தமிழக அரசியலின் பின்னணியில், தமிழ்நாட்டில், 1,018 இடங்களுக்கு தமிழில் பேசும் விதத்தில் ஆங்கிலத்தில் எழுதும் பெயர் மாற்றும் செயல்முறை தமிழ் மொழி வல்லுநர்கள் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், ஏப்ரல் 1 ம் தேதி மாநில அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டு ஜூன் 10 இன்று முதல் அமுலுக்கு வந்திருக்கின்றது.
அதன் படி இனிமேல்...!
• Tamil - ‘Tamizh’ -
• Madurai - Mathurai.
• Coimbatore- Koyampuththoor
( கோயம்புத்தூர்)
• Vellore ( வேலூர்) - Veeloor( வீலூர்)
மற்றும் சென்னையின் சின்னமான புறநகர
• Mylapore - Mayilaappoor( மயிலப்பூர்)
• Trichy - Thiruchirapalli
என்று மாற்றப்படும்.
ஏற்கனவே பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து உலக நாடுகள் தடுமாறுகி ன்றன.எதிர் காலத்தில் கொரோனா Virus பரவலால் பெரும் உயிரிழப்பும் , கடும் உணவு பஞ்சமும் ஏற்படும் என ஐ நா வும் உலக உணவு நிறுவனமும் எச்சரிக்கின்றனன.வளர்ந்த நாடுகளும், ஏழை நாடுகளும் மக்களை தற்சார்பு வாழ்க்கைக்கு தயார் படுத்துகின்றன, 40 வருடங்கள் தொடர் யுத்தத்தால் சிதைந்து போன இலங்கை கூட சுதாகரித்து வீட்டு தோட்டம் விவசாயம் என்று மக்களை ஊக்குவிக்கின்றன.
ஆனால் தமிழ் நாட்டில் ... ?
தமிழ் நாட்டில் உற்பத்திகள் நிறுத்தப்பட்டு வேலையில்லாமல் பலர் அன்றாட உணவு தேவைக்கே சிரமப்படுகின்றார்கள். Covid 19 தொற்று நோயாளர்கள் எண்ணிக்கை அசூர வேகத்தில் மேலேறுகின்றது.
மாநிலத்தின் அனைத்து நிர்வாகத்தின் ஆற்றல்களும் கோவிட் -19 நோய் குறித்த எச்சரிக்கை பாதுகாப்பு, தடுப்புமுயற்சிகள், பாதிக்கப்படும் மக்களின் அத்தியாவசிய தேவைகள், உணவு திடடமிடல்கள், சேமிப்புகள் ஆக்கபூர்வமான செயல்பாடுகள் போன்றவைகளை குறித்து அக்கறையோடு செயல் படவேண்டிய இக்கட்டான நேரத்தில் இந்த பெயர் மாற்றங்களால் அதிகாரிகள் அனைவரையும் பெயர்-பலகைகளை மாற்றுமாறு வலியுறுத்த படுவார்கள் என்றால் அரச அதிகாரிகளின் கவனம் திசை திரும்பும்.
தேவையில்லாத பொருள், பணசெலவீனங்கள், வீணாகப்போகும் மனித ஆற்றல் சக்தி மற்றும் கால விரயங்கள் குறித்தும் திருத்தம் தேவைப்படும் அனைத்து இடங்கள், பெயர்பலகைகள் உதாரணமாக #ஆதார் அட்டைகளையும் அதற்கான செலவுகளையும் கற்பனை செய்து பாருங்கள்!
பொருளாதாரம் ஏற்கெனவே சீரற்று இருக்கும் இந்த தருணத்தில் இந்த செலவுகள் தேவை தானா?
தமிழ் நாட்டு அரசின் இந்த செயலானது மக்கள் இருக்கும் அபாய நிலை உணர்ந்து விட கூடாது, சுயமாக சிந்தித்து விட கூடாது எனும் நோக்கத்தில் கோவிட் -19 ஐ அரசு நிர்வாகம் கையாள இயலாமையிலிருந்து கவனத்தை திசை திருப்பி உணர்ச்சிபூர்வமான பிரச்சினையில் கவனம் செலுத்த வைக்க முயற்சிப்பது தெளிவாக தெரிகின்றது "எப்படி எதை செய்தால் தன் மக்களை உணர்ச்சி குவியலில், போராட்ட மூவ்மெண்ட்ஸில் வைத்திருக்க முடியும் எனும் நாடித்துடிப்பு தெளிவாக தெரிந்தே தமிழ் நாட்டு அரசு செயல் திட்ட்ங்களை அறிவிக்கின்றது.
அதில் அடுத்த ட்ராமாவாக கோவிட் நோயாளர்கள் அதிகரிக்கும் போது தமிழக அரசு இடங்களின் பெயர்களை மாற்றும் திட்டத்தை அறிவித்து இருக்கின்றது.
பெரும்பான்மை மக்களும் கண்டிக்காமல் வழக்கம் போல் நகைசுவை பதிவுகளும் மீம்ஸ்களும் வெளியிட்டு இந்த பெயர் மாற்றத்தின் பின்னணியில் என்ன நோக்கத்தில் அரசு அறிவித்ததோ அதில் வெற்றி பெற செய்து கொண்டிருக்கின்றார்கள்🖤
இந்தியாவை பொறுத்தவரை ஜோதிடம், வாஸ்து என ஊர்கள் பெயர்களை அடிக்கடி மாற்றுவது புதிது இல்லை.ஆனால் எந்த நேரத்தில் எதை செய்யணும்,செய்யக்கூடாது எனும் வரையறை உண்டு. Lockdown காலத்திலும் தேர்வு வைப்போம் எனும் அறிவித்தல் போலவே இந்த அறிவிப்பும் மக்களுக்கு உள்ள யதார்த்த நிலை, சூழலை உணர்த்தாமல் அரசு நிர்வாகத்தின் தவறுகளை மறைக்க மக்களை அவர்கள் சிந்தனையை திசை திருப்பி விட்டிருக்கின்றது.
அரசின் இவ்வாறான செயல்பாடுகள் தவிர்க்கப்பட வேண்டியது மட்டுமல்ல தடுக்கப்பட வேண்டியதுமாக இருக்கின்றது.
Face book link : தடம் மாறும் அரசின் பெயர் மாற்றம் ஏனோ?
தேவையில்லாத வேலை. இப்படி ஏதாவது அடிக்கடிச் செய்வதே இவர்களுக்கு பழகி விட்டது.
பதிலளிநீக்குபிம்ஸ் - மீம்ஸ்... ?