரைத்தால் ஒரு தடவை அதன் பக்க விளைவுகளை வாசித்து பின் பாவியுங்கள்.மனோதத்துவ மருத்துவர் உடல் எதிர்கொள்ளும் நோய்க்கும் நல்ல தூக்கத்துக்கும் மருந்து தருவார் 

ஆனால்.... சிலருக்கு அவர்கள் உட்கொள்ளும் மருந்தே மன அழுத்தத்தை அதிகமாக்கும். அவங்க Depression லிருந்து வெளி வரணும், நல்லா தூங்கணும், உள்ளமும், உடலும் ரிலாக்ஸ் ஆகணும் என தரும் மாத்திரை பின் விளைவுகளை வாசித்து பாருங்கோ..தலைவலி, உடல் பருமன், எப்போதும் தூங்கி வழிவது என தன்னில் அக்கறை இல்லாத ஒரு வித சலிப்பு உணர்வாய் பற்றற்ற வாழ்க்கையில் சோர்வு எல்லாம் சேர்ந்து தற்கொலைக்கு கொண்டு சேர்க்கும்.

Depression மனநோய் என அவமானமாகப்  நினைக்காமல் மற்ற நோய்களைப் போல் ஒரு நோய்தான் என்று ஏற்றுக்கொள்ளும் பக்குவம் ஒவ்வொருவருக்கும் வரும்வரை தற்கொலைகளை நாம் குறைக்க முடியாது. உங்கள் குடும்பத்தில் மேலே சொன்ன அறிகுறிகள் யாருக்காவது தென்பட்டால் உடனடியாக ஒரு மனநல மருத்துவரிடம் அழைத்துப் போங்கள். இந்த சமூகம் சொல்பவற்றைவிட உங்கள் உறவினரின் வாழ்க்கை முக்கியமென நம்புங்கள்.


Nisha 
20.06.2020 


முதல் பகுதியும் படியுங்கோ


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!