ஆடு மேய்க்கும் ஆனந்தன்
ஆட்களை ஏய்ப்பதில் வல்லவனாம்.
பொய்கள் பலவும் தினம் சொல்லி
போக்குக்காட்டி சிரிப்பானாம்.
போக்குக்காட்டி சிரிப்பானாம்.
புலி வருது, புலி வருது என்றே
தினமும் கத்துவானாம்
தினமும் கத்துவானாம்
கேட்டு பயந்த மக்களெல்லாம்
பதறி ஓடி ஒளிவதனை.
பதறி ஓடி ஒளிவதனை.
கையைக்கொட்டி ஆனந்தன்
தினமும் பார்த்து சிரிப்பானாம்.
தினமும் பார்த்து சிரிப்பானாம்.
தினமும் சொன்ன பொய்யதனால்
தீங்கானவனாய் தெரிந்தானாம்.
தீங்கானவனாய் தெரிந்தானாம்.
ஒரு நாள் புலியொன்று நிஜமாக
புதரில் ஒளிந்ததைக்கண்டானாம்.
புதரில் ஒளிந்ததைக்கண்டானாம்.
ஐயோ புலி புலி என்றானாம்.
யாரும் அவன் சொல் கேட்கல்லையாம்.
யாரும் அவன் சொல் கேட்கல்லையாம்.
தினமும் பொய் பல பேசியதால்
இதுவும் பொய் என்றே நம்பினராம்.
இதுவும் பொய் என்றே நம்பினராம்.
பொய்யே நாளும்பேசியதால்
மெய்யும் ஒரு நாள் பொய்யாச்சே
மெய்யும் ஒரு நாள் பொய்யாச்சே
இனி மேலும் நாமும் பொய் பேசோம்.
தினமும் மெய்யே பேசிடுவோம்.
தினமும் மெய்யே பேசிடுவோம்.
நிஷா
நல்லது சகோதரி...
பதிலளிநீக்குஅரசியலில் பொய்தானே இப்போது கோலாட்சுகின்றது புலிக்கதை பேசி)))
பதிலளிநீக்குஉண்மைகள் இப்போது உறங்கு நிலையில்.
பதிலளிநீக்குஅருமை
பதிலளிநீக்குஅருமை சகோதரியாரே
நானும் பாடி ரசித்தேன்..
பதிலளிநீக்குமிகவும் நன்றாக இருக்கிறது சகோ/நிஷா!!! உண்மையும் இதுதான்!!!
பதிலளிநீக்குஅட எங்கக்கா சிறுவர் பாடல் சிறப்பாக எழுதியிருக்காங்க...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்...
அடிக்கடி வலம் வரட்டும் சிறுவ்ர் பாடலகள்.
மிகவும் எளிய வரிகளாலும் சந்த அழகுடனும் நீதியுடனும் சிறுவர் பாடல் அருமையாக உள்ளது. பாராட்டுகள்மா. தொடர்ந்து எழுதுங்கள்.
பதிலளிநீக்குnice work
பதிலளிநீக்குwrite on this genre
மகளிர் தினத்தன்று மகளிர் ஆண்களுக்கு கிப்டு தரணும் என்ற வழக்கம் உண்டு என்பது உங்களுக்கு ஞாபகம் இருக்கும் என நினைக்கிறன் மீ வெயிட்டிங்க
பதிலளிநீக்கு